குரங்கினும் (விலங்கினும்) கேவலமாய் நம்மின் கோபம்.

   நாங்க ஜந்து, ஆறு நண்பர்கள். எங்களின் பயணம் பலவிதங்களில் இருந்தாலும் ஒரு அலைவரிசையில் ஒன்றாக இருந்தோம். (இந்த ஒரு அலைவரிசை என்ன என்பது உங்களின் கற்பனைக்கு). அதன் அடிப்படையில் அடிக்கடி சந்திக்கும் போது அதப்பத்தியும் இதப்பத்தியும் பேசுவோம்க. அதுல ஒரு நண்பருங்க நல்ல நண்பர்தான். என்னோட இதப்பத்தியும் மற்ற நண்பர்களின் இதப்பத்தியும் ரொம்பவே புகழ்ந்து பேசுவாருங்க. சரி என் கருத்துக்கு மதிப்பளிக்கிறார் என்று நான் நினைச்சேன்க.  நேரடி சந்திப்பு போக கிடைக்கும் சந்தர்ப்பத்தில் தொல்லைபேசிவழி பேசுவோம்க.  அப்பகூட என்னோட இதசொல்லசொல்லி பாரட்டுவாருங்க.  அப்படித்தான் ஒருநாள் நான் மனசுல உள்ளத நேரிலேயே கேட்டுப்புட்டேன்க. நண்பா என் இதபத்தி புகழ்சியா பேசுறீங்களே அது என் சந்தோசத்திற்காகத்தானே அப்படினு கேட்டேன்.  நண்பர் பதறிபோய் என்ன இப்படிகேட்டுட்டிங்க உண்மையில உங்க இது ரொம்ப அருமைனு சொன்னாருங்க. 

இப்படித்தான் 15 நாளுக்கு முன்னாடி நண்பர்கள் எல்லோரும் கூடி பேசினோம்.  அப்பத்தான் நான் அதபத்தி பேசும் ஒருசிலர் இதபத்திபேச மாட்டேன் என்று அடம்பிடிக்கின்றனர் இதப்பத்தியும் பேசுனா இதமாக இருக்கும்னு சொல்ல என் நண்பருக்கு கோபம் வந்திருச்சுங்க. எப்படி இதப்போயி பேசலாம்னு அதுப்பத்திமட்டுமே பேசினாருங்க. அந்த இடத்தில் தான் மட்டும் தான் என்பது (நீங்களாம் பச்சா பையன்) மாதிரி பேசினாருங்க. (இவரோட மற்ற நண்பர்களுக்கு நான் உள்படங்க அது பிடித்திருந்தாலும் இன்றயநிலையில் இதுதாங்க ரொம்பவே பிடிச்சிருக்கு)

 

ஒரு மனிதன் கோபப்படும் போது அவனது 6-அறிவும் மழுங்கடிக்கபடுகிறதுங்க.  அப்ப விலங்கவிட கேவலமான நாம காட்சியளிக்கிறோம்க.  அப்புறம்க ஒரு மனிதன் கோபபடும்போதுதான் நம்மிடம் சொல்ல விரும்பாமல் இருந்த செய்திகளை சொல்லக்கூடும்க.

 

ஒரு உதாரணம்க: நேரில்: என்ன நண்பா சட்டையெல்லம் சோக்கா இருக்கு, புசுசா சூப்பர் செலக்சன் சொல்வாங்க, ஆன மனசுக்குல என்ன செலக்சன் எழவோ ஜிகு ஜிகுனு கரகாட்ட காரன் மாதிரி. கரகம்மட்டும்தான் இல்லைனு (இது தாங்க கோபபடும்போது வெளிவரும்.).

 

என் நண்பர் இதுக்குமுன்னாடி பேசினப்பல்லாம் எங்க இத ஆக ஓகோனு சொன்னாரு ஆன இன்னைக்கு இதப்பத்தி பேசும்போது (பேசவே இல்லைங்க) சீ சீ அப்படினு சொல்வாங்களா அப்படி பேசினாருங்க (என் மனசு அப்ப என்ன பீல் பண்ணியிருக்கும்க) அது எதுக்குங்க அவருக்கு, அவரோட சந்தோசம் மட்டும் பிரதானமாபடுது.   ம்

 

நண்பர் இப்படிபேசி 15 நாளைக்கு மேலஆகிபோச்சுங்க.  இப்பவாச்சும் கொஞ்சம் யோசிச்சு பார்திருப்பாரா. அன்று நான் நான்னு பேசினோமே. அவங்க, இவங்க, உங்க இடத்துல பொருத்திபார்க்க தவறிவிட்டோமே என்று நினைச்சிருப்பாருங்களா? இப்ப நினைச்சு என்னபண்ணங்க இனி கோபபடாம இருந்தா சரிங்க.

 

உங்களுக்கு ஒன்று தெரியுமா!

இந்த நான் சாகும்போதுதான் தூக்கிட்டு போக நாலுபேர் வருவாங்க இல்லைனா? அதுசரி உங்களுக்குள இருக்குற இந்த நான் அதனோட மறுபிம்பம் அதாங்க பொல்லாத கோபம் இதல்லாம் எப்பங்க சாகபோகுது?

 

நீங்க இதுக்கு முன்னாடி கோபபட்டிருந்தால் அந்த தருணங்களை கொஞ்சம் யோசிச்சு பாருங்க

ஆங்! ஆ!

இப்ப புரியுமே,

 உங்களுக்குள்ள அந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக சாவது. 

குறிப்பு: அது இது எல்லாமே நான் சொன்ன அந்த ஒரே அலைவரிசைங்க. புரியலைனா இப்படி வச்சுக்குங்களே பழசு புதுசுனு.

 

புன்னகையுடன்: பாண்டித்துரை