நான் என்னை காதலிக்கிறேன் வேறொரு மனவெளியில் …

  ‘வேறொரு மனவெளிசிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைதொகுப்பு நூல் வெளியீட்டு விழா ஏப்ரல் 30 ஞாயிறுக்கிழமை மாலை7.00 மணிக்கு சிங்கப்பூரிலில் அமைந்துள்ள தேசிய நூலகத்தில் நடைபெற்றது.

தலைமை வணக்கமாய் திருமதி மீரா மன்சூர் அவர்கள் கவிஞர்வெண்பாஇளங்கோ எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடியதையடுத்து விழா தொடங்கியது. நிகழ்வின் நெறியாளராக கவிஞர் .வீ.விசயபாரதி பொறுப்பேற்று காலம் கடந்து தொடங்கிய விழாவினை கட்டுக்குள் வைத்துக்கொள்ள ஒவ்வொரு பேச்சாளரின் அறிமுகப்படுத்திலின் போதுஇவர் சிறுகதைகள் பல எழுதினாலும் இன்றுதான் முதன் முதலாக சிறு உரையாற்றவிருக்கிறார்”,  “இன்று ஒரு நாள் மட்டும் உங்கள் பாசமிகு தம்பி பாலுவை கருமித்தனமாக வாழ்ந்துங்கள்என்றும் நகைச்சுவைததும்ப நெறிபடுத்திய பொழுதெல்லாம் விழாவிற்கு வந்தவர்கள் முகங்களில் தாரளபுன்னகையை தந்துசென்றது.

இந்நூலின் தொகுப்பாளரும் தங்கமீன் பதிப்பகத்தின் உரிமையாளருமான எழுத்தாளர் பாலுமணிமாறன் வரவேற்புரையுடன், ஏற்புரையம் ஆற்றிய உரையில் இந்தகு தொகுப்பு வெளியிட என்ன காரணம் என்றால் சிங்கப்பூர் என்ற வட்டத்திற்கு வெளியில் இலக்கிய படைப்புகள் கவனம்பெறவும், அதன் மூலம் சிங்கப்பூர் தமிழர்களின் வாழ்க்கை சக தமிழர்களிடம் பகிந்துகொள்ளவும், இதன்மூலமாக இந்த எழுத்தாளர்கள் இன்னும் நிறைய படைப்புகளை படைக்கும் உந்துசக்தியாக இருக்ககூடுமென்தே உண்மை என்று சொல்லி, இந்த தொகுப்பின் மூலம் கிடைக்ககூடிய உபரித்தொகையிலிருந்து புத்தகம் போடுவதற்கு (கவிதை தொகுப்பு தவிர்த்த) வசதியில்லாதவர்களுக்கு, சிங்கப்பூர் மதிப்பில் 500.00 வெள்ளி தங்கமீன் பதிப்பகத்தின் சார்பாக உதவிதொகை வழங்கப்படும். மறைந்த எழுத்தாளர் உதுமான்கனி நினைவு உதவித்தொகையாக இந்த தொகை வழங்கபடும் என்று கூறியது இன்னும் பல எழுத்தாளர்கள் சிங்கப்பூரில் நூல் வெளியீடு செய்வதற்கான ஒரு களம் திறகப்பட்டுள்ளதாகவே தோன்றியதுமேலும் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தை உலகமெங்கும் கொண்டுசெல்லும் நோக்கில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தோடு இணைந்து தமிழவேள் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையை அமைத்துள்ள முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திரு.முஸ்தபா அவர்களுக்கு இந்த நூலினை  சமர்பிப்பதையும் நினைவுகூர்ந்தார்.

இந்த நூலில் இடம்பெற்ற  சிறுகதைகளை தேர்வுசெய்த சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர்கள் இராம.கண்ணபிரான், முனைவர் ஸ்ரீ.லெட்சுமி, மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகம்மது ஆகியோர் இந்த நூல் எப்படி உருவானது என்றும் அதில் இவர்சகளின் பங்களிப்பு பற்றியும் சற்றே விரிவாக பேசினர்.

