நேற்று (19.05.07) தமிழ் இலக்கிய (சிங்கப்பூர்) உலகிற்கு இரண்டு புதுமுகங்கள் அறிமுகமானார்கள். இவர்களது அறிமுகம் பல வருடங்களுக்கு முன்பே நிகழ்ந்து விட்டாலும் நேற்று தங்களின் முதல் பதிப்பை வெளியிட்டு (அதனாலதான் புதுமுகங்கள் என்றேன்) தங்களின் வருகையை அழுத்தமாக பதிந்தனர்.
சிங்கப்பூரின் தீவிர புத்தகம் வாசிக்கும் இயக்கத்தை சேர்ந்த (வாசகர் வட்டம்– 20 ஆண்டு பாரம்பரியம் மிக்கதுங்க) திரு சுப்பிரமணியன் ரமேஷ் தனது முதல் கவிதைதொகுப்பான ” சித்திரம் கரையும் வெளி“யையும் திரு எம்.கே. குமாரின் “மருதம்“ எனும் சிறுகதை தொகுப்பும் வெளியிடப்பட்டது. சத்தம் இல்லாமல் ஒரு யுத்தம் என்பார்கள அப்படித்தான்க இந்த நிகழ்வு நடந்தது. விழாவில் எந்தவித பிரமாண்டமும் இல்லை. சம்பிரதாய சடங்குகள் கிடையாது. ஆனால் இவர்களின் படைப்புகள் பிராமாண்டமானதாக இருக்கும். புத்தகத்தை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. திரு சுப்பிரமணியன் ரமேஷ் – ன் ” சித்திரம் கரையும் வெளி“யை எம்.ஆர்.டி இரயிலில் வரும்போது சற்று புரட்ட ஆரம்பித்தேன். 20ஆண்டுகளாக எழுத்து, தீவிர வாசிப்பு, ஓவியம் வரைதல் என்று தன்னை என்நேரமும் இலக்கியம் சார்ந்த பயணத்தில் ஈடுபடுத்தியுள்ளார். இவரது என்னுரையை படித்தேன் என்ன சொல்வது எனது (1 வருடமாகத்தான் தீவிர வாசிப்பாளனாகியுள்ளேன்) வாசிப்பு அனுபவத்தில் இவரின் என்னுரையை போல் நான் படித்ததில்லை. இவரின் என்னுரையை குட்டி சுயசரிதை அல்லது சிறுகதை என்று தான் சொல்லவேண்டும். நான்கு பக்க என்னுரை என்னை காட்சிபிம்பத்துக்கு அழைத்து சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். (என்னுரையினூடே நானும் நடந்து சென்றேன்) இன்னம் நான் கவிதைச் சித்திரத்தில் கரையவில்லை. வாசித்து விட்டு மீண்டும் உங்களிடம் சித்திரம் பற்றி பேச வருகிறேன்.
திரு எம்.கே.குமாரின் “மருதம்” புத்தகத்தின் முன்னுரையை வாசிக்க நேர்ந்தது. எழுத்தாளர் “நாஞ்சில் நாடன்” அவர்கள் முன்னுரை எழுதியுள்ளார். கதாசிரியரை இதற்கு முன் பார்த்ததில்லை என்றும், இவரது படைப்புகளையும் படித்ததாக ஞாபகம் இல்லை என்றும் சொல்லும் இவர் இவரது தொகுப்பை வாசிக்கும் போது மெல்ல மெல்ல கதை சொல்லியின் முகம் தெரிகிறது என்கிறார். மேலும் எழுத்தாளர் “அ.முத்துலிங்கத்தின்” திசையில் பயணிக்க கூடியவர் என்றும் பாரட்டப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. இவரது சிறுகதை தொகுப்பை இன்னும் படிக்கத் தொடங்கவில்லை ஆனால். அதற்கு முன்பாகவே இவரது படைப்பான “கருக்கு“ என்னுள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது (எல்லாம் வெளியீட்டில் பேசிய விமர்சகர்கள் கருத்து) .
இவர்கள் இருவருக்குமே உலகம் தழுவிய வாசகர்கள் இருக்கக்கூடும் என்பதே என் எண்ணம். என்னை பொருத்தவரை தமிழில் சிறுகதை எழுத்தாளர்கள் பரவலாக கவனிக்கப் படுகின்றனர். இலக்கிய உலகின் எதிர்கால ஆளுமைகள் திரு எம்.கே. குமார் மற்றும் திரு சுப்ரமணியன் ரமேஷ்யையும் வரவேற்பதுடன் என் நெஞ்சம் தொட்டும் வாழ்த்துகிறேன்
ப்ரியங்களுடன் நீ “தீ“