மீண்டும் எனக்குள் சில எதிர்பார்ப்புகளை வாசகர்வட்டம் ஏற்படுத்தியுள்ளது. இன்று நண்பர் ரெ.பாண்டியன் அவர்களிடமிருந்து வந்த அழைப்பே காரணம். எதிர்வரும் ( 25.11.2007 ) வாசகர்வட்டத்தின் விவாதத்தில் சிங்கப்பூர் எழுத்தாளர்: இராம.கண்ணபிரான் அவர்கள் கலந்துகொண்டு அவரது நினைவலைகளை பகிர்ந்துகொள்ளவிருக்கிறார். அய்யாவின் எழுத்துகளை நான் படித்ததில்லை. ஆனால் வாசகர் வட்ட விவாதங்களில் அவரது விவாதக் கருத்தினை கேட்டிருக்கிறேன். நேற்றிருந்தோம் நிகழ்வினில் கலந்துகொள்ள நான் ஆவலாக இருப்பதுடன் வாசகர்வட்டம் சார்பாக அன்புடன் உங்களையும் அழைக்கின்றேன்.
உங்களுக்காக
நேற்றிருந்தோம் – அழைப்பிதழ்