நேற்றிருந்தோம் வாசகர்வட்டம்

மீண்டும் எனக்குள் சில எதிர்பார்ப்புகளை வாசகர்வட்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்று நண்பர் ரெ.பாண்டியன் அவர்களிடமிருந்து வந்த அழைப்பே காரணம். எதிர்வரும் ( 25.11.2007 )  வாசகர்வட்டத்தின் விவாதத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர்: இராம.கண்ணபிரான் அவர்கள் கலந்துகொண்டு அவரது நினைவலைகளை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அய்யாவின் எழுத்துகளை நான் படித்ததில்லை. ஆனால் வாசகர் வட்ட விவாதங்களில் அவரது விவாதக் கருத்தினை கேட்டிருக்கிறேன். நேற்றிருந்தோம் நிகழ்வினில் கலந்துகொள்ள நான் ஆவலாக இருப்பதுடன்  வாசகர்வட்டம் சார்பாக அன்புடன் உங்களையும் அழைக்கின்றேன்.

 உங்களுக்காக

நேற்றிருந்தோம் – அழைப்பிதழ்

v2.jpg

ஒன்றை அல்லது நிஜத்தை சிதைத்து

உலகளாவிய தமிழர்களிடையே தமிழ்மொழியை முதன்மைபடுத்துவதில் சிங்கப்பூரர்களுக்கு தனியிடமுண்டு. பல தமிழ் வார்த்தைகளையும் கண்டெடுத்துதந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த தமிழ் முரசு செய்தி (19.10.2007) பக்கம் – 5ல் நடுப்பக்கத்தில் (தலைப்பு) வேலையில்லாதோருக்கு மாடுமேய்க்கப்பயிற்சி . இந்த தலைப்பிட்ட செய்தியினை படித்தால் செய்தியின் சாரம் மிகவும் அருமையானது. (உங்களுக்காக  புகைப்பட வடிவில் தமிழ் முரசு செய்தியை இச்செய்தியின் முடிவில் இணைத்துள்ளேன். ) இதே செய்தி யாகூ இணையத்திலும் வெளி வந்துள்ளது. ( செய்தியின் தலைப்பு: Army starts animal husbandry course for unemployed youth). அதன் இணைப்பும் உங்களுக்காக இணைத்துள்ளேன். ம் எனக்கு ஆச்சர்யம் என்னவெனில்  இதுபோன்ற செய்திகளை தினமும் கண்டுகொண்டு மக்கள் இங்கு இருக்கிறார்களே என்று . ஏன் எனில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் இதயத்தில் இடம்பிடிக்க தமிழ்முரசு நாளேடு இணையவடிவிலும் வலம்வந்து கொண்டிருக்கிறது. இத்தகு செய்திகள் ஏதோ ஒன்றை அல்லது நிஜத்தை சிதைத்து செல்வதாகவே எனக்கு தோன்றுகிறது. 

இன்று திண்ணை இணையத்தை படிக்க நேர்ந்தது. அங்கு இச்செய்தியினை பொதுவுடைமை என்று யாரோ அன்பர் எழுதியிருந்தார். மீண்டும் எனக்கு ஆச்சர்யம். அச்செய்தியையும் இணைத்துள்ளேன்.   

நன்றி: யாகூ இணையம்

              தமிழ்முரசு

          திண்ணைஇணையதளம்

யாகூ: Army starts animal husbandry course for unemployed youth – Yahoo  

திண்ணை: விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?

tmurasu.jpg

விழி கொண்டு பார், என் வலி புரியும் உனக்கு

விழி கொண்டு பார்

என் வலி புரியும்

உனக்கு.

அர்த்தநாதிஸ்வரரின் அழகை பெற்ற திருநங்கைகள் (அரவாணி),  இன்று சமுகத்தில் முக்கிய பரிணாமங்களை தொடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் தோழி ரோஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரியயிருக்கிறார். புன்னகையுடன் வரவேற்போம். இன்றைய காலகட்டத்தில் ஊடகவழியேதான் மனித உளவியலை மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

நன்றி: bbctamil.com

பிபிசி தமிழ் இணையத்தில் வெளிவந்த செய்தி

punnakai1.jpg

நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு அரவாணி

தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை வழி நடத்தும் தொகுப்பாளராக விரைவில் செயல்பட இருக்கிறார்.

வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள்.

போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார்.

தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்கட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ்.

பிபிசி தமிழ் இணையத்தில் :

ஒரு அரவாணி

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக…