வாழ்த்துக்கள் நண்பா

வாழ்த்துக்கள் நண்பா

 நண்பன் முத்துக்குமார் சிங்கப்பூரின் கவிமாலை கவிச்சோலை நிகழ்வுகளில் தான் அறிமுகம். குறுகிய கால நட்பு, அதற்குள் பறந்து சென்று விட்டான்.  கவிதை நிகழ்வுகளில் எல்லோரும் கவிதையை அரங்கேற்ற நண்பனோ சினிமாவிற்கான எனது 4 –காவது பாடல் அறிமுகம் என்றே அறிமுகப்படலானான். எல்லோரும் முகமுன் மகிழ்ந்து முகம்பின் நகைத்தார்களா என்பது எனக்கு எப்படிங்க தெரியும்!  சினிமாவிற்கான அறிமுகம் என்று சொல்லி கனவுகள் கைகூடது போனால் இவனது மனநிலை எப்படியிருக்ககூடும் என்று நான் நினைத்ததுண்டு. ( அப்பொழுது எல்லாம் எனது வக்கில் கனவு யாரும் என்னை பார்க்காத வண்ணம் மெல்ல வந்து கை கொட்டிச் சிரித்துச் செல்லும் )   சில நண்பர்களுடன் பகிர்நது கொண்டதும் உண்டு முத்துவை பார்க்கும் போதெல்லாம் சினிமாவிற்கான இலக்கணங்கள் தேவையா என்றால், இலக்குகள் தான் தேவைபோல என்று எனக்குள்ளே சொல்லிக்கொள்வேன். கோடம்பாக்கதில் இருக்கும் மாயஜால உலகினுள் இவனையும் திணிக்கும் பொருட்டும் அதே நேரத்தில் நாம் மறந்து கொண்டிருக்கும் மண்ணின் மணத்தை ஞாபகப்படுத்தும் விதமாகவும் அவனது ஊரான அம்மாபேட்டையிலுள்ள அவனுது குலதெய்வத்திற்கு தெய்வீகம் என்னும் பாடல் தொகுப்பின் ஒலி நாடாவை வரும் ஆகஸ்டு 15 -07 ல் வெளியிடயிருக்கிறான். 5ரூபாய் 10ரூபாய் சமாச்சாரம்மல்ல குறைந்த பட்சம் 1 லட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருக்கு கூடும்.  ஆமாம் 7 பாடல்களை நண்பன் முத்துகுமார் எழுதி தயாரிக்க திரை இசை அமைப்பாளர் தரணியின் இசையில் திரை பிண்ணனி பாடகர்கள் கிருஸ்ணராஜ் வாணிஜெயராம் இவர்களுடன் இன்னும் சிலர் பாட திரை பட  நடிகை சரண்யா பொன்வன்னன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பிக்க இருப்பதால் இன்னும் அதிகமாகத்தான் ஆகியிருக்க வேண்டும்  . இது அவன் சார்ந்த சமூகதிற்கு இவனது பங்களிப்பாக இருக்ககூடும். 

அடுத்து இவனது பயணம் அட இன்னும்மா சொல்லணும் . முத்துகுமார் என்ற கொடி ஏற்கனவே பறந்துகொண்டிருக்க முத்தரசன் என்ற பெயர் மாற்றத்துடன் பறக்கத் தொடங்கிவிட்டான். 

தெய்வீகம் ஒலிநாடா வெற்றி பெற அவனது முயற்சிக்கும் வாழ்த்துவோமே. 

என் நண்பர்களுடன் முத்துகுமாரிடம் தொல்லைபேசி வழி பேசியதை பகிர்ந்துகொண்டதோடு எனது வலைபக்கத்தில் இதுபற்றி பதிவுசெய்ய இருக்கிறேன் என்றதும் என்னுடைய வாழ்த்துக்களையும் பதிவு செய் என்று முடிக்கும் முன் வார்த்தைகளாக வாழ்த்துகள்  சில நண்பர்களிடம் இருந்து வந்து விழுந்தது

 அப்படி வாழ்த்தும் நண்பர்கள் கவிஞர்கள் விசய பாரதி பிச்சினி காட்டுஇளங்கோ சத்யமூர்த்தி அறிவு நிதி பாலு மணிமாறன்  சின்ன பாரதி நூருல் அமீன் கோட்டை பிரபு செல்வா தன்முனைப்பு பேச்சாளர் கண்டனூர் சசிகுமார் சமூக ஆர்வளர் பிரவின் (இவர் நண்பரை நேரில் பார்த்தது கிடையாது) ஓவியர் பாஸ்கர் இன்னும் சில கவிமாலை நண்பர்களும்

  வாழ்த்துகளுடன்: பாண்டித்துரை

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s