வெயில் திரைப்படம் ஒரு பார்வை

திகில் படத்திற்கு உரிய காட்சி அமைப்புகளை இயக்குனர் எதார்த்தம் என சொல்லி ஆரம்பிக்கிறார். பசுபதியின் மன ஓட்டத்தில் வெயில் அடிக்கிறது. இளமை துள்ளலான பசுபதியின் ஆரம்பக் காட்சிகளில் நடிப்பிலும் துள்ளியிருக்கிறார் பசுபதி பிரியங்கா காதலை கோடை மழை எனலாம். ஆனால் திரையரங்கின் முன் புதிதாய் தோன்றும் கடையும் பிரியங்காவின் மரணமும் பக்கா சினிமா தனத்தினை காண்பிக்கிறது. இதை விடுத்து பசுபதி பிரியங்கா காதலை இன்னும் கொஞ்சம் நீட்டியிருந்தால் ரசிகர்களாவது மகிழ்திருக்கக் கூடும். திடிரென கடைக்காரர்களுக்கு அத்தனை சொந்தக்காரர்கள் வருவதும் நெருடலாகவே உள்ளது. மேலும் பசுபதி இடையிடையே சகோதரரை பற்றி சொல்லி வருவதும் காண்பவர் காதில் பூ வைப்பதாகவே உள்ளது. பசுபதியும் பரத்தும் சந்திக்குமிடத்தில் அவர்களின் அன்பின் வெளிப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்த இயக்குனர் தவறிவிட்டதாக உணர நேரிடுகிறது. சிறு வயதில் கலகல பட்டாசாக வலம் வரும் பரத் இளம் வயதில் படம் நெடுக கத்திக் கொண்டே வருவதும் முரண்பாடக உள்ளது (நியாயப்படுத்த இயக்குனர் பரத்தின் ஒற்றை காதில் மைக் வைத்து நம் இரண்டு காதிலும் பூ வைக்கிறார்) ஒரு வேளை அண்ணன் பிரிந்த சோகமோ? பசுபதியை பார்க்கும் தாயாரின் பாசத்தை அந்தக் காட்சியில் அழுவதுடன் மட்டும் இயக்குனர் முடித்து விட்டார். எனக்கு என்ன செய்து விட்டார் என் அண்ணண் என தங்கையை பேச வைத்த இயக்குனர் ஏன் பசுபதியை இது பற்றி சிந்திக்கவோ அல்லது பாண்டியம்மாளிடம் வருத்தப்படவோ வைக்கவில்லை? நகை காணமல் போகும் தருணம் முழுமையான நாடகத்தன்மை கொண்டதாகவே உள்ளது. கதாபாத்திரங்கள் முன்பே பேசி வைத்து நடித்ததாக தெரிகிறது. பிற்பகுதியில் உருகி உருகி நடிக்கும் பசுபதியும் இக் காட்சியில் நடிப்பை உதிர்த்து விட்டு செல்வதாகவே தோன்றுகிறது. மேலூம் பரத் கத்திக் குத்து வாங்கியதும் அவரை தப்பி ஓடவைப்பதிலும் தடுக்கி விழாமல் சண்டை போடவைப்பதிலும் தமிழ் சினிமா இயக்குனராக பலே போட வைக்கிறார். இதே போல் கத்திகுத்து வாங்கிய பசுபதியை மருத்துவரும் பரத்தின் நண்பர்களும் கண்டு கொள்ளாமல் செல்வது. எதுவும் பேசாமல் மௌனத்தை கடைபிடிக்கும் தந்தையை ஒரு சில இடங்ககளில் அதிகம் பேசவைத்திருப்பதிலும் பசுபதி இறந்தபின் போஸ்டர் ஒட்டவைப்பதிலும் இயக்குனர் கொஞ்சமும் மாறவில்லை தமிழ்சினிமாவிலிருந்து. படம் நெடுக வெயிலுடன் பசுபதி முருகேசனாக வழ்ந்திருக்கிறார் பாவனா சில இடங்களில்  மட்டும் பாவங்கள் காட்டி காணாமல் போகிறார். பரத் வாழும் வீட்டின் ஆரம்ப கட்ட வீட்டுசசூழழும் பிற்பகுதியில் வரும் வீட்டு சூழழும் 20 வருட இடைவளியில் அதிகமாகவே வளர்ந்து விட்டது உருகுதே உருகுதே மற்றும் இறைவனை உணரும் தருணமிது பாடலால் இசை அமைப்பாளர் நம்மை கவனிக்க செய்கிறார். இயக்குனர் சங்கருக்கு ஆஸ்தான பாடலாசிரியர் கவி வைரமுத்து தாயாரிப்பாளர் சங்கருக்கு ஆஸ்தான பாடகர் நா.முத்துக்குமார் இந்த கூட்டணி தொடர்கிறது சின்னக்கவுண்டர் படத்தின் பெட்டிலை தூக்கி வரும் காட்சி அமைப்பு தாயாரிப்பாளர் சங்கர் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்துவைத்துள்ளதையே உணர்த்துகிறது ; இது போல காட்சி அமைப்பு இவரது முந்தைய தாயரிப்பான காதலிலும் காணநேரிடும். படத்தின் தலைப்புக்கு ஏற்ப படம் நெடுக வெயில் பிரதான இடம் வகித்தாலும் சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் ஒட்டுமொத்த பாராட்டையும் சரிபாதி தட்டிச் செல்வதில் ஒளிப்பதிவாளர் மதிக்கும் கலை இயக்குனர் வீரசமர்ரும் போட்டி போட்டுக்கொண்டு முயன்றுள்ளனர். படத்தை பார்த்து வெளியே வந்தால் பசுபதியும் சிறுவயது பரத்தாக நடித்த சிறுவனும் மதியின் ஒளிவண்ணமும் மட்டுமே நிழலாய் தெரிகின்றன. வெயில் எதார்தமான சினிமா என சொல்லிக்கொண்டே பிரதானமான இடங்களில் விலகியே செல்கிறது. ஒரு தனிமனிதனின் மன போராட்டத்தை சொல்ல முயன்றதுக்கு மட்டும் இயக்குனரை பாராட்டலாம். படத்தின் கதைக்களமும் காட்சி அமைப்புகளும் இயக்குனருக்கு பக்க பலமாய் உள்ளன. இனி வசந்த பாலனுக்கு திரையில் வசந்தம் வீச வாழ்த்துகிறேன்;.  

 

    

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s