குட்டிதேவதை

புன்னகையை சுமந்து வருகிறாள்
அறிமுகம் இல்லாமலே – என்
அகம் தொட எத்தனிக்கிறாள்.

எப்படியும் முடிகிறது – அவளின்
உலகத்தினுள் எனை கடத்த

ஜன்னல் வெளி பேசுகிறாள்
பறந்து சென்ற பறவைக்காக

அவள் சொன்ன கதைகளையெல்லாம்
டெடிபீர் பொம்மைகள்
எனக்கு தெரிந்திடாத வண்ணம்
எங்கே ஒளித்து வைத்துள்ளதோ!

முகத்தை சுழித்து நாக்கை துருத்தி
அவளுக்கான சில்மிசங்கள்
வெறுமையை ஆக்ரமிக்கிறது.

பொம்மையை தட்டிக்கொடுத்து
கண்ணயரச்செய்த பின்னே
பெரியமனுசி கொட்டாவி விடுகிறாள்

அவளுக்கான உலகில்
எண்ணற்ற ரகசியங்கள்
புதைந்து கிடக்கின்றன

எப்போதாவது ஒன்றுதான்
என்னால் தோண்டியெடுக்கப்படுகிறது. 

ஆக்கம்: பாண்டித்துரை

4 thoughts on “குட்டிதேவதை

 1. pandiidurai சொல்கிறார்:

  மாதங்கி கருத்து :

  புதிய வலைத்தளம் துவங்கியதற்கு வாழ்த்துக்கள் நீதிபாண்டி.

  குட்டிதேவதை கவிதை வாசித்தேன்.

  இறுதி ஐந்து வரிகள் பளிச். அவளுக்கான உலகில்,…. எப்போதாவது ஒன்றை என்னால்…..

  இந்த ஊடுநுழைவுதான் சிறப்பைத் தருகிறது.
  வாழ்த்துக்கள்

  ————————————————
  குட்டி தேவதை கவிதை பற்றி கவிஞர்கள் சிலரின் கருத்துக்களை கேட்டிருந்தேன்.
  ________________________________________________
  – தாஜ் – கருத்து
  TO: பாண்டித்துரை

  அன்புடன்…
  உங்கள்து மெயில் கண்டேன்.
  நன்றி!
  உங்களது கவிதையை
  இந்த மெயில் காணும் முன்னே வாசித்திருக்கிறேன்.
  நன்றாக இருந்தது.

  எப்படியும் முடிகிறது – அவளின்
  உலகத்தினுள் எனை கடத்த
  *
  ஜன்னல் வெளி பேசுகிறாள்
  பறந்து சென்ற பறவைக்காக
  *
  அவளுக்கான உலகில்
  எண்ணற்ற ரகசியங்கள்
  புதைந்து கிடக்கின்றன
  *

  உங்களது குட்டிதேவதையில்
  மேற்கண்ட வரிகள் கவிதையின் முனைப்பாக இருக்கிறது.
  தவிர, வலைத் தளங்களின் பக்கம் தென்படும் உங்கள்
  எழுத்துக்களையும் வாசிப்பவன் நான்.
  உங்களது முயற்சி உங்களுக்கு நிச்சயம் வெற்றி தரும்!
  கவிதையில் நீங்கள் நிச்சயமான வெற்றியை தொடனுமென்றால்….
  கட்டாயம் நம் மூத்த கவிஞர்களின் கவிதைத் தொகுப்புகளைப் படியுங்கள்.
  மூத்த கவிஞர்கள் என்றாள்….. மலேசியா சிங்கப்பூரில்
  பாரதி, பாரதிதாசன்,கண்ணதாசன் என்று மட்டும் அர்த்தப் படுத்துவார்கள்
  நான் மலேசியா வந்திருந்த போது… எழுத்தாளர்கள் மத்தியில்
  இப்படியான சோகத்தை அவர்களின் விவாதத்தில் கேட்டறிந்தேன்.
  தொடர்ந்து எழுதுங்கள்.
  வாழ்த்துக்களுடன் மீண்டும் நன்றி!
  – தாஜ்
  ————————————————
  நவீன்…கருத்து

  அன்பு நண்பருக்கு.தங்கள் கவிதை படித்தேன்.நான் ஒரு சிறந்த கவிஞன் இல்லாவிட்டாலும் நல்ல வாசகன் என நம்புகிறேன்.

  எப்போதாவது ஒன்றுதான்
  என்னால் தோண்டியெடுக்கப்படுகிரது என்ற வரியில் தான் கவித்துவம் வெளிபட முயல்கிறது.அதற்கு முன்பான் வரிகள் அந்த கவித்துவத்தை நோக்கி வாசகனை அழைத்து செல்லும் முயற்சியே.அங்கு வார்த்தைகளின் பங்கு மிக அவசியம்.சில வார்த்தைகள் தேவையற்றதாக உள்ளது.வெளியில் தெரியும் காட்சிகளை மீறி ஒரு குழந்தையில் அகத்தை ஆராயும் போது இன்னும் நல்ல கவிதைகள் வெளிபடும்.அதனால் என்ன குழந்தை என்பதே கவிதைதானே.

  நன்றி
  நவீன்.

  ————————————————
  றஞ்சினி…கருத்து

  அன்புக் கவிஞருக்கு
  கவிதை அழகாக வந்திருக்கிறது , குட்டிதேவதைகளின் ரகசிய உலகிற்குள் எப்படிப்போவதென்று நானும் முயல்வதுண்டு , நீங்கள் சொன்னதுபோல சிலவேளைகளிலாவது போகமுடிவது சந்தோசம்தான்.

  எப்படி முடிகிறது அவளின் உலகிற்குள் எனைக்கடத்த ,

  அவளுக்கான உலகில் எண்ணற்ற ரகசியங்கள்
  புதைந்து கிடக்கின்றன

  நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  நன்றி
  றஞ்சினி

 2. pandiidurai சொல்கிறார்:

  மாதங்கி அக்காவிற்கு என் நன்றிகள்
  எழுத்தாளர் தாஜ் , மலேசிய கவிஞர் நவீன் மற்றும், கவிஞர் றஞ்சனிக்கு எனது நன்றிகள்

 3. ♠யெஸ்.பாலபாரதி♠ சொல்கிறார்:

  எழுத்துக்களின் வடிவம் வாசிப்பை தடுக்கிறது. சாதாரண அளவிலேயே எழுத்துருவை விட்டு வைத்திருக்கலாம். //

 4. pandiidurai சொல்கிறார்:

  நன்றி பால. தற்சமயம் எழுத்துருவின் அளவினை குறைத்துள்ளேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s