மனதின் ஓரத்தில் கசிந்து கொண்டிருக்கிறது
களவாடப்பட்ட உன் நினைவுகள்
புரிதலற்ற வாழ்வில்
தினமும் விழியின் ஈர்ப்புகளை
விருப்பமின்றியே நிராகரித்து
மனதின் பேச்சுகளை நீ கேட்டிடாதிட
இப்பொழுது எல்லாம்
மௌனித்து விடுகிறேன்
அர்த்தமற்ற பார்வையில்
எனை அவமானித்தாதிட
உன் மேலான ப்ரியங்கள்
கானல் நீராகின்றன
முரண்பட்ட ரூபத்தின் தவிப்புகளை
தூரத்தில் நிறுத்தி
என் என்ற கேள்விகளுடன்
எனது பயணம் தொடர்கிறது
எனது பார்வையில் நீ
விலகிச் செல்கிறேன் நான்.
நன்றி: வடக்குவாசல்
ஆக்கம்: பாண்டித்துரை
அன்புள்ள பாண்டித்துரை
//மனதின் ஓரத்தில் கசிந்து கொண்டிருக்கிறது
களவாடப்பட்ட உன் நினைவுகள்//
அருமை
//புரிதலற்ற வாழ்வில்
தினமும் விழியின் ஈர்ப்புகளை
விருப்பமின்றியே நிராகரித்து
மனதின் பேச்சுகளை நீ கேட்டிடாதிட
இப்பொழுது எல்லாம்
மௌனித்து விடுகிறேன்
அர்த்தமற்ற பார்வையில்//
மனதை கவலையின் ஊற்றிற்கு கொண்டு செல்கிறது
//எனை அவமானித்தாதிட
உன் மேலான ப்ரியங்கள்
கானல் நீராகின்றன//
அருமை
//முரண்பட்ட ரூபத்தின் தவிப்புகளை
தூரத்தில் நிறுத்தி
என் என்ற கேள்விகளுடன்
எனது பயணம் தொடர்கிறது
எனது பார்வையில் நீ
விலகிச் செல்கிறேன் நான்.//
ஆக! இந்த வரிகளில் அர்த்தங்கள் அவரவர்களுக்கு
ஏற்றதுபோ எடுத்து புரிந்து கொள்ள சுதந்திரம் தந்துள்ளீர்.
நன்றாக உள்ளது பாண்டித்துரை
வாழ்த்துக்கள்
என்றும் பாசமுடன்
என் சுரேஷ்