‘‘எனக்கான சந்தர்ப்பத்தை நானே உருவாக்குகிறேன்’’ – பாண்டித்துரை

artttttt1.jpg

சிங்கப்பூரில் அமைந்துள்ள ஹென்டர்சன் சமுகமன்றத்தின்  19வது பட்டிமன்றம் 26.07.2007 ஞாயிறு அன்று உமறுப்புலவர் தமிழ்மொழி மையத்தில் நடைபெற்றது 

முனைவர் இரத்தின வெங்கடேசன் நடுவராக பணிபுரிந்த இப்பட்டிமன்றத்தின் நிகழ்ச்சியினை திரு. குமாரசுவாமி அழகுர தொகுத்து வழங்க கவிஞர் இனியதாசன் இயற்றி மெட்டமைத்து  பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் பட்டிமன்ற நிகழ்ச்சி ஆரம்பமாகியது. கவிஞர் இனியதாசனின் தனிச்சிறப்பு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றி அதற்கு மெட்டமைத்து தனது கணீர் குரலால் எல்லோரையும் கட்டிப்போடுவார். இதனையடுத்து பேசிய தன்முனைப்பு பேச்சாளர் கண்டனூர் சசிகுமாரின் 25நிமிட தன்முனைப்பு சொற்பொழிவு தன்னம்பிக்கை வளர்க்கும் விதமாக அமைந்தது

 15வயதில் ஏற்பட்ட சின்ன பொறிதான் கண்டனூர் சசிகுமாரை தன்முனைப்பு பேச்சாளராக உயரவைத்ததாம். எதற்கும் முயற்சி வேண்டும். முயற்ச்சி செய்வதன் மூலம் வெற்றி தோல்வி கிடைப்பதைவிட ஒரு அனுபவம் உனக்கு கிடைக்கிறதுகவலை என்பது மனிதனை கொல்லும் வியாதி உளவியல் நிபுணர்கள் சொல்வது 40சதவிகித கவலை உண்மையானதே கிடையாதாம் 30 சதவிகித கவலைகள் ஏற்கனவே நடந்த ஒன்றை பற்றி நாம் நினைத்து கொண்டிருப்பதால் வருவதாம் 12 சதவிகித கவலை நமது உடல்நிலை பற்றி வருவதாம் 10 சதவிகித கவலை எதற்கு என்று தெரியமலே வருவதாம் இவரது கணக்கு சரி என்றால் 8 சதவிகித கவலைதான் உண்மையான கவலையாம். முடியாது என்று நினைக்கும் விசயத்திற்காக வருத்தபடுவதைவிட முடியகூடிய விசயத்திற்காக உனது சக்தியை வெளிப்படுத்தினால் வெற்றி வரும். கவலை என்பது ஆடும் நாற்காலி போன்றது என்று ஒரு ஞானி சொன்னது. ஆடிக்கொண்டிருக்கும் நாற்காலி என்றாவது நம்மை கொண்டு சேர்த்திருக்கிறதா என்றால் இல்லை அதுபோன்றுதான் நமது கவலையும். நம்மை சுற்றிலும் நடக்ககூடிய சின்ன சின்ன விடயங்கள் நம்மை மாற்றி அமைக்கும். எந்த ஒரு நதியும் படகினை கவிழ்ப்பதில்லை அப்படகு வலுவில்லாது இருக்கும் வரை.

