நகுலன் – 2

நகுலனின் எழுத்துக்கு தன்னிச்சையான இருப்பு இல்லை என்ற குறையாக; அல்லது எழுத்தாளனும் வாசகனும் நெருங்கும் ஒருமை என்ற மேனமையாக.இவை இரண்டுக்கும் நகுலனின் படைப்பில் வாய்ப்பிருக்கிறது. இலக்கிய வாசகர்கள் நகுலன்பால் ஈர்க்கப்பட இன்னொரு அம்சமும் காரணம். அது அவரது சுதந்திரமான படைப்பாக்கம். எழுதி வந்த அரை நூற்றாண்டுக் காலமும் தன்னை ஒரு சுதந்திரமான படைப்பாளியாகவே நிலை நிறுத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

நகுலனைஓர் இலக்கிய ஆர்வலனாக நான் எப்படி அணுகுகிறேன் என்பதன் வரைபடம் இது. அவருடைய அராஜகமான வாழ்க்கை முறையும் (Anarchic life) எந்தக் கோட்பாடுகளுடனும் உறவு கொள்ளாத சுதந்திரமான படைப்பாக்கமும் (Avant garde) என்னையும் ஈர்க்கிறது. அது ஒரு வசீகரமான நிழல். அதைப் பின் தொடர்வது சற்றுக் கடினம். எனக்கு மட்டுமல்ல; நகுலனை வழிபடுகிறவர்களுக்கும். ஏனெனில், நகுலன் கவிதையில் சொல்வது போல, ஓவ்வொருவருக்கும் நான் சரி,நான் மாத்திரம் சரியே சரி’.

சுகுமாரன்

‘‘ஒரு கட்டு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு புகையிலை வாய் கழுவ நீர் / ஃப்ளாஸ்க் நிறைய ஐஸ் / ஒரு புட்டி பிராந்தி / வத்திப்பெட்டி / சிகரெட் / சாம்பல்தட்டு பேசுவதற்கு நீ நண்பா இந்தச் சாவிலும் ஒரு சுகம் உண்டு.’’

_நகுலன்

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழிலக்கியத்தில் நிறைந்து நின்று செயல்பட்டு அமரரான நகுலனுக்கு நேற்று 19.05.07 சனிக்கிழமை காலையில் இறுதி மரியாதை செய்ய வந்தவர்களில், அவர் உறவினர்கள், மாணவர்கள், அண்டைவாசிகள், நண்பர்கள் போக இலக்கியவாதிகள் என்று கைவிரல்களை எல்லாம் மடக்கி எண்ணும் அளவுக்கில்லை

பாரதி, இதே திருவனந்தபுரத்தில் இறுதி நாட்களைக் கழித்து காலமான புதுமைப்பித்தன் தமிழைச் சேவித்த இவர்களுக்கெல்லாம் நடந்த அதே இறுதி மரியாதைதான்..

தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே அதற்கொரு குணமுண்டு.

நகுலனின் எழுத்தாற்றலைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டிய ஒரு தனி அம்சம் அவர் படைப்புக்களின் ஆழம் அவற்றின் வாசிக்கும் தன்மைக்கு (readability) குந்தகம் விளைவிப்பதில்லை என்பதுதான். எந்தத் தடையோ சலிப்போ இன்றி வாசித்துச் செல்லலாம். ஆனால் முதல் வாசிப்பில் புலனாகாத உட்பொருட்களுக்கு மீண்டும் மீண்டும் நம்மை வாசிக்கத் தூண்டுவதும் அவற்றின் சிறப்பம்சம் என்றே தோன்றுகிறது. அவருடைய படைப்பின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றி எத்தனை சொன்னாலும் முழுமையை எட்டுமென்று தோன்றவில்லை. ஆனால் அதற்கெல்லாம் மேலே புதியவர்களை, புதிய எழுத்துக்களை அவர் திறந்த மனதுடன் ஆதரித்து, அங்கீகரித்து வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்ததை எடுத்துச் சொல்ல வேண்டும்.

நகுலன் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் இல்லைதான். ஆனால் வாசிக்கும் யாரையும், அவருடைய வித்தியாசமான தன்மையை இனம் காட்டும் ஒரு எளிமையும் இனிமையும் ஆழமான அவர் எழுத்தில் இருந்தன

நீல பத்மநாபன்

நவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் சுனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள உறவு கொள்வது என்பதைவிட தீவிர வாசகராகவும், படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. அவர்கள் நகுலன் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம், கருத்துக்கள் நகுலனின் படைப்புக்கள் சார்ந்த தேடலைத் நோக்கி முன்னகர்த்தும்.

நகுலனால் புதுஉலகச் சித்தரிப்பை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அவரது வாழ்வும் இருப்பும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட குறுகிய வட்டத்துக்குட்பட்டவை. இதனால் சுய அனுபவக் குறிப்பு மட்டுமே மிகச் சாதாரணமாக பதிவு செய்யப்பட்டவை. இவரது கதைகள் பெரும்பாலும் சிந்தனைவயப்பட்ட தனிமனிதத் தேடல் சார்ந்தவை. இருப்பினும் நவீனத்துவசாயல் கொண்ட படைப்புலகமாக அவை வாசிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. இவரது மொழிநடை இவருக்கேயுரிய தனித்தன்மை கொண்டது. இதனால் சாதாரண வாசகர்கள் இவரது படைப்புலகுடன் அதிகம் நெருங்கிவிட முடியாது. நவீனத்துவத்தின் தாக்கத்துக்கு உட்பட்டு புதிது புடிதான தளங்கள் நோக்கி பயணிக்க எத்தனிக்கும் மனங்கள் தான் நகுலன் படைப்புகளுடன் அதிகமாக உறவாட முடியும். இன்னொரு விதமாகக் கூறுவதாயின் நகுலனின் எழுத்து எப்போதுமே தொல்லை தருவதுதான். இதனையே சிலர் உயர்ந்த கலையின் அம்சமாகவும் கருதுகின்றனர். வாழ்க்கையை வெறுமனே மனம் சார்ந்து மட்டும் பதிவு செய்யத் துடிக்கும் ஒருவித சித்தர் மரபு சார்ந்து வரும் குரலாகவும் நகுலன் படைப்புகளைக் காணலாம். இருப்பினும், இப்பார்வை கூட முழுமையானதல்ல. ஆனால் அத்தகைய ஒரு தோற்றப்பாடு உண்டு

தெ. மதுசூதனன் *- http://www.aaraamthinai.com/ilakkiyam/writers/sep15na

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்! 

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி 

செப்புப்பட்டயம்   மோகன்தாஸ்http://www.imohandoss.blogspot.com

நான் என்னைப்

பார்த்துக் கொண்டிருந்து

வாழ விரும்பவில்லை 

கவிஞர் நகுலனின் முதுமையை, வாழ்க்கை வழங்கிய வார்த்தைகளின் தனிமையைப் பார்த்தபிறகு அவர் சொன்னதையே மறுமொழிய வேண்டியிருக்கிறது.  

கண்ணாடியாகும் கண்கள்புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. அந்த வரிகளில் இருந்த தனிமை மிக வருத்தியது. அந்தப் புத்தகத்திலிருந்த புகைப்படங்கள் பேசியதும் அதிகம். எளிமையான வரிகள் ஊடாக அவரால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகள் வாழ்வின் பொருளின்மையை எள்ளும் அதேநேரம் எளிதில் மறுத்தோடவியலாத அதன் இருப்பையும் உணர்த்துவன 

தமிழ்நதிhttp://tamilnathy.blogspot.com

தமது கவிதைகளில் அதிக அளவு கடவுளைப் பற்றியும் புராண இதிகாச மாந்தர்களைப் பற்றியும் நேரடியாகவும் குறியீடாகவும் நகுலன் எழுதியிருப்பதைப் பார்க்கமுடிகிறது. எப்படியும் ஏதோவொரு குறியீடு பெரும்பாலான கவிதைகளில் கவிஞனின் அனுமதியோடோ அனுமதியின்றியோ குடிகொண்டுவிடுகிறது.

இன்று நகுலன் கவிதைகளாகவே மிஞ்சுகிறார்.அதிகமான விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உள்ளான நகுலனின் கவிதை (கோட்ஸ்டாண்ட் கவிதைகள்):

ராமச்சந்திரனா
என்று கேட்டேன்
ராமச்சந்திரன் என்றார்
எந்த ராமச்சந்திரன்
என்று நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவுமில்லை
இன்னொன்று:நில்
போ
வா

வா
போ
நில்போ
வா
நில்

நில்போவா?

(இந்தக் கவிதை விருட்சத்தில் வெளியாகியது. இதைத் தொடர்ந்து பிரமிள் அவரது அதிரடிக் கவிதைகளில் நகுலனையும் அதை வெளியிட்ட விருட்சம் அழகிய சிங்கரையும் தாக்கி ஒரு கவிதையை எழுதினார்.நகுலனின் கவிதையைக் கண்டு கோபமடைந்த கும்பகோணன் நாராயணன் இதைக் கேள்விகேட்டு விருட்சத்திற்கு எழுதினார். அதை நகுலனின் அழகிய சிங்கர் தெரிவித்த போது, நகுலன், இக்கவிதைக்கு விளக்கமாக இரண்டு பக்கங்களில் எழுதி அனுப்பினாராம். அழகிய சிங்கர் சொன்ன தகவல் இது.)

 http://nizhalkal.blogspot.com 

காமம், மரபு,பிரம்மச்சர்யம்,காமம்,தனிமை,தர்க்கம் என் நீளும் நகுலனின் எழுதுலகம் அலாதியானது. ஏழ்மையும் ,தனிமையும் அவருடன் எப்போதும் கூட இருந்தன

ராத்திரியில்
ஒவ்வொரு நட்சத்திரமும்
என்னை பிரசவிக்கிறது”நகுலன்

நினைவுப்பாதைதொட்டு ஆறேழு முழு நாவல்களும், ‘கோட்ஸ்டாண்டு கவிதைகள்என்ற வேறு நான்கு கவிதைத் தொகுதிகளுமாக தமிழுக்கு படையல் தந்துள்ள நகுலன், தமிழின் பெரும்பான்மை வாசகர்கள் அறியாத தத்துவமுறுக்கின் பிரம்மஞானி. பெரிய எழுத்துச் சிற்பிகளின் தலைமை பீடக்காரர். தேர்ந்த விமர்சகர் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நுட்பமான வாசிப்புச் செறிவு கொண்டவர்

சீரிய இலக்கியச் சூழலில் எழுத்தாளர்களின் எழுத்தாளர்என்று சிறப்பிக்கப்பட்டவர் நகுலன்.இந்த அடைமொழி ஒரு தேய்ந்த சொற்சேர்க்கை (க்ளீஷே). எனினும் இது நகுலனுக்குப் பொருந்திப் போவது ஒரேசமயத்தில் இயல்பானதாகவும் முரண்பாடானதாகவும் படுகிறது. பொதுவான வாசிப்புத்தளத்தில் நகுலனுக்கு வாசகர்கள் அதிகமில்லை.சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டவர்களே அவரது வாசகர்கள்.

அவர்களே நகுலனை அப்படிக் கருதுகிறார்கள்; அல்லது அப்படிக் கருதுவதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த அர்த்தத்தில் முன் சொன்ன அடைமொழி நகுலனுக்கு இயல்பாகப் பொருந்துகிறது. தமிழில் இன்றுள்ள பிற எந்த எழுத்தாளரையும் விட அதிகமாகப் போற்றப்படுபவர் அவர்தான். எண்பதுகளுக்குப் பின் வந்த இளம் இலக்கியவாதிகளிடையே அவர்தான் அதிக செல்வாக்குச் செலுத்தியுள்ள எழுத்தாளர்.நகுலனின் படைப்புகளால் தூண்டப்பெற்றவர்களை விட, இலக்கிய உலகில் உருவாகியிருந்த படிமத்தைச் சார்ந்து அவர்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம் என்று தோன்றுகிறது.படைப்பு, வாழ்க்கை இரண்டுக்கும் அதிக வேற்றுமையில்லாத எழுத்தாளர் என்ற உண்மையும் நகுலனை ஓர் ஆராதனைப் பாத்திரமாக்கியிருக்கிறது.தீவிர இலக்கிய வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் ஓர் ஆர்வலனுக்கு அவர் முன்னுதாரணமாகத் தென்பட்டது இயல்பானது அதே சமயம் நகுலனின் எழுத்தும் வாழ்க்கையும் பின் தொடர அரிதானவை என்பதால், இந்த மனநிலை முரண்பாடானதாகவும் தோன்றுகிறது.

இலக்கியம் சார்ந்து உருவான நட்புகள்,பாதிப்புகள்,செல்வாக்குகள்,ஆற்றாமை இவைதாம் அவரது வாழ்வின் அனுபவங்கள். இந்த அர்த்தத்தில் நகுலன் உருவாக்கியது அவருக்கு மட்டுமேயான உலகம். அவரது அனுபவங்கள் புற உலகின் தாக்கமில்லாதவை. எனவே வெளியில் விரிவதற்குப் பதிலாக உள் நோக்கி ஆழமாகச் செல்லும் குணம் கொண்டது அவர் உலகம். மனதின் தோற்றங்களுக்கு இசைய அந்த உலகம் வடிவம் கொள்ளுகிறது. தமிழ்ப் படைப்பிலக்கியத்தில் இப்படி ஓர் உலகை உருவாக்கிக் கொண்டவர் அவர் மட்டுமே.

அவரை நேரில் சந்தித்துப் பேசக் கிடைத்த குறைவான சந்திப்புகள் ஒன்றில் இந்த அபிப்பிராயத்தை முன்வைத்திருக்கிறேன்.எனக்கு யாருமில்லை, நான் கூடஎன்பது அவருடைய ஒரு கவிதை. இதை நீங்கள் எழுதாமல் நான் எழுதியிருந்தால் கவிதையாகக் கருதப்படுமா? என்று கேட்டேன்.இல்லை. நகுலனின் மொழி,நகுலனின் படைப்பு இயல்பு என்று ஒன்றிருக்கிறதே. அதுதான் இதைக் கவிதையாக்குகிறது என்பது அவருடைய பதில். நகுலன் என்ற கவிஞரை ஒதுக்கிவிட்டு அவருடைய மழை மரம் காற்றுகவிதையைப் படித்தால் அது கவிதையாக அனுபவப்படுவது சிரமம்.

