“நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”

  மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள பொட்டானிக்கல் கார்டன் (பூமலை) யில் தமிழகத்தில் இருந்து வெளிவரும் நாம் காலாண்டிதழ் – ( தனிச்சுற்றுக்கு மட்டும் ) இயற்கையோடு இயைந்த சூழலில் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்நிகழ்வினை தன்முனைப்பு பேச்சாளர் கண்டனூர் சசிகுமார் நெறிப்படுத்திச் செல்ல, ஆசிரியை திருமதி உஷா அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட நிகழ்வு தொடங்கியது. தொடக்கத்தின் வரவேற்புரையை கவிஞர் கோட்டை பிரபு மேற்கொண்டார். இதனையடுத்து நாம் இதழ் பற்றிய அறிமுகம் தனை இதழின் ஆசிரியர்களில் ஒருவரான கவிஞர் சின்னபாரதி எடுத்துரைத்தார். அதன் பின் ஆசியான் கவிஞர் .து.மு.இக்பால் மற்றும் சிங்கை தமிழ்ச் சங்கம் தலைவர் .வை.கிருஸ்ணசாமி இருவரும் நாம் இதழின் முதல் பிரதியை வெளியிட முறையே எழுத்தாளர் புதுமைத்தேனி அன்பழகன் ஒலி 96.8ன் மூத்த செய்தி தயாரிப்பாளர் செ..பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டனர்.

 கவிஞர் .வீ.விசயபாரதிபா வாழ்த்து தூவ, கவிஞர்கள் பிச்சினி காட்டு இளங்கோ, மலர்விழி இளங்கோவன் பட்டிமன்ற பேச்சாளர்கள் முனைவர் இரத்தின வேங்கடேசன்,  சொல்லருவி சிவக்குமார், ஒலி 96.8ன் மூத்த செய்தி தயாரிப்பாளர் செ..பன்னீர்செல்வம், எழுத்தாளர் இரா..கண்ணபிரான் உள்ளிட்டோர் இதழை தொட்டு தங்களின் எண்ணப்பாடுகளை வெளிப்படுத்தினர். 

நிகழ்விற்கு கவிஞர்கள் முருகடியான், .வி சத்தியமூர்த்தி, பாலுமணிமாறன், தமிழ்க்கிறுக்கன், அறிவுநிதி, தில்லை சா.வீரையா, மணிசரவணன்,  கலைக்கண்ணன், மதிவாணன், திருமுருகன் கோ.கண்ணன், சுகுணாபாஸ்கர், நவநீதன்ரமேஷ், கோ.கண்ணன், கவி ரமேஷ், அகரம் அமுதா, முருகன், செங்குணம செல்வா, காளிமுத்து பாரத், எழுத்தாளர்கள் முனைவர் லெட்சுமி, எம்.கே.குமார், ராம.வைரவன், ராமச்சந்திரன், சுப.அருணாச்சலம் சமுக ஆர்வளர் துரைபிரசாந்தன், அண்ணாத்துரை, யுத்திராபதி, பாலா நாடக நடிகர் இப்ராகிம், ஓவியர்.கா.பாஸ்கர், பட்டிமன்ற பேச்சாளர் ஸ்டாலின் உள்ளிட்ட 75ற்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வளர்கள் இயற்கையோடு இயைந்த திறந்த வெளியில் சிங்கப்பூரில் நடைபெற்றது சூழ்நிலையால் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாதுபோனவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்ககூடும்.  

One thought on ““நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s