
வரும் 24ல் சிங்கப்பூரில் “தனி” குறும்படம் வெளியீடும் ஒளிப்பதிவாளர் செழியனின் சிறப்புரையும்
6 10 2009மறுமொழிகள் : 6 மறுமொழிகள் »
குறிச்சொற்கள்: குறும்படம், செழியன்
வகைகள் : அறிவிப்பு, அழைப்பிதழ், கவிதை, குறும்படம், சினிமா, திரைப்படம், நட்புக்காக, நிகழ்வு, புகைப்படம்
இயக்குனர் சேரன் சிங்கப்பூர் வருகை 27.09.09
25 09 2009கவிமாலை விருது விழா
களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம் விக்டோரியா ஸ்ட்ரீட் சிங்கப்பூர்
காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 5.30 மணி முதல்
சிறப்பு விருந்தினர்
சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்

சிறப்புரை
தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்

♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு” (நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)
♪ ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு “ஐந்து பவுன் தங்க பதக்க விருதளிப்பு” (நிதி ஆதரவு தமிழத் தொண்டர் திரு.நாகை தங்கராசு அவர்கள்)
♪ கவிமாலைக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு ”பொன்மாலைப் பூக்கள்” நூல் வெளியீடு (நிதி ஆதரவு அருளாளர் திரு ஆறுமுகம் செட்டியார் அவர்கள்)
அனைவரையும் அனுப்புடன் அழைக்கும்
கவிமாலைக் கவிஞர்கள்
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு சிங்கப்பூர்
மறுமொழிகள் : Leave a Comment »
வகைகள் : அறிவிப்பு, அழைப்பிதழ், கவிதை, சினிமா, திரைப்படம், நிகழ்வு
அநங்கம் இதழில் சில கவிதைகள்
20 09 2009பாண்டித்துரை கவிதைகள்

1.
முதலாம் திரிதலுக்கு பின்பு
மறக்க நினைத்தாலும்
இவர்கள் விடுவதாயில்லை
என்ன செய்ய
எழுதிச் செல்வதை தவிர்த்து
2.
கொல்லென சிரிக்கும் கூட்டமும்
அந்த மனிதரும்
இங்குதான் இருக்கிறார்கள்
எங்காவது சந்திக்க நேர்ந்தால்
பிட்டத்தை முகத்தில் காட்டி
சிரித்துவைப்பேன்
3.
ஒன்று மட்டும்
புரிகிறது
இன்னொன்று
புரியவில்லை

4.
இவர்கள்
எழுதுவதற்கு
ஒன்றும் இல்லாத போது
தேவைப்படுகிறது
__மையும்
இன்னபிற மனிதர்களும்
5.ஒவ்வொன்றையும்
ஞாபகபடுத்த வேண்டியிருக்கிறது
ஒருநாள்
சாவதற்கும்
ஓவியம்: உமாபதி
நன்றி : அநங்கம் – மலேசியா (ஆகஸ்ட் 2009)
அநங்கம் இதழ் பற்றிய தொடர்புக்கு : bala_barathi@hotmail.com
மறுமொழிகள் : Leave a Comment »
வகைகள் : அநங்கம், கவிதை, சிற்றிதழ், நன்றி, மனவெளியில்

அண்மைய மறுமொழிகள்