இன்னார் போல் அவர்…’ என்று எடுத்துக் காட்டிட முடியாத அந்தத் தத்துவப் பேழை. இங்கே 85 ஆவது வயதின் தொடக்கத்தில் திருவனந்தபுரத்து மலையாள மயானத்தில் அடங்கிப் போய் விட்டது. வருங்கால அறிவு உலகம் நகுலனின் உத்வேக உணர்வுகளை மனதிலேற்றிக் கொண்டால், தமிழ் இலக்கிய உலகம் விழிப்பில் பார்வைத் தெளிவு கொள்ளும் என்பது உண்மை!

ஆ மாதவன்நினைவோடைகுமுதம் தீராநதிநன்றி தீராநதி

மோகன்தாஸ்http://imohandoss.blogspot.com

(6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான் அறிமுகமானது. அப்போது நகுலன் தொடர்பாய் ஏற்பட்ட மனப்பதிவு ஏதோ ஒரு கொடுங்கனவை அனுபவமாக்குபவர் என்பது தான் அது. படிக்கும்போது விலகிப் படிக்க முடியவில்லை. பயம் கவிழ்த்துவிடும். பயம், பயம் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரபஞ்சனின் கதையில் வரும் நல்லியல்பு கொண்ட இளைஞனாக என்னை விரும்பிக் கொண்டிருந்தேன். ஜே.ஜே. படித்த பிறகு கூடுதல் நெஞ்சு நிமிர்த்தல். இந்த தருணத்தில் நகுலன் என் மன அடுக்குக்குள் புகுந்துவிட்டார். அவரை எப்படி வகைப்படுத்துவது. அவசியமில்லாத விருந்தாளியாய் – ஆனால் நான் அழைத்து வந்த விருந்தாளி அல்லவா — அவரை வீட்டின் புழக்கடையில் அமரும்படி செய்துவிட்டு தப்பித்து என் இலக்கிய பயணத்தை லயம் குலையாமல் தொடர ஆரம்பித்துவிடுவேன்.

அதற்குபின் வந்த வசந்தங்களும், கோடைகளும், என் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. வெயிலும், ஊமைப்பனியும் தலைக்குள் இறங்கத் தொடங்கிய பொழுது அது. அப்போது நண்பனின் கடிதத்தில் நகுலனின் கவிதை வரி ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வெயில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து

கொண்டிருக்கின்றன

என்ற வரி அது. இவ்வரி தான் நகுலனை நோக்கி என்னை ஈர்த்தது. கோடைகளும், வசந்தங்களும் என் உடலில் உருவாக்கிய தோல்வி உறுப்புதான் புழக்கடையில் மறைந்திருக்கும் நகுலனிடம் என்னை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். செத்தைகள் குவிந்து, பிரமைகளை தோற்றுவிக்கும் திருநெல்வேலி வெயில் நகுலனுடைய கவிதைகளை வாசிக்க வைத்தது.

ஏனெனில்

 யாருமற்ற இடத்தில்

 என்ன நடக்கிறது

எல்லாம்

 நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம்.

திண்ணையில் சங்கர ராம சுப்ரமணியன்

 தமிழின் நவீன காலகட்டத்து கவிஞர்களில் நகுலன் குறிப்பிடும் படியான இடத்தை பெறுகிறார். அவரின் கவிதைகள் தமிழ் கவிதை பரப்பிற்குள் மிதந்து செல்கின்றன. செறிவனான மொழி/ கோட்பாட்டு புனைவு/ இறுக்கம் தளர்ந்த அதிரூபமான வடிவம்/ ஊசி குத்தியது போன்ற சொல்லாடல்கள் இவற்றின் கலப்பாக காட்சியளிக்கிறது அவருக்கான பரப்பு.

நந்தனை போல்

நான் வெளியில் நிற்கிறேன்

நானும் ஒரு பறையன் தான்

அதில் தான் எவ்வளவு

 செளரியங்கள்

எல்லா குழுவிற்கும் வெளியில் இருப்பதால் தனி ஒரு செளரியம்

திண்ணையில் எச். பீர்முஹம்மது

மேலே தொகுக்கப்பட்டுள்ள விபரங்கள் அனைத்தும் கீழ் காணும் வலைதள உதவியால் எனக்கு கிடைத்தது.

நன்றி  Snap Judgment 

http://snapjudge.wordpress.com/2007/05/18/writer-nakulan-works-collections-poems-memoirs-blog-anjali/ 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s