எழுத்தாளர் இராம.கண்ணபிரான் முயற்சியும் ஆக்கமும் என்ற அணுகுமுறையில் வேறொரு மனவெளி உருவான கதையையும், அதற்கு யாரெல்லாம் எவ்வகையில் உதவிபுரிந்தனர் என்று நினைவு கூர்ந்து, பாலுமணிமாறனின் ஒரு வருடத்திய உழைப்பால் சிங்கப்பூரில் பெண்எழுத்தாளர்களின் சிறுகதைகளை ஆவணப்படுத்தபட எடுத்த முதல் முயற்சி என்றும், அமைப்புகள் செய்யவேண்டியதை தனியொரு மனிதராக செய்துல்லது இங்கு சிறப்பு என்று பேசினார்.

முனைவர் ஸ்ரீ.லெட்சுமி பேசியபொழுது உங்களின் பிரச்சினைகளை எழுத்தாங்குங்கள் அப்பொழுதான் இப்பிரபஞ்சம் முழுமைக்கும் உங்களின் எழுத்துக்கள் ஆக்ரமிக்கும் என்று எழுத்தாளர்களுக்கு வேண்டுகொள்விடுத்து, சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பெண்கள் நிறைய எழுதுவதற்கு முன்வரவேண்டும் என்றார்.

மலேசிய எழுத்தாளர் சை.பீர்முகமது அவர்கள் நகைச்சுவை ததும்ப பேசினார் அதுவும் தடதட என்று 5மணித்துளிகளை ஞாபகத்தில் வைத்து இந்நூலில் இடம்பெற்றுள்ள எழுத்தாளர்கள் ஜெயந்திசங்கர், மாதங்கி, நூர்ஜஹான் சுலைமான், சிவஸ்ரீ என்று குறிப்பிட்டு சொல்லி வீட்டிற்கு பின்கட்டு, முன்கட்டு என்று இருக்கும். இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகள் வாயிலாக பின்கட்டைவிட்டு முன்கட்டிற்கு வந்திருப்பதாகவும், அண்மைகாலமாக சிங்கப்பூரில் தொய்வடைந்திருந்த எழுத்தாளர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் எழுத முற்பட்டுள்ளனர் என்று மனம்திறந்து பாரட்டினார்.

எழுத்தாளரும் மலேசிய எழுத்தளார் சங்கத் தலைவருமான ராஜேந்திரன் அவர்கள் பேசியபொழுது மூத்த தலைமுறைக்கும் இளைய தலைமுறைக்கும் இடையில் ஒரு இடைவெளியிருக்கின்றது. அதனை  அகற்ற என்ன செய்யவேண்டும் என்ற நாம் மட்டுமல்ல உலகமுழுவதும் சிந்தித்துகொண்டிருக்கின்றனர். பெண்களின் ஆளுமை பல்வேறு துறைகளில் அதிகரித்துள்ளது அதைதான் நான் இங்கும்பார்ப்பதாகச்சொல்லி இங்கு இருக்கும் பெண் எழுத்தாளர்களை எல்லம் மலேசிய தலைநகருக்கு வரவழைத்து ஒரு மலேசியாவில் உள்ள பெண் எழுத்தாளர்களுன் ஒரு நாள் கலந்துரையாடலை ஏற்படுத்திதர ஆவலாக உள்ளதாக தனது அன்பின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பின்னர் பேசிய எழுத்தாளர் புதுமைத்தேனி மா.அன்பழகன் புதுமைப்பெண்கள் என்ற பார்வையில் அவ்வையார், ஒக்கூர் மாசத்தையார், காக்கைபாடினியார், பாரிமகளிரர் என்று இன்னும் பலரை ஞாபகப்படுத்தி உங்களைப்பார்க்கையில் இவர்கள்தான் என்நினைவிற்கு வருகிறார்கள் என்றும், ஒரு நூல் எவ்வளவு பெரியதாக்கத்தை உண்டுபண்ணமுடியும் என்று மேலைநாட்டு இலக்கியபடைப்பு ஒன்றினை மேற்கோள்காட்டிப் பேசினார்.

