நீ
கொடுக்கப்படாத சிலமுத்தங்களை
நினைத்துப் பார்க்கலாம்
உனக்கான ஒன்றை
தேடத்துவங்கலாம்
மீண்டும் மீண்டும்
வல்லூறுகளின் பிடியில்
சிக்கிக் கொள்ளலாம்
தனித்த இரவொன்றில்
உன் மரணத்தை பரிசளிக்க
மனம் பிறழ்ந்தவனாய்
கடவுளிடம் உரையடிக்கொண்டிருக்கலாம்
காத்திருத்தலின் முடிவில்
அடையாளம் காணலாம்
புன்னகை சிந்திடும்
பிடிவாத மழலையாய் என்றுமே உன்னை
கென் உனக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகள்.
பண்புடன் குழும நண்பர்கள் சார்பாக
பாண்டித்துரை


அன்பு பாண்டி
பிறந்தநாள் வாழ்த்தை தொலைபேசியிலும் குழுமத்திலும் வலைப்பூவிலும் கிடைக்கப்பெற்று மிக மகிழ்ந்தேன்.
மிக்க நன்றிகள்.
-கென்