welcome croda

7 11 2009

எனது இளைய சகோதரன் இரா.சக்திவேல்  croda Singapore pte ltd – ல் பணிபுரிய இணைந்ததை வரவேற்று croda-வின் இதழான croda way – ல் இரா.சக்திவேல்-i வரவேற்றுள்ளனர்.

sak croda

croda-வில் புதிதாக பணிபுரிய இணைபவர்களை இந்த இதழ் வழியே  croda வரவேற்று உற்சாகப்படுத்துகிறது.

 

நன்றி: croda way





அநங்கம் இதழில் சில கவிதைகள்

20 09 2009

பாண்டித்துரை கவிதைகள்

 134616

1.

முதலாம் திரிதலுக்கு பின்பு
மறக்க நினைத்தாலும்
இவர்கள் விடுவதாயில்லை
என்ன செய்ய
எழுதிச் செல்வதை தவிர்த்து
2.

கொல்லென சிரிக்கும் கூட்டமும்
அந்த மனிதரும்
இங்குதான் இருக்கிறார்கள்
எங்காவது சந்திக்க நேர்ந்தால்
பிட்டத்தை முகத்தில் காட்டி
சிரித்துவைப்பேன்

 

3.

ஒன்று மட்டும்
புரிகிறது
இன்னொன்று
புரியவில்லை

 134315

4.

இவர்கள்
எழுதுவதற்கு
ஒன்றும் இல்லாத போது
தேவைப்படுகிறது
__மையும்
இன்னபிற மனிதர்களும்

 

5.ஒவ்வொன்றையும்
ஞாபகபடுத்த வேண்டியிருக்கிறது
ஒருநாள்
சாவதற்கும்

ஓவியம்: உமாபதி

நன்றி : அநங்கம் – மலேசியா (ஆகஸ்ட் 2009)

அநங்கம் இதழ் பற்றிய தொடர்புக்கு : bala_barathi@hotmail.com





சிங்கப்பூர் – சில நிகழ்வுகள் – 3

8 08 2009

உயிர் எழுத்து

(ஏப்ரல்-09)

 

படைப்பிலக்கியத்தை முதன்மை படுத்தி தமிழகத்திலிருந்து வெளிவரும் “உயிர் எழுத்து” இதழின் ஆசிரியர் எழுத்தாளர் சுதீர் செந்தில் அயலக வாசிப்பாளர்களை அதிகரிக்க வேண்டிய எண்ணத்தில் ஒரு வார மலேசிய சுற்றுப்பயணமாக ஏப்ரல் மாதம் வந்திருந்போது ஒரு நாள் மாலைபொழுதை சிங்கப்பூர் வாசகர் வட்டம் நண்பர்களுகளுடன் ஆங் மோ கியோ பொது நூலகத்தில் பகிர்ந்துகொண்டார்.

 

“உயிர் எழுத்து” வெளிவந்ததன் காரணம், அதன் பின் திறந்துகொண்ட சிறுகதைக்கான வெளி, இதன் வழியே இன்னும் பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க சிறந்த எழுத்தாளர்களை நாம் கண்டையக்கூடும் என்பதையும் சொல்லி, இதழ் பற்றிய வாசக எண்ணங்களை அறிவதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

 

கவிதை குறித்தான கருத்தரங்கில் கலந்துகொள்ள ஆர்வமாக இருப்பதாகவும், இன்று எழுதிக்கொண்டிருக்கும் கவிதைகளுக்கு சமீபத்தில் மறைந்த கவிஞர் அப்பாஸ்-ன் பங்களிப்பு மிக அதிகம் என்றுரைத்தார்.

 

நிகழ்வில் மலேசிய மூத்த எழுத்தாளர் சை.பீர்முகம்மது உடன், சிங்கப்பூர் எழுத்தாளர் மற்றும் வாசகர்கள் என மிகச் சிலரே கலந்துகொண்டது வாசகர் வட்ட வாசிப்பின் தீவிரத்தை குறைப்பதாகவே தோன்றியது.