நூலாய்வு செய்த தொலைக்காட்சி தொடர்களின் இயக்குனர் திரு.முகமது அலியின் நிதானமான பேச்சில் இதனை ஆய்வு விமர்சனம் எற்ற அடிப்படையில் பார்க்காமல் என் மனபதிவாக பாருங்கள் என்று வேண்டுகோள்விடுத்து, தலைப்பே சற்று சிந்திக்கவைப்பதாகவும், இதுபது பெண் எழுத்தாளர்கள் எழுதியுள்ள இருபது சிறுகதைகளில், ஒன்பது சிறுகதைகள் ஆணின் பார்வை அல்லது ஆண்சார்ந்த கதைகளாக இருகக்கிறது. இந்தொகுப்பில் உள்ள எல்லாக்கதைகளையும் தான் படித்ததாகவும் அதற்கான சான்றே இது என்று நுடம், புரு, புன்னகை என்ன விலை, உள்ளிட்ட பலகதைகளை மேலோட்டமாகச் சொல்லியும், பொழப்பு, நான் என்னை காதலிக்கிறேன், ஞயம்பட உரை இந்த மூன்று கதைகளும் என்னை மிகவும் கவர்துள்ளதாக சற்றே வரிவாக பேசினாலும், பல்வேறுமுகங்களுக்கிடையே இப்படிப்பட்ட எழுத்துக்களையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் பெருமூச்சு மட்டும்தான் தோன்ற முடியும் என்றால் பந்தங்கள், சடங்குகள், தேவைக்கான உடன்படிக்கை, வர்த்தகம் இதில் எதுதான் நம்மை இணைக்கிறது என்று தேடலுக்கான அதிர்வுகளை ஏற்படுத்திச் சென்றார். இவர் குறிப்பிட்ட மூன்று கதைகளின் கதாசிரியர்களில் இருவர் வேறொரு மனவெளியில் சஞ்சரித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை.

