இவர்களுக்கு பின்னேயுமான துர்நாற்றத்தில்………

ஏன் தான் இவர்கள் இப்படி இருக்கிறார்களோ. ஒன்று, இரண்டாய் நடக்கத்தொடங்கியதன் ஞாபகங்களை வேண்டுதலின் பெயரிலேயே புதைத்து விடுகின்றனர். அவனுக்கும், இவனுக்கும் வித்தியாசம் தெரியாத இவர்கள் எல்லாம் எப்படிமாமனிதராய் மாறமுடியும்? வேண்டுமெனில் மாமா மனிதராய் மாறக்கூடும்!

தவறு என்பதை, தவறு என்று சொல்லப் பிடிக்காமல், இவர்கள் பின்னால் சுற்றித்திரிபவர்களும் இவர்களின் திரிபுகளாகவே தோற்றி மறைகின்றனர். இவர்களை கடந்து செல்கையில், மூத்திர சாக்கடையின் வாசம் உங்களை திரும்பிப்பார்க்க வைக்கலாம். இந்நிலையில் இவர்களின் தாய், தந்தையரை நினைத்து என் மனதுடன், நீங்களும் வேதனைப்பட துவங்கலாம்.

நேற்றய ஞாபகங்களை நானும், நீங்களும் மட்டும்தான் ஞாபகப்படுத்தி, இவர்கள் மீதான ஒப்பீடுகளை கட்டிக்கொண்டு இருக்கையின் விளிம்பினில் அமர்ந்து, எழுந்து வரவேண்டியிருக்கிறது. இன்றே வாழ்ந்து, இன்றே முடிந்துவிட நினைக்கும் இவர்களுக்கு இதுபற்றிய அக்கறையெல்லாம் தேவையற்றது.

வெற்றுக்கௌரவங்களை சுமந்தபடி போலியான முகங்களை சுமந்து திரியும் இவர்களை பார்க்கும் பொழுது, வாழ்வாதாரத்திற்காக தன்னையே விற்றுப்பிழைக்கும் வேசிகள் உயர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். முகஸ்துதி பாடியபடி பைகளின் கணத்தினை நோட்டமிடுமிடும் இவர்களை பார்க்கும் பொழுது, எம் ஆர் டிக்கு வெளியில் இசைக்கருவிகளை மீட்டி தனது தேவையை பறைசாற்றி வாழ முயன்றுகொண்டிருக்கும் கண்ணற்ற ஒருவன் உயர்ந்து விடுகிறான்.

யாரும் இவர்களிடத்தில் கேட்காதபொழுதும், தலையசைத்து குதுகழிக்க புதிதாய் தோன்றுபவர்கள் மத்தியில், தன் கோரமுகத்தின் தான்தோன்றி நாவால் நக்கி  நக்கி திருப்தியடைவதோடு, இவனது பயணித்தின் வெளிப்பாடு முடிந்துவிடுகிறது. இதற்கும் இருவர் கை தட்டிச்செல்வது உச்சபட்ச நகைச்சுவை. சில நேரங்களில் நானும் ஓருவனாய் இதில் இருந்ததை நீங்கள் நினைக்கா விட்டாலும்  அந்த வெட்கக்கேட்டையும் ஞாபகப்படுத்துகிறேன்.

கல்லால் அடிப்பதாக நினைத்து, ஒரு புல்லை தூக்கி எறிந்துவிட்டு ஓடுபவனை ஓடவிட்டு, இவர்கள் ஒட்டுமொத்த குருரத்தையும் அவன் மீது வீசி எறிவதாக நினைத்தபடி, தோள் மீது கைபோட்டு நட்பு பாரட்டி நடந்து செல்ல முற்படுபவனின் மீது காறி உமிழத்தொடங்கும் பொழுதுஇ வெளிப்படும் சுயம் பற்றி இவர்களுக்கு கொஞ்சமும் வெட்கமில்லை. இவர்கள் ரோட்டில் சென்ற பொழுது ஏசிய ஒருத்தியை ஞாபகபடுத்திக்கொண்டு,  தூங்கா பொழுதின் நீளும் இரவினில் கண்ணை மூடிக்கொண்டு மனைவியை புணர்தலின்ஊடாக, சொல்லப்படாது விடுபட்ட வார்த்தைகளுக்கான குரூரத்தினை வெளிப்படுத்தி தான் உயர்ந்துவிட்டதாகவே ஓலமிடுகிறான்.

இவர்களும், இவர்களுக்கு பின்னேயுமான  துர்நாற்றத்தில்……… தொன்மையான ஒன்று சிக்கிக்கொண்டு விடுபடா நீட்சியில் அழுதுகொண்டிருப்பது தெரியாது, நானும், நீங்களும் உறங்கச் செல்லலாம். கனவில் தொடரும் துர்நாற்றத்துடன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s