|
எனது ப்ரத்யோகமான pandiidurai@yahoo.com மின்னஞ்சலில் என்னுடைய http://pandiidurai.wordpress.com வலைப்பக்கத்தையும் என்கிற வலைப்பக்கத்தையும் இணைத்திருந்தேன்.
எழுத்தாளர் சாருவிற்கு சில மின்னஞ்சல்கள் அனுப்பத்தொடங்கியதை தொடர்ந்து அவ்வளவாக பதிவுசெய்யமால் இருந்த எனது நகுலன் வலைதளத்தை பின்னினைத்து நான் வலைதளத்தில் படித்த ஒரு கட்டுரையை நீங்கள் படித்திருக்கூடும் என்று சொல்லி அனுப்பியிருந்தேன்.
சமீபகாலமாக சாருஆன்லைன் மாற்றம் செய்தபின்னர் வலைதளம் பற்றிய பதிவுகளை சாரு பதிவுசெய்வதால் எனது நகுலன் வலைதளம் கவனிக்கப்படக்கூடும் என்பதே (சாருவிற்கு எழுத்தளர் நகுலன்மீதான ஈடுபாடு பலரும் அறிந்த ஒன்றே). அப்படி நான் மாற்றம் செய்து பின்னினைத்ததற்கு முதல்நாள்தான் முகமறியா நண்பன் கென்னின் பிறந்தநாள்.
சாருவிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கு பின்னினைத்துள்ளேன்.
Re: hope charu
Saturday, 28 June, 2008 07:41
From: “charunivedita” <charunivedita@charuonline.com>
To: pandiidurai@yahoo.com
pesuvatharku niraiya irukkirathu….is this yr poem? pl call me
xxxxxxxxxx
எல்லாம் அமையவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா. அன்று எனக்கு அப்படித்தான் போல, எனது முதலாளி பணிநிமித்தம் மலேசியா செல்ல நான் மட்டும் அலுவலகத்தில் இருந்ததால் உடனே சாருவிற்கு தொடர்பு கொண்டேன்.
சாருவிடம் நான் பேசியபொழுதெல்லாம் ஐயா என்றே விளித்தேன் எனக்கு சங்கடமாகவே இருந்தது. சிங்கப்பூரில் நான் இப்படி பழக்கப்பட்டுவிட்டேன். உங்களின் கவிதைகளை பற்றிய பதிவினைதான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றார். “கென்“ கவிதை பற்றி பேசியபொழுது என்னுள் பதட்டம், என் கவிதையாக பாவித்தே என்னிடம் பேசியதும் உடனே இல்லை ஐயா அவை எல்லாம் கென்னின் மடிநிறைய கற்கள்(மின்) கவிதைதொகுப்பிலிருந்து நான் தேர்ந்தெடுத்து கென்-னை வாழ்த்திய வரிகள் என்றேன். (அப்படி சொல்லமல் விட்டிருந்தால் அன்றையபொழுதில் கென் தலைப்பிலான கவிதை பாண்டித்துரையின் கவிதை என்றே வெளிவந்திருக்கும்)
அப்ப “பேசுவதற்கு நிறைய இருக்கிறது“ கவிதை என்று வினவ
அது என்னுடைய கவிதை என்றேன்.
“பால்யத்தின் கனவுகள் காலாவதியாகவிட்டன“ கவிதை என்று மீண்டும் வினவ
அதுவும் என்னுடைய கவிதை என்றேன்.
இரண்டு கவிதையும் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றார். பின்னர் உங்களின் கவிதைக்கு கீழே உங்களின் பெயரினை போட்டுவிடுங்கள் அப்பொழுதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் வராமலிருக்கும் என்றார், சரி என்றேன். (பேசிமுடித்தவுடன் உடனே எனது கவிதைகளின் கீழே எனது பெயரினை பதிவுசெய்தேன், சிறுகதைகளில் சிலவற்றிற்கு மட்டும் முன்பே பதிந்திருந்தேன்) பின்னர் கென்னின் கவிதைகளை அனுப்பவியலுமா என்றார். பின்னர் நகுலன் வலைதளப்பக்கத்தில் உள்ள அழகர்சாமி பற்றிவிசாரித்தார் குங்குமம் இதழில் வெளிவந்தது, எனக்கு அவரைபற்றி தெரியாது என்றுச் சொல்லி அந்த வலைப்பக்கத்தின் நோக்கத்தினை எடுத்துக்கூறினேன். (அதுவரையில் இரண்டுபதிவுகள்தான் நான் பதிவுசெய்திருந்தது. நகுலன் வலைதள நோக்கம்பற்றியெல்லாம் அப்பொழுது எழுதவில்லை)
அதவிட நமக்கு வேறவேலை என்னனு நினைத்துகொண்டு அடுத்த நிமிடமே மடிநிறைய கற்களை இறக்கிவைத்தேன், அப்படியே கென்னின் இணையமுகவரியையும் அனுப்பிவைத்தேன். பின்னர் இந்த எண்ணிற்கு எப்பொழுது வேண்டும் என்றாலும் அழைக்கலாமா என்றேன், அழைக்கலாம் என்றார்.
கென்னை தொடர்பு கொண்டு சாருவிடம் பேசியதையும், சாரு உங்களின் கவிதைகள் பற்றி கேட்டதையும் சொல்லி நான் மடிநியை கற்களை அனுப்பிவிட்டேன் என்றபொழுது சாருவிடமிருந்து வந்த மின்னஞ்சலை அனுப்பவியலுமா என்று கேட்டார் சாருவிடம் நான்பேசியதுபற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு அந்த ஒருவரி மின்னஞ்சலை அனுப்பினேன் (அதான்பா மேலே கொடுத்திருப்பது) அத்துடன் சாருவின் தொலைபேசியென்னும்.
சரி நம்மவலைப்பக்கம் பற்றிய செய்தி வரலாம் என நினைத்துக்கொண்டு அன்று விடுமுறை என்பதால் எனது வாரஇறுதிநாட்களுக்கான பயணத்தில் நான். (திங்களன்றே இணையபக்கம் மீண்டுவருவது) . மாலை கென்னிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, பாண்டி charuonline பார்த்திங்களா. “கென்“ கவிதையும் உங்களின் கவிதையும் வந்துள்ளது என்றார், ரொம்ப சந்தோசமாக இருக்கு பாண்டி எல்லாம் உங்களாலதான் என்றார். என்ன கென் எனக்குபோய் நன்றி சொல்லிக்கொண்டு, எல்லாம் உன்னாலதான் உனக்குத்தான் நான் நன்றி சொல்லனும் என்றேன். (கென் என்ற தலைப்பிலானா கவிதையே என்னுடைய பிற கவிதைகளையும் சாரு படிக்க காரணமாக இருந்திருக்ககூடும் என்ற என்னுடைய எண்ணம்). கென்னிடம் விரிவாக பேச நேரமில்லை ஆனால் உடனே charuonline பார்க்கவேண்டி அருகே அலைந்து ஒரு nett caff சென்று charuonline மட்டும் பார்த்துவிட்டுவந்துவிட்டேன். (என் மின்னஞ்சலை திறந்துபார்க்கவில்லை).
மறுநாள் (ஞாயிறு) மீண்டும் கென்னிடமிருந்து அழைப்பு, பாண்டி ரொம்ப சந்தோசமா இருக்கேன் எனக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசினை நீ கொடுத்திருக்கிறாய் என்று, சாருவை சந்தித்ததும் அங்கே எனது நகுலன் பதிவு பற்றி பேசியதும் என்று சில நிமிட உரையாடலில் நான் கென்னிடம் கேட்டது, இதுக்கு முன்னாடி சாருவை நீங்கள் நேரில் பார்த்து பேசியிருக்கிறீர்களா என்று….. phone-ல் பேசினது கூடஇல்லை பாண்டி என்றபொழுது என்னாலும் உணரமுடிந்தது. சரி கென் சாருவிற்கு எப்படி உங்கள் எண் கிடைத்த என்று வினவ, சாரு எனக்கு பிறந்நாள் வாழ்த்து சொல்லியதால் நான்தான் நன்றிசொல்ல நீங்கள் கொடுத்த எண்ணில்தொடர்பு கொண்டேன் அதன்பின்னர் நடந்ததுதான் இவைஎல்லாம் என்றார்.
பாண்டி இன்று charuonline பாருங்க என்றார் கென். ( கென் அனுமாதித்தது இயல்பாக எல்லோராலும் அனுமானிக்ககூடியதே ஆனால் அப்பொழுது அதன் வீரியத்தை எவராலும் அனுமானித்திருக்க முடியாது). இல்ல கென் அக்காவீட்டில் இருக்கிறேன் மாலைதான் என்னால் செல்லமுடியும் என்று, மாலை இணையதளத்திற்கு சென்று நான் திறந்தது படித்தவுடனே அவ்வளவு மகிழ்ச்சி உடனே கென்னை தொடர்புகொண்டேன் ஆமா பாண்டி எனக்கே என்னுடைய சில நண்பர்கள் தொடர்புகொண்டு சொன்னபின்னாடிதான் போய்பார்த்தேன். உண்மையிலே பாண்டி இது எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் பாண்டி நன்றி என்றபொழுது, இல்லகென் நான் தான் உனக்கு நன்றிசொல்லனும் என்றேன் (கென்னின் மகிழ்ச்சியினை நானும் முழுமையாக எடுத்துகொண்டதே காரணமாக இருக்ககூடு |