நிறைவாக விழாவிற்கு தமிழகத்திலிருந்து வருகைபுரிந்த திரைப்பட இயக்குனர்பருத்தி வீரன்அமீர்ரின் பேச்சு இயல்பாகவும், எதார்த்தமாகவும் இருந்தது. நான் புத்கங்களை நிறைய படித்தில்லை ஆனால் மனிதர்களை நிறைய படித்திருக்கிறேன் என்று தொடங்கி, பால்யம் தொட்டு பள்ளிகளில் படிப்பில் இரண்டாம் மாணவனாகவே வந்ததும் சில வகுப்புகளில் பெயில் ஆனபின் படிப்பதற்கான மனநிலையின்றி இருந்தும், யாரவது ஒருவரால் கல்லூரி படிப்பு வரை கடந்து சென்றதைபற்றி சொல்லி ஒரு வெற்றியை கொடுத்தபின் நான் நிறையபடிப்பதாக நினைத்து இதுபோன்று நிறைவிழாக்களுக்கு அழைப்பதாகவும் பலரும் பலவிதமான புத்தகங்களை கொடுத்துசெல்வதும் அவை அத்தனையும் எனது அலுவலகத்தில் என்இருபுறமும் அழகாகமட்டும் அடிக்கிவைத்திருந்தும், இலக்கியத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத பொழுதும் பல எழுத்தாளர்களுக்கும் எனக்கு நட்பாக அமைந்துள்ளதை நினைவுறுத்தி அப்படி எழுத்தாளார் சாருவிதேதிதா ஒருமுறை அவரது வீட்டிற்கு அழைத்து நிறையபுத்தககள் கொடுத்து இரண்டுநாள் கழித்து தொடர்புகொண்டு எந்த புத்தகத்தை முதலில் படித்தீர்கள் என்று வினவ, நான் என்னத்தை சொல்ல என்றபொழுது சிரிப்பொலி எழுந்து அடங்கியது. இந்த தொகுப்பு கூட எனக்கு பதினைந்து தினங்களுக்கு முன்பே கிடைத்துவிட்டபொழுதும், நாளை வாசிக்கலாம், நாளைவாசிக்கலாம் என்று நாட்கள் நகர்ந்துஇ பின் விமானத்தில் வரும்பொழுதும் படிக்க நினைத்து முடியாமல், இன்றாவது படிக்கலாம் என்று ஒரு பக்கத்தை திருப்பினால் நம்பினால் நம்புங்கள் அந்த பக்கத்தில் டேய் ஆமீரு என்று இருந்தது. இப்ப சொல்லுங்க இதுக்கு மேல நான் படிப்பேனா என்றபொழுது சாருவிற்கு எழுந்த அதே சிரிப்பலை இவருக்கு முன் பேசிய எழுத்தாளர்கள் என்னபேசினார்களோ அதை நினைவுகூர்ந்து அதனை வலியுறுத்தியும், இங்கு இருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் நான் மதிக்கத்தக்கவர்கள் போற்றதக்கவர்களே. புதுமைப்பெண்னை படைந்த பாரதியி இருந்திருப்பின் இந்த விழாவிற்கு அவரே தலைமையேற்றிருப்பார் என்று சொன்னபொழுது விழாவிற்கு வந்த யாரோஒருவர் சத்தியமான வார்த்தை என்றது என்செவிப்பறையில் மோதிச்சென்றது. தன்னை பற்றி குறிப்பிட்டபொழுது என்னுடைய கருத்துக்களை சொல்லவேண்டியது என்னுடைய கடமை என்றும் உங்களை போன்று எழுத்தாளானாக வில்லையெனினும் அதைதான் நான் திரைதுறைவாயிலாக செய்வதாகவும் சொல்லி, எழுத்தாளார்கள் எந்த ஒரு நிர்பந்தத்தின் அடிபபடையிலும் எழுதாதீர்கள் கட்டுட்பாடுகளை வைத்துக்கொள்ளாதீர்கள் என்று,  ஒரு அரசனின் கீரிடத்திற்கு எந்த மரியாதை கிடைக்குமோ அந்த மரியாதைதான் இந்ததொகுப்பில் உள்ள இருபது எழுத்தாளர்களுக்கும்நூல்ஆய்வு செய்து முககது அலி குறிப்பிட்ட அந்த மூன்று கதைகள் அந்த கீரிடத்தில் பதிக்கபட்ட முத்துக்கள் என்று எழுத்தாளர்களுக்குள் மனத்தளர்வு வரக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த தொகுப்பில் உள்ள சிறுகதைகளை படிக்காவிட்டாலும் இருபது கதைகளுமே மரியாதைக்கு உரிய கதைகளாகவே இருக்கும் என்று நம்புவதாக மனதில் ஒன்றுமில்லா வந்துவிழுந்தவை எல்லாம் அமீர் மீதான மதிப்பினை இன்னும் கூட்டவே செய்திருக்கும்.

முன்னதாக அன்பின் ஊற்று திரு அப்துல் ஜலீல் தலைமையேற்க, இயக்குனர் அமீர் நூலினை வெளியிட, முஸ்தபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திரு.மு.முஸ்தபா அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வோறொரு மனவெளியில் இடம்பெற்றுள்ள இருபது பெண் எழுத்தாளர்களுக்கும், புரவலர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

தக்கமீன் பதிப்கம் எற்பாடு செய்து, தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இவ்விழாவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என்று பலர் கலநதுகொண்டனர்.

இதற்கு முன்பே கவிஞர் மனுஸ்யபுத்தினை சிங்கப்பூருக்கு வரைவழைத்து இலக்கிய சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது, சிங்கப்பூர் மலேசிய இலக்கியம் நேற்று இன்று நாளை கலந்துரையாடலுக்கு ஏற்பாடுசெய்ததன் தொடர்சியாக வேறொருமனவெளியை வெளியீடு செய்த பாலுமணிமாறனின் முயற்சி சிங்கப்பூர் இலக்கியத்தினை பரந்துபட்ட தளத்திற்கு எடுத்துச்செல்லும் முகமாகவே காணநேருகிறது. சிங்கப்பூர் எழுத்தாளர்கள் இதுபோன்ற முயற்சிகளை அடுத்தடுத்து எதிர்நோக்ககூடும் .

