இனிஆரம்பம்

1997ல் நான் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கிறேன். அப்ப எனக்குள் எளிதாக வந்தது காதல்.  இயல்பான ஒன்று எனக்குள் வந்ததில் ஆச்சர்யம் இல்லை.  இரண்டாண்டு நீடித்த என் காதலின் முடிவு தெரிந்தது.  நான் விரும்பிய பெண் என் நண்பனை விரும்பவும் என் நண்பனும் நான் விரும்பிய பெண்னை விரும்பவும் என் காதல் ஒருதலையாகியது.அவள் என் நண்பனை  விரும்ப எனக்கு தெரிந்து ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும். அந்த காரணம் அவனுக்குள் இருந்த எழுத்து மற்றும் பேச்சுத்திறமை.  அந்த காலகட்டத்துல நானும் எழுதனும் பேசனும் என்று ஏங்கியது கிடையாது நிகழ்வுகள் மறக்கப்பட்டதாக……..

2005 ஏப்ரல் மாத காலகட்டத்தில் பெங்களுரில் பணிபுரிகிறேன். ஒருகாலகட்டத்தில்  இரண்டு நாட்கள் ஏகப்பட்ட  பிரச்சினை. எங்க போனாலும் பிரச்சினை.  ஆனால் எல்லாப்பிரச்சினையும் ஆராய்ந்து பார்த்தால் ஒரு காரணமும் இருக்காது. அப்ப ஒரு வாரகாலம் என் மனதில் அதிக உளைச்சல் ஏற்பட்டது. இன்னும் சொல்லணும்னா நான் பைத்தியம் ஒன்றுதான் ஆகவில்லை. அப்ப எனக்குள்ள இருந்த மன உளைச்சல் எல்லாம் என்னையும் அறியாமல் எழுத்தாக வந்தது.

சரி எழுத ஆரம்பிச்சாச்சு அப்புறம் எப்படி என் வளர்ச்சி?

என் நண்பன் பெயர் விஜயகுமார் எங்க இரண்டுபேருக்கும்மிடையில் ஏதோ ஒரு அலைவரிசை ஒத்துப்போனது.  ஆனா? பல அலைவரிசை ஒத்து போகவில்லைனுதான் சொல்லனும். நான் அதை வெளிக்காட்டியதில்லை. என் நண்பனும் என்னை போலத்தானோ!  நான் அவன் நல்லா வரணும்னம் அவன் நான் நல்லா வரணும்னு தான் நினைத்ததுண்டு. என் ஒவ்வொரு கவிதையின் முதல் ரசிகன்.  நான் எழுத ஆரம்பித்து அவனோடு இருந்த 8மாத கால கட்டத்தில் நான் எழுதியதை எல்லாம் கவிதை என்று சொன்னவன் இன்று நான் இணையத்தில் உலவ காரணம் என் இதயமான நட்பே!!

துவக்க நாள் 07-04-2007

இந்த இணையபக்கத்தை

என் நண்பன் விஜயகுமாருக்கும்

இலக்கிய நட்பு  பிசிராந்தையார் கோப்செருஞ்சோழனுக்கும்

மற்றும் உலகம் தழுவிய நட்பிற்கும் சமற்பணம் செய்கிறேன்.

 

நான் எழுத ஆரம்பித்து கொஞ்ச காலம் ஆன பின்புதான் எனக்குள் ஒன்று புலனானது. ஒரு வேளை என் கல்லூரிக் காதல் என்னையும் அறியாமல் என் ஆள்மனதில் பதிந்து இன்று நான் எழுதுவதற்கு காரணமாக இருந்திருக்குமோ என்று?

எழுத ஆரம்பிக்கிறேன் எல்கைகளற்ற  இப்பிரபஞ்சத்தில் மாயமாய்

எல்லாம் மாயை

என்னுள் இருப்பதும்

எழுத்தாய் வருவதும்

இனிஆரம்பம்

நீதிபதிபாண்டித்துரை.

One thought on “இனிஆரம்பம்

  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    கணபதி என் நண்பன்.தன் 23-ம் வயதில் செத்துப்போகப்போவதாகச் சொன்னான். எனது சொந்தந்தில் ஒரு சுமாரான அழகுள்ள தாய் தந்தை இல்லாத நிசவு நெய்யும் பெண் இருந்தள். நான் மாமன் முறை. சொன்னால் கேட்பாள். என்நண்பனை அவளைக்கட்டிக்கொண்டு “அவளுக்காக வாழ்ந்து செத்துப்போ” -என்றேன் நிசவு நெய்து அவனுக்கு சோறுபோட்டாள் இ ரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆனாள். நண்பன் வியாபாரத்தில் ஈடுபட்டு 7-ஆண்டுகளில் சொந்தவீடுகட்டி கண்டசா கர்ர் வாங்கும் அளவுக்கு லட்ச்சாதிபதி ஆகிவிட்டான்- எனக்கு அவர்கள் கடன் பட்டதாய் சொன்னார்கள் என் கடனில் ஒன்று குறைந்ததாய் நான் நினைத்தேன்.நான் ஒருஅரசு அதிகாரி .ஏதோஒன்று நம்மை இட்டுச்செல்கிறது அவ்வளவுதான். இவ்வளவு செய்த நான் அந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ளாதது இதுவரை ஒரு புதிராகவேஉள்ளது என்க்கு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s