இன்பம் நிறைத்த இரவுக்கதம்பம் !!!

எல்லா  இரவுகளும் ஒன்றல்ல 

ஆண்டுக்கு ஒருமுறை ஒட்டடை வெள்ளையடிக்கும் பொழுது பரனில் இருந்து  இரக்கிவைக்கப்படும் பல பொட்டனங்களில் சில புத்தகங்களா இருக்கும். தூசி தட்டுவதற்காக திறக்கப்படும் பொமுது அட நாம் இது எல்லாம் முன்பு படித்தில்லோம் மீண்டும் ஒருமுறை படிக்கவேண்டும் என்று மறதியுடைய ஞாபகப்பொட்டில் ஏற்றிவிட்டு மீண்டும் அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரிக்கப்படும்பொமுதும் தொடர்கதையாய்……….. 

அப்படித்தான் இரவுக்கதம்பமும் என்னுள்ளே…….. 

13.10.07 இரவு தொடங்கி மறுநாளைய காலைபொழுதுவரை சந்தித்தோம். எவ்வித சலனமும் ஏற்படுத்தாத இரவு என்றாலும் என்றைக்கும் இல்லாததாய் அன்று கொஞ்சம் மாறுபட்டிருந்தது. ஒரே நோக்கத்தில் சந்திக்கும் பல நண்பர்கள் அந்நோக்கங்களை சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு சந்தித்தால் என்ன என்ன நிகழக்கூடும் என்ற எண்ணப்பாட்டின் சாத்தியப்பாடுகளில் சிலவற்றை இந்த நிகிழ்வு தொட்டுச் சென்றதில் மகிழ்ச்சியே. இந்நிகழ்வு பற்றி விரிவாக எழுதவேண்டும் என்று நினைவலையில் எழுந்ததுடன் சரி 12.03.08 அன்று நண்பர் பிரபுவுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது கொஞ்சம் நினைத்துப்பார்க்கத்தொடங்கினேன். எழுதவேண்டும் எப்பொழுது என்றுதான் தெரியவில்லை 

அதுவரையில் நண்பனின் (கோட்டை பிரபு) பதிவினை உங்களுக்காக இங்கு இட்டுச்செல்கிறேன் 

பின்பரும் பதிவு நண்பர் கோட்டை பிரபு எழுதியது  

இன்பம் நிறைத்த இரவுக்கதம்பம் !!!     

எல்லா இரவுகளும் வெறுமையைச் சுமந்தே விடியும் பொழுதுகளுக்கிடையே என்னை வியப்பில் ஆழ்த்திய ஓர் இரவு.      

ஆம், கடந்த வெள்ளி இரவு சிங்கை கிழக்கு கடற்கரையில் உறங்காத கடலோடு உறவாடியது ஓர் கூட்டம். அதிலே கவிஞர்கள், பாடகர்கள், பேச்சாளர்கள் , விகடகவிகள் ஆகியோர் அங்கம் வகித்தனர்.   

   அறிந்த முகங்களின் அறியாத அகப்பக்கங்களை, அவர்கள் கடந்து வந்த பாதைகளை பகிர்ந்துகொள்ள குழுமிய கூட்டம் அது.      

இரவுக்கதம்ப நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சத்தியமூர்த்தி அய்யா அவர்கள் வந்திருந்த அனைவரையும் அன்போடு வரவேற்று  இரவுக்கதம்ப நிகழ்ச்சியின் சாராம்சங்களை விளக்கினார்.        

  ஆரம்ப நிகழ்ச்சியாக, தமிழ்த்தாய் வாழ்த்து  கவிஞர். இனியதாசன் அவர்கள் இயற்றிப் பாடினார்கள். தொடர்ந்து அங்கத்தினர் அனைவரும் அன்போடு கைகுலுக்கி வணக்கத்தோடு அறிமுகங்களை அரங்கேற்றினர்.       

  பின்னர், செவிக்கும், விழிக்கும் விருந்துகள் காத்திருக்க அதற்குமுன் வயிற்றுக்கும் உணவுகள் பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.  

 அதைத்தொடர்ந்து, அவரவர் தனித்திறன்கள் திறம்பட பறைசாற்றப்பட்டன. அதில் கீழைக் கதிர்வேல் அவர்களின் நகைச்சுவை வெடிகள் கொளுத்தப்பட்டன.அது சரவெடிகளாய் சஞ்சரித்தன. தில்லை வீரையா தனது ஆர்வமான நடனத்தின் மூலம் அனைவரின் மனம் கவர்ந்தார்.    

 கவிதைக்கான ஆரம்பங்களும் , அது உருவான அகவையும் அதற்கான சுற்றுப்புறங்களும் பற்றிய செய்திகள் கவிஞர்கள் நீதிப்பாண்டி ,இரமேஷ் ஆகியோரிடமிருந்து வெளிப்பட்டன.   

 காதல் மனிதனை மனிதனாக்கும்.   

காதல் மனிதனை கவிஞனாக்கும்.   

என்றும்,அத்தகைய சுகமான சுமைகளை இன்றும் சுமக்கிறோம் என்பதாக அமைந்திருந்தது மனிசரவணன், கோவிந்தராஜ் ஆகியோரின் பேச்சுக்கள். திரு கண்டணூர் சசிக்குமார் அவர்கள் நினைவாற்றலுக்கான பயிற்சி வகுப்பு நடத்தினார். அது அனைவருக்கும் மிகப்பயனுள்ளதாக இருந்தது. 

      அதைத்தொடர்ந்து, அனைவரும் இரு அணியாகப் பிரியப்பெற்று பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதில் தமிழ்த் திரைப்படப் பாடல்களின் முதல் எழுத்தை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் இசைக்கப்பட்டன. இராகங்களின் வேகங்களை ஒத்து கைத்தாளங்கள் கைகோர்த்துக் கொண்டதில் இசைவெள்ளம் இன்பமாய் நிறைந்தது. இப்போட்டியின் நீதிபதியாக கவிஞர் சத்தியமூர்த்தி அவர்கள் ஆர்வத்தோடு பணியாற்றினார்கள்.  

 பொழுது புலரத்தொடங்கியது விளங்கியது. பின்னர், விளையாட்டில் ஆர்வமுள்ள நண்பர்களால் தமிழக பாரம்பரிய விளையாட்டான சடுகுடு ஆடப்பட்டது. திரு. சசிக்குமார் அவர்கள் நடுவராக செயல்பட்டார்    

  இறுதியாக, இரவுக்கதம்பம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் அனைவருக்கும் நன்றி நவிழினார்.     

 ஒருவருக்கொருவர் விடைபெற்றுக்கொண்டு பிரிந்து செல்கையில், ஏனோ ஒருவித பிரிவின் வெளிப்பாடு  எல்லோர் முகங்களிலும்  தென்பட்டது. அதுதான் இரவுக்கதம்பத்தின் வெற்றி என்பதை அனைவரும் உணராமல் இல்லை     

           மகிழ்வுடன்,

கோட்டை பிரபு     

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s