 குறிப்பு: இந்த விழாவின் செய்திபற்றிய குறிப்பினை புகைப்படத்துடன் வெளியிட்ட யுகமாயினிஜீன்-08 இதழுக்கு நன்றி

வேறொரு மனவெளியில்

பாண்டித்துரை

சிங்கப்பூர

 

 

 

 

 

 

இவர்களுக்கு பின்னேயுமான துர்நாற்றத்தில்………

ஏன் தான் இவர்கள் இப்படி இருக்கிறார்களோ. ஒன்று, இரண்டாய் நடக்கத்தொடங்கியதன் ஞாபகங்களை வேண்டுதலின் பெயரிலேயே புதைத்து விடுகின்றனர். அவனுக்கும், இவனுக்கும் வித்தியாசம் தெரியாத இவர்கள் எல்லாம் எப்படிமாமனிதராய் மாறமுடியும்? வேண்டுமெனில் மாமா மனிதராய் மாறக்கூடும்!

தவறு என்பதை, தவறு என்று சொல்லப் பிடிக்காமல், இவர்கள் பின்னால் சுற்றித்திரிபவர்களும் இவர்களின் திரிபுகளாகவே தோற்றி மறைகின்றனர். இவர்களை கடந்து செல்கையில், மூத்திர சாக்கடையின் வாசம் உங்களை திரும்பிப்பார்க்க வைக்கலாம். இந்நிலையில் இவர்களின் தாய், தந்தையரை நினைத்து என் மனதுடன், நீங்களும் வேதனைப்பட துவங்கலாம்.

நேற்றய ஞாபகங்களை நானும், நீங்களும் மட்டும்தான் ஞாபகப்படுத்தி, இவர்கள் மீதான ஒப்பீடுகளை கட்டிக்கொண்டு இருக்கையின் விளிம்பினில் அமர்ந்து, எழுந்து வரவேண்டியிருக்கிறது. இன்றே வாழ்ந்து, இன்றே முடிந்துவிட நினைக்கும் இவர்களுக்கு இதுபற்றிய அக்கறையெல்லாம் தேவையற்றது.

வெற்றுக்கௌரவங்களை சுமந்தபடி போலியான முகங்களை சுமந்து திரியும் இவர்களை பார்க்கும் பொழுது, வாழ்வாதாரத்திற்காக தன்னையே விற்றுப்பிழைக்கும் வேசிகள் உயர்ந்தவர்களாகத் தெரிகிறார்கள். முகஸ்துதி பாடியபடி பைகளின் கணத்தினை நோட்டமிடுமிடும் இவர்களை பார்க்கும் பொழுது, எம் ஆர் டிக்கு வெளியில் இசைக்கருவிகளை மீட்டி தனது தேவையை பறைசாற்றி வாழ முயன்றுகொண்டிருக்கும் கண்ணற்ற ஒருவன் உயர்ந்து விடுகிறான்.

யாரும் இவர்களிடத்தில் கேட்காதபொழுதும், தலையசைத்து குதுகழிக்க புதிதாய் தோன்றுபவர்கள் மத்தியில், தன் கோரமுகத்தின் தான்தோன்றி நாவால் நக்கி  நக்கி திருப்தியடைவதோடு, இவனது பயணித்தின் வெளிப்பாடு முடிந்துவிடுகிறது. இதற்கும் இருவர் கை தட்டிச்செல்வது உச்சபட்ச நகைச்சுவை. சில நேரங்களில் நானும் ஓருவனாய் இதில் இருந்ததை நீங்கள் நினைக்கா விட்டாலும்  அந்த வெட்கக்கேட்டையும் ஞாபகப்படுத்துகிறேன்.

