சரி எனத் தெரியும் தவறை இங்கு மீண்டும் மீண்டும் செய்துகொண்டுதானிருக்கிறான். மனிதனாய் பிறந்துவிட்டான் அல்லவா! எல்லோருமே “இவனை“ தூக்கி எறிந்ததாய் வெளிக்காட்டி அது தானாய் மீண்டுவந்து அமர்வதற்காகவே உட்கார்திருக்கின்றனர்.
சமீபத்திய சங்கடமாய் அங்கும் இங்கும் தென்படும் இவனை, ஒரு புருவம் சுருக்கி ஆர்வத்தின் மிகுதியோ அல்ல அரைப்பைத்தியமோ என்று புன்னகைத்ததாக நினைவில் இல்லை. காரணங்கள் புரிபடாத பொழுதும் காலத்தின் சுழற்சியில் கடந்துதானே செல்லவேண்டும், அதுதானே நியதி .
இவனை கொண்டாடுதல் என்பது எவ்வளவு ஆரோக்கியமான விசயம். இவனிலிருந்துதான் இப்பிரபஞ்சம் என்று பார்க்கத்தொடங்கினால், இங்கு எல்லாமுமாய் இவனாகிறான். ஒரு பக்கம் குருதி வழிந்தோட, இடையிடையே மழலையின் புன்னகையாய் இருண்மையான பொழுதின் அரவங்கள். அடைப்பட்ட கூட்டுக்குள் எழும் புணர்தலின் ஸ்பரிசங்கள் என்று எல்லாமுமாய் வெடித்துச்சிதற, சாலையில் ஒருவன் அடிபட்டுக் கிடக்கிறான். இவனைப்போலவே, இவனும் உச்கொட்டி கடந்துசென்றாலும் உயிர்பின் துடிப்பினை உள்வாங்கிக்கொண்டு, மனிதனாகப்பட இயலாபொழுதும் அதன் மறுபக்கமாய் இயன்றதை நித்தித்தவண்ணமாய் மூர்ச்சையடைகிறான்.
மழலையாய் பிறந்த இவன், அகோரத்தை உள்ளடக்கி புன்னகையால் புறம்தள்ளியபடியே இவனை உள்நோக்கி பார்த்தலில் உடன்பாடற்று, இவனையும்! இவனையும்! உற்று நோக்கும் விழியின் படலம் எல்லாம் சர்ப்பத்தின் நாவுகளாக நீழ்கிறது. உணர்தலும் புணர்தலுமான பயணத்தில், இவனுள் ஏற்பட்ட மாற்றம் சுயம் எனும்பொழுது சுடச்செய்கிறது. விழாவின் குருதிகள் விழிகளில் வழிய, ஆண்டுகள் உருண்டோடினாலும் அடைகாத்தலின் பொருட்டு வெம்மையில் வெடித்துச்சிதறும் இவனது குஞ்சுகளை வேடிக்கைப் பார்த்தபடியே, வாழ்ந்ததின் எச்சத்தில் வாழ்க்கையின் மிச்சமான மரணிக்கும் பொழுது இவனின் எதிர்பார்ப்புகள் தோற்றுப்போகட்டும் .
இவன் மீதான புரிதல்கள் ஏதுமில்லாதபொழுதும், இவனுள்ளும் எதிர்பார்ப்புகள், இவனைப்போலவே கடந்து செல்கிறான். கவனிக்காதொரு தருணத்தில் சரி எனத் தெரியும் தவறை இங்கு மீண்டு மீண்டும் செய்தபடி………………………………..
வணக்கம் தோழரே!
நிறைய இடங்களில் என்னால் ஒன்ற முடியாவிட்டாலும் அந்த கடைசிப்பத்தியில்…
என் மீதான புரிதல்கள் ஏதுமில்லாதபொழுதும், எனக்குள்ளும் எதிர்பார்ப்புகள், பிறரைப்போலவே கடந்து செல்கிறேன். யாரும் கவனிக்காததொரு தருணத்தில் சரி எனத் தெரியும் தவறை இங்கு மீண்டும் மீண்டும் செய்தபடி பயணிக்கிறேன்…
இப்படி மாற்றி வாசிக்கையில் எனக்குள்ளாக ஆயிரமாயிரம் எதிர்க்கேள்விகள் என்னை முற்றுகையிடுகின்றன.இருப்பினும்…
யாரும் கவனிக்காததொரு தருணத்தில் சரி எனத் தெரியும் தவறை இங்கு மீண்டும் மீண்டும் செய்தபடி பயணிக்கிறேன்…
தோழமையுடன்
கோட்டை பிரபு
என்னதல இவன் இவன் எழுதியிருக்க ஆனா ஒன்னு. ஒண்ணுமே புரியலை. ஆவன்னா நல்லயிருக்கு
////இப்படி மாற்றி வாசிக்கையில் எனக்குள்ளாக ஆயிரமாயிரம் எதிர்க்கேள்விகள் என்னை முற்றுகையிடுகின்றன.இருப்பினும்…
////////
பிரபு இந்தபுரிதலே போதுமானதே . மீண்டும் நீங்கள் இந்த கட்டுரையை வாசிக்கும் பொழுது அல்லது இந்த கட்டுரைக்கான பொழுதை நீங்கள் கடக்கும் பொழுது நாம் ஒன்றுபடக்கூடும்