மீண்டும் மீண்டும் கென்

 

சனியன்றே இந்த பதிவையெழுதியிருப்பின்

 

இன்று மீண்டும் மீண்டும் மீண்டும் கென் என்றே பதிவுசெய்திருப்பேன்.

 

சனியன்று மாலை கென் என்னை தொடர்புகொண்டு பாண்டி சாருஆன்லைன் பார்த்திங்களா என்றார்.

 

இல்லை கென் என்றேன்.

 

ரொம்பநன்றி பாண்டி, என்னுடைய கவிதையையும், உங்களுடைய கவிதையும் சாருவின் இணையத்தில் வந்துள்ளது என்றார். நன்றிகளை மாற்றி மாற்றி சொல்லிக்கொண்டோம். நாளையும் (ஞாயிறு) நன்றிகளை சொல்லிக்கொள்ளப்போகின்றோம் என்பதை அறியாது.

 

ஞாயிறு கென்னிடமிருந்து அழைப்பு

 

சாருவின் இணையத்தை பார்த்தீர்களா என்று, இல்லை கென் திங்களன்றுதான் பார்க்கநேரிடுமென்றேன்.

 

கென் ஏதோ ஒன்றை அணுமானித்தே கேட்டது

 

ஆனால் அதன் வீரியம் பற்றி அறியாது கென்னும்வலைப்பக்கம் செல்லவில்லை. ஞாயிறு மாலை இணையத்திற்கு சென்று சாருஆன்லைனை பார்த்தபின்னர் அவ்வளவு மகிழ்ச்சி, சாரு தனது 3 வது எழுத்துலக  வாரிசாக கென்னை அறிவித்திருந்தார் (மற்ற இருவர் வா.மு. கோமு , மனோஜ்). கென்னை தொடர்புகொண்ட பொழுது ஆமாம் பாண்டி நண்பர்கள் சிலர் விசயத்தை சொல்லமால் இணையத்தை பார்த்தியா என்றனர் அதன் பின்னே சென்றுபார்த்தேன், எனக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசை நீ கொடுத்திருக்கிறாய் பாண்டி என்று நன்றிகளை சொன்னார். இல்லை கென் நான் தான் உனக்கு நன்றியை சொல்லவேண்டும் என்று மாற்றி மாற்றி நன்றிகளை சொல்லிக்கொண்டோம்.

 

ஆனால் சின்னதாய் சந்தோசம்

கென் இனி எப்போது இதை நினைத்தாலும்

கென்னின் மகிழ்ச்சிக்கு எனது பங்களிப்பும் கொஞ்சமாய் எங்கோ துருதிக்கொண்டிருக்கலாம் (மறந்தால்தானே நினைப்பதற்கு)

 

கென் உனக்கு என்னுடைய வாழ்த்துகள்.

சாருநிவேதிதா- வின் பதிவு : வேலி முட்டியும் வாரிசுகளும் http://www.charuonline.com/june08/pp8.html

நன்றி: சாருநிவேதிதா
 

பாண்டித்துரை

 

மீண்டும் கென்

 

 

பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்ற எனது கவிதை உங்களுடையதா என்று கேட்டு சாருவிடமிருந்து மின்னஞலுடன் ஒரு தொடர்பு எண்ணும் வந்தது.

பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்றெண்ணியபடியே தொடர்பு கொண்டேன்.

 

சாருவே உரையாடியது

எனக்கு கொஞ்சம் பதட்டம்

பேசவேண்டியதை எல்லாம் வேகமாகவே பேசினேன்.

கென் என்ற தலைப்பில் உள்ள கவிதை பற்றி விசாரித்தார். பின்னர்தான் புரிந்தது அதனை என்னுடைய கவிதையாக அவர் பாவித்தது…..

கென்னின் மடிநிறைய கற்கள் என்ற கவிதைதொகுப்பு (2வது மின் தொகுப்பு) நூலில்இருந்து கென்னின் உணர்வுகளை பிரதிபலிக்ககூடிய கவிதை வரிகளை தொகுத்து நேற்று (27.06.2008) கென்னின் பிறந்த நாள் என்பதால் கென்னின் கவிதை வரிகளையே கென்னிற்கு பிறந்த நாள் பரிசளித்ததாக கூறினேன்

கென்னின் கவிதைகளை எனக்கு அனுப்பமுடியுமா என்றார். பேசுவதற்கு நிறைய இருக்கிறது கவிதை  உங்களுடையதா என்றார். ஆமாம் என்றேன்

உங்களின் படைப்புகளின் கீழே உங்களின் பெயரினை பதிவுசெய்யுங்கள் என்றார். புரிந்துகொண்டேன்.

எனது நகுலன் வலைப்பக்கம்பற்றி விசாரித்தார்.

(அதனைபற்றிய முழுமையான விபரங்களை எனது வலைப்பூவில் கூறவில்லை). ஜனரஞ்சக இதழ்களில் வரும் இலக்கியம் சார்ந்த படைப்புககளை ஒரு இடத்தில் தொகுக்க ஆரம்பித்து (http://nagulan.wordpress.com/ ) நேரமின்மையால் சரிவர இயக்கவில்லை என்றேன்.

தொடர்பை துண்டித்தபொழுது இன்னும் பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஆக்கம்: பாண்டித்துரை

 

 

கென்

 

 

நீ

 

 

கொடுக்கப்படாத சிலமுத்தங்களை

நினைத்துப் பார்க்கலாம்

உனக்கான ஒன்றை

தேடத்துவங்கலாம்

மீண்டும் மீண்டும்

வல்லூறுகளின் பிடியில்

சிக்கிக் கொள்ளலாம்

தனித்த இரவொன்றில்

உன் மரணத்தை பரிசளிக்க

மனம் பிறழ்ந்தவனாய்

கடவுளிடம் உரையடிக்கொண்டிருக்கலாம்

காத்திருத்தலின் முடிவில்

அடையாளம் காணலாம்

 

புன்னகை சிந்திடும்

பிடிவாத மழலையாய் என்றுமே உன்னை

 

கென் உனக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துகள்.

 

 

 

பண்புடன் குழும நண்பர்கள் சார்பாக

 

பாண்டித்துரை