பொம்மைகளை பார்ப்பது போன்ற
முகபாவங்களை காண்பித்தபடி
புதுமையான உலகினுள்
அவளது பிரவேசம்
அங்கிருக்கும் பொம்மைகளோ
சாவி கொடுக்கபட்டதாய்
லல்ல லல்லா
சிச்சு புச்சு
என்ற புரிபாடாத பாஷைகளை
மொழிக்கு உகந்த முகத்தை காட்டி
சிர்ப்பதாய் நினைக்கிறது
அந்த நேரத்து புன்னகையை உதிர்த்து
அடுத்தடுத்த பொம்மையாய் தாவி தாவி
திருப்தியற்றவளாய் மீண்டு வருகிறாள்
பொம்மைகளுக்கோ குதூகூளம்
மகிழ்ச்சியின் உச்சத்தில்
அவளுக்கான பாடல்
பிண்ணனியில் இசைக்கப்பட
விளக்கு அணைக்கப்படுகிறது
அவளுக்கு இது எல்லாம் பிடிக்கவில்லை
அழுகையும் புன்னகையுமாய் உணர்த்தியிருக்க கூடும்
அவளை யாரும் கண்டுகொள்ளாதபொழுது
சிறகுகளை விரித்தவண்ணமாய்
பறந்த செல்கிறாள்
பொம்மைகளின் கண்களுக்கு அப்பால்
அவளின் உலகம்
ஆக்கம்: பாண்டித்துரை
Advertisements
nalla kavithi