பிசிரடித்து வந்து விழும்
வார்த்தை
என்ன சொன்ன
ஒவ்வொரு முறையும்
அனிச்சையாய் தொடரும் இருமல்
சப்தங்களை உள்வாங்குவதற்கான
தேடல்களுடன்
யார் அது
தெரியலையே
மனதினுள் மந்திர உச்சாடனங்கள்
தெரித்து விழுகின்றன
புரியாத வண்ணமாய்
கொஞ்சமாய் இருள்
மெல்லிய வெளிச்சத்தில்
வாயில்படியில் காத்திருக்கிறது
மயான அமைதியாய்
காலத்தின் சுவடு

ஆக்கம்: பாண்டித்துரை

பேருந்தில் செல்லும் போழுதும்

இரவு நேர தனிமையிலும்

நிமிடத்திற்கு ஒருமுறை தலையை காண்பித்து

இம்சிப்பது நின்றுபோனது

காலையில் ஒருமுறை

மாலையில் ஒருமுறை என

பள்ளியின் வருகை பதிவேடாய்

அலைப்பு மணியை அலறவிட்டு

அம்மு நான்தான் என்று சொல்லவும்

நானாக இல்லாமல்

மாறிய உலகிலிருந்து விடுபட்டேன்

இப்பொழுது எல்லாம்

அதிகம் சந்திப்தில்லை

கனவிலும் கூடத்தான்

ஆபூர்வமாக சந்தித்தால்

தோலைந்துவிட்ட வார்த்தைகளை

தேடவேண்டியிருக்கும்

இடைப்பட்ட நேரத்தில்

கனத்த மௌனம்

நிமிடத்தில் பிரிந்து செல்கிறோம்

இனி எப்போதும் சந்திக்க கூடாது என்று

அவளும் நினைத்திருக்க கூடும்

ஆக்கம்: பாண்டித்துரை

மின்சார இரயிலின்

ஆதம்பாக்கம் சந்திப்பு

காலையும் மாலையும்

30 நிமிடப் பயணம்

ஞாயிற்றுக்கிழமை பொழுது

உதயம் தியேட்டரில் ஒரு தமிழ்படம்

சரவணபவன் பொங்கல்

பெசன்ட் நகர் பீச் காற்று

மாதம் ஒரு முறை

அம்மா அப்பாவின் வாசைன

சின்ரெல்லா கனவான சபி

எப்போதாவது ஸ்பென்சர்

போரடித்தால் மொட்டைமாடி தூக்கம்

சீனு, சரண், முத்து

தேவகி, சிநேகானு

நினைக்கும்போது பேசலாம்

டைமழைகாலம் கத்தரிவெயில் என்று

ஞாபகங்களை தேடிச்செல்கிறேன்

வாழ்வதற்கான ஆக்சிசன்

அங்கே தானே இருக்கிறது...

ஆக்கம்: பாண்டித்துரை