சுகுமாரன்- னின் வரிகள்

கவிஞர் அய்யப்பமாதவனின் பிறகொருநாள் கோடை என்ற கவிதைதொகுப்பிற்கு எழுத்தாளர் கவிஞர் சுகுமாரன் எழுதியுள்ள முன்னுரையிலிருந்து ஒரு பகுதி

வாழ்பனுபவம் என்பது மானுட உணர்வின் பகிர்ந்துகொள்ளப்படும் பொது அம்சம்

காலச்சாரம் பால் அடையாளம் மொழி இனம் இவற்றைக் கடந்து நாமெல்லாம் ஒன்று என்ற உச்சரிக்கப்படாத பொது ஒப்பந்தத்தின் ஷரத்து என்பது கட்டுரையின் வாதங்களில் ஒன்று

தன்னுடையதல்லாத வாழ்வனுபவத்தைக்கூட கவிஞனால் கையாள முடிவது இந்த பொது ஒப்பந்தத்தின் விளைவாகவே

 இந்தப் பொதுமையை படைப்பாக்கத்தில் செறிவாக மேற்கொண்டதன் அடையாளம் அய்யப்பமாதவனின் கவிதைகள்

– சுகுமாரன்

நன்றி: சுகுமாரன், அய்யப்பமாதவன் 

பொம்மைகளை பார்ப்பது போன்ற
முகபாவங்களை காண்பித்தபடி
புதுமையான உலகினுள்
அவளது பிரவேசம்
அங்கிருக்கும் பொம்மைகளோ
சாவி கொடுக்கபட்டதாய்
லல்ல லல்லா
சிச்சு புச்சு
என்ற புரிபாடாத பாஷைகளை
மொழிக்கு உகந்த முகத்தை காட்டி
சிர்ப்பதாய் நினைக்கிறது
அந்த நேரத்து புன்னகையை உதிர்த்து
அடுத்தடுத்த பொம்மையாய் தாவி தாவி
திருப்தியற்றவளாய் மீண்டு வருகிறாள்
பொம்மைகளுக்கோ குதூகூளம்
மகிழ்ச்சியின் உச்சத்தில்
அவளுக்கான பாடல்
பிண்ணனியில் இசைக்கப்பட
விளக்கு அணைக்கப்படுகிறது
அவளுக்கு இது எல்லாம் பிடிக்கவில்லை
அழுகையும் புன்னகையுமாய் உணர்த்தியிருக்க கூடும்
அவளை யாரும் கண்டுகொள்ளாதபொழுது
சிறகுகளை விரித்தவண்ணமாய்
பறந்த செல்கிறாள்
பொம்மைகளின் கண்களுக்கு அப்பால்
அவளின் உலகம்

ஆக்கம்: பாண்டித்துரை

கணையாழி – 2007

 கவிமாலை அமைப்பினை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் கவிமாலை காப்பாளருமான கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் உழைப்பு, நம்பிக்கையால் விளைந்த கனி கணையாழி விருது.

கவிஞர்களால் நடத்தபடும் கவிமாலை கடந்த 4 வருடமாக கணையாழி விழாவினை சிறப்பாக கொண்டாடிவருகிறது. இதோ 5 ம் ஆண்டு அழைப்பிதழ் .

புன்னகையுடன் வரவேற்கிறேன்

கவிமாலை கவிஞர்கள் சார்பாகpicture.jpg

பாண்டித்துரை