100-வது பதிவு

அறிவுநிதி,  அரவிந்தன, அய்யப்பமாதவன்

 

இவர்களைபற்றி என்ன சொல்லப்போகிறேன் என்பது இந்தப்பதிவின் நோக்கமல்ல.

  இது என்னுடைய 

 

    100– வது பதிவு

 

 

அறிவுநிதி, ( இளமுகில) அரவிந்தன, அய்யப்பமாதவன்

இவர்களுக்கு

 

இந்த பதிவு சமற்பணம்

 

ariv1 

அறிவுநிதி

 

 

சிங்கப்பூர் வந்தபின்புதான் என் எழுத்து கொஞ்சம் பரவலாக்கப்பட்டது. அப்படி எழுதிக்கொண்டிருக்கையில், என் எழுத்தினை புரட்டிப்போட்டு அதன் மறுபக்கத்தை தொடுவதற்கு முதல்காரணம் அறிவுநிதி. ஏதோ ஒன்றை வித்தியாசப்படுத்தி ஒவ்வொருமுறை எழுதியபின் அதை அறிவுநிதியிடம் வாசிக்கும்போது சலனமில்லாமல் அவரை கடந்து செல்ல என் கை பிடித்து முன் செல்லச் சொல்லி கையை கட்டிக்கொண்டு, புன்னகைத்துகொண்டு என்னுள் பிறக்கின்ற ஒவ்வொரு கவிதையிலும் எங்கோ ஓரு இடத்தின் பின் நின்றுகொண்டிருக்கிறார்.

 

cap

(இளமுகில்) அரவிந்தன்

 

என் கவிதைகளில் 10 க்கு 9½ கவிதைகளை, கவிதையை நீ செய்யிறய்யா,  உணர்வா வரணும் என்று என்னுடன் சமரசம் செய்துகொள்ளாமல்  எழுத்துக்களை விமர்சித்து,  பின் உன் முயற்சியை நான் கண்டிப்பாக பாரட்டவேண்டும் என்று என் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்கி, சக நண்பர்களிடம் என்னைபற்றி பரப்பிய பிம்பஙகளுக்காகவாவது ஆக சிறந்த கவிதை அதுவும் (இளமுகில்) அரவிந்தனுக்கு பிடித்த ஒன்றாக எழுதிவிட இன்றும் முயன்றுகொண்டிருக்கிறேன்.

 

copy-of-ca035

அய்யப்பமாதவன்

 

ஒவ்வொரு முறை தொடர்பு கொள்ளும் போதும் ஒலிவழியே செவிப்பறையில் தெரிந்துவிழும் முதல் வார்த்தை தம்பி உற்சாகமா இருக்கியாடா. இப்ப என்ன புதிதாய் எழுதுன, அண்ணன் ஒரு கவிதை சொல்றேன் கேக்கிறியா, பக்கத்தில கோணாங்கி இருக்கிறார் பேசிறியா என்று சொல்லி முடிக்கும் முன்னே கோணாங்கியின் கைகளுக்குள் தொலைபேசியை இணைப்பதுவரை அறிவுநிதி, அரவிந்தனுக்கு அடுத்து நான் எழுதிச்செல்லும்போது அய்யப்பமாதவன் சிறுபுன்னகையுடன் தோன்றி மறைந்து செல்வதுண்டு

 

 

வலைப்பக்கம், நாம் காலண்டிதழ் (நண்பர்களுடன் இணைந்து நடத்தும் இதழ்), பிரம்மா (நண்பர்களுடன் இணைந்த         கூட்டுத் தொகுப்பு) ஒலி96.8, வசந்தம் தொலைக்காட்சி, சில சிற்றிதழ்களில், இணைய இதழ்களில் இடம்பிடித்த கவிதைகள் என்ற உயிர் வலியின் தொடுகைகள் நீள…, சும்மா கலக்கிட்டிங்கபோங்க, பேஸா இருக்கு என்று பலர் சொல்வதை விடுத்து, எங்கோ ஒருவனின் அருகாமையில் அமர்ந்து அவன் கரம்பிடித்து இன்னும் கொஞ்சம் அந்த மௌனத்தை நீட்டிக்கும் எழுத்துக்களை தேடிக்கொண்டிருக்கிறன்.

 

அதே தனிமையில்

அதே மௌனத்துடன்.

 

அடுத்தடுத்த பதிவுகளில்

 

பாண்டித்துரை

 

நன்றி: அறிவுநிதி அரவிந்தன் அய்யப்பமாதவன

3 thoughts on “100-வது பதிவு

  1. suyamariyaadhaikaaran சொல்கிறார்:

  2. suyamariyaadhaikaaran சொல்கிறார்:

    ungal nanbar Ilamukil aravindanin karuthil naan muranpadukiren, sethu paar sudukaadu theriyumenral eppadi, unarndu dhaan kavithai padaikka vendumenraal anaithu kavigalum athanai unarvukalaiyum unarndhu unarndhu … appadi paarthaal oru unarvai nokki valukattaayamaga payanithal kooda seyarkaithaane nanbaa…

  3. ramesh சொல்கிறார்:

    singapore hunger straike vantha ungalukku enna elutha thondrukerathu…….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s