கல்லால் அடிப்பதாக நினைத்து, ஒரு புல்லை தூக்கி எறிந்துவிட்டு ஓடுபவனை ஓடவிட்டு, இவர்கள் ஒட்டுமொத்த குருரத்தையும் அவன் மீது வீசி எறிவதாக நினைத்தபடி, தோள் மீது கைபோட்டு நட்பு பாரட்டி நடந்து செல்ல முற்படுபவனின் மீது காறி உமிழத்தொடங்கும் பொழுதுஇ வெளிப்படும் சுயம் பற்றி இவர்களுக்கு கொஞ்சமும் வெட்கமில்லை. இவர்கள் ரோட்டில் சென்ற பொழுது ஏசிய ஒருத்தியை ஞாபகபடுத்திக்கொண்டு,  தூங்கா பொழுதின் நீளும் இரவினில் கண்ணை மூடிக்கொண்டு மனைவியை புணர்தலின்ஊடாக, சொல்லப்படாது விடுபட்ட வார்த்தைகளுக்கான குரூரத்தினை வெளிப்படுத்தி தான் உயர்ந்துவிட்டதாகவே ஓலமிடுகிறான்.

இவர்களும், இவர்களுக்கு பின்னேயுமான  துர்நாற்றத்தில்……… தொன்மையான ஒன்று சிக்கிக்கொண்டு விடுபடா நீட்சியில் அழுதுகொண்டிருப்பது தெரியாது, நானும், நீங்களும் உறங்கச் செல்லலாம். கனவில் தொடரும் துர்நாற்றத்துடன்.

காதலில் தொடங்கிய என் பயணம்

 

மலேசிய தமிழ் இலக்கிய உலகில் காதல் ஏற்படுத்திச்சென்ற வசந்தம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதன் தொடர்ச்சியாய் 3-மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்த வல்லினம் இதழோ மலேசிய இளம் படைப்பாளிகளுக்கு உலகளாவிய வாசகப்பரப்பை பெற்றுத்தந்துள்ளது. இவ்விரு இதழ்களின் மூலமாக எண்ணற்ற இளம் படைப்பாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் சிலர் உலகம் தழுவிய வாசகர் பரப்பை தொட்டுச்சென்றதென்னவே உண்மை.

 

அப்படி நிலவெளியில் தடம்படித்தவர்களாக .நவீன், சந்துரு, பா..சிவம், அகிலன், மஹாத்மன், யுவராஜன், தோழி, பூங்குழலி என்ற ஒரு பேரலை எழுந்துள்ளது. ஆமாம் எழுந்துள்ளது. இங்கு குறிப்பிட்ட படைப்பாளிகள் எல்லோருமே எனக்கு காதலாகி பின் வல்லினம் வழியேதான் அறிமுகம். குறிப்பாக மஹாத்மன் எழுதுகின்ற  பத்திகளும், கட்டுரைகளும் என்னை மிகவும் கவர்ந்தவை.

 

தமிழகத்தையொத்த பரந்துபட்ட மலேசிய தமிழ் இலக்கிய ஆர்வளர்களுக்கு இந்த ஒரு (காதல் இதழ் தற்பொழுது வெளிவருவதில்லை. இதன் நீட்சியாகவே வல்லினம் மலர்ந்துள்ளது) இதழ் போதுமானதா என்றால் யானைக்கு சோளப்பொறி கொடுத்த கதை தான்இன்னொரு கதையும் ஞாபத்திற்கு வருகிறது பூனைக்கு யார் மணிகட்டுவது? அப்படி .நவீன் சார்ந்த நட்பு வட்டங்கள் மணி கட்ட, இன்றோ அகிலனும், மஹாத்மன்னும் எனக்கு கிடைத்துள்ளார்கள்.

 

இந்த வெளி போதுமானதா என்றால் இல்லை. இதில் சிங்கப்பூர் படைப்பாளிகள்வேறு சில பக்கங்களை வசியம் செய்துவிடுகின்றனர். இத்தