உலகளாவிய தமிழர்களிடையே தமிழ்மொழியை முதன்மைபடுத்துவதில் சிங்கப்பூரர்களுக்கு தனியிடமுண்டு. பல தமிழ் வார்த்தைகளையும் கண்டெடுத்துதந்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த தமிழ் முரசு செய்தி (19.10.2007) பக்கம் – 5ல் நடுப்பக்கத்தில் (தலைப்பு) வேலையில்லாதோருக்கு மாடுமேய்க்கப்பயிற்சி . இந்த தலைப்பிட்ட செய்தியினை படித்தால் செய்தியின் சாரம் மிகவும் அருமையானது. (உங்களுக்காக புகைப்பட வடிவில் தமிழ் முரசு செய்தியை இச்செய்தியின் முடிவில் இணைத்துள்ளேன். ) இதே செய்தி யாகூ இணையத்திலும் வெளி வந்துள்ளது. ( செய்தியின் தலைப்பு: Army starts animal husbandry course for unemployed youth). அதன் இணைப்பும் உங்களுக்காக இணைத்துள்ளேன். ம் எனக்கு ஆச்சர்யம் என்னவெனில் இதுபோன்ற செய்திகளை தினமும் கண்டுகொண்டு மக்கள் இங்கு இருக்கிறார்களே என்று . ஏன் எனில் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் இதயத்தில் இடம்பிடிக்க தமிழ்முரசு நாளேடு இணையவடிவிலும் வலம்வந்து கொண்டிருக்கிறது. இத்தகு செய்திகள் ஏதோ ஒன்றை அல்லது நிஜத்தை சிதைத்து செல்வதாகவே எனக்கு தோன்றுகிறது.
இன்று திண்ணை இணையத்தை படிக்க நேர்ந்தது. அங்கு இச்செய்தியினை பொதுவுடைமை என்று யாரோ அன்பர் எழுதியிருந்தார். மீண்டும் எனக்கு ஆச்சர்யம். அச்செய்தியையும் இணைத்துள்ளேன்.
நன்றி: யாகூ இணையம்
தமிழ்முரசு
திண்ணைஇணையதளம்
யாகூ: Army starts animal husbandry course for unemployed youth – Yahoo …