காலையில் எழும்போது அலாரத்தை கண்டு அலராமல் நமக்கு இன்று கிடைத்த வாய்ப்பு மணியோசை என்று  எண்ணி (எதிர்மறை சிந்தனையாளர்கள் தான் அலாரம் என்று சிந்தித்து அலறுவர்களாம்) நமக்கு நாமே பேசி இன்று நமக்கு மகிழச்சியான நாள் என்று சொல்லும் போது அரைதூக்கத்தில் உதிர்க்கப்படும் இந்த வார்த்தை கிறுக்குதனமாக தோன்றினாலும் நம்முடைய ஆர்வத்தின் அடிநாதமாக பயணிக்ககூடிய சக்தி படைத்ததாம். பள்ளியில் நடந்த சில சுவையான சம்பவம் பெர்னாட்சா மாவீரன் நெப்போலின் என்று தொடடுச்சென்று நிறைவான பேச்சாக இருந்தது ஒருவிசயத்தை சொல்ல வரும்போது பார்வையாளர்கள் புரிந்துகொள்ள கூடியவிதத்தில் எதார்த்த நடையில்பேசிச்சென்றது கண்டனூர் சசிக்குமார்க்கு பார்வையாளரிடத்திருந்து சிறந்த பாரட்டை பெற்றுத்தந்தது. மேலும் பட்டிமன்ற பேச்சாளர்களும் சசிக்குமாரை தொட்டு சென்றது முனைவர் இரத்தின வெங்கடேசனின் பாராட்டுரை என்று கண்டனூர் சசிக்குமாரின் பேச்சுக்கு கிடைத்த அங்கிகாரம். ஆமாம் இவர் மேடையில் கிடைக்கும் இன்னபிற கௌரவத்திற்காக பேசுவது இல்லை 

தன்முனைப்பு பேச்சினை அடுத்து நிகழ்சிநெறியாளர் குமாரசுவாமி சிகரம் நமக்காக என்ற புதிய பகுதியை அறிமுகப்படுத்தி அப்பர் என்ற திருநாவுக்கரசரை பற்றியும் மாகத்மா காந்தியடிகள் பற்றியும் சுவையான தகவல்களை சொல்லிச்சென்றார். பின் ஹென்டர்சன் சமுகமன்றத்தின் தலைவர் கவிஞர். ரஜித்தின் உரையை அடுத்து பட்டிமன்றம் தொடங்கியது  

இன்யை வாழ்க்கை சூழலில் கைத்தொலைபேசி சுகமா சுமையா என்ற தலைப்பில் முனைவர் இரத்தின வெங்கடேசன் நடுவராக பணிபுரிய சுமையே என்ற தலைப்பின் அணித்தலைவராக முனைவர் தாமோதரன்  மற்றும் ரஸினாநிலோப்பர் இஸ்மாயில்நாச்சியார் பேசினர். சுமையே என்ற அணியின் தலைவராக முனைவர் ராஜிசீனிவாசன் மற்றும் பிரதீபா கவிஞர் பாடகர் இனியதாசன் பேசினர். முதன் முதலாக பட்டிமன்றத்தில் பேசிய பேச்சாளர்கள் ரஸினாநிலோப்பர் இஸ்மாயில்நாச்சியார்ரின் பேச்சு மிகச்சிறப்பாக இருந்தது. அணித்தலைவர்களின் வாதத்திறமை பேச்சினனூடே கலைவாணர் என்.எஸ்.கேன் பாடலை பாடிச்சென்ற இனியதாசன்  என்று எல்லோருமே மனதில் பதிந்து சென்றனர். முனைவர் இரத்தின வெங்கடேசனும் இடையிடையே வாதப்பிரதிவாதங்களை மெறுகேற்றி சுகமான இந்தபட்டிமன்றத்தின் தீர்ப்பை சுமையே என்று முடித்தமை அதிதமான அறிவியல் வளர்ச்சி அழிவினை நோக்கியதானது என்ற பிம்பத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது. தினமலர் நிறுபர் புருசோத்தமன் கவிஞர்கள் விசயபாரதி அகரம் அமுதா மலர்விழிஇளங்கோவன் எழுத்தாளார் மாதங்கி மேடைப்பேச்சாளர்கள் ஸ்டாலின் மற்றும் சிவக்குமார் ஒளிப்பதிவாளர் பிரசாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பட்டிமன்றத்தை சிறப்பித்தனர் 

பதிவு: பாண்டித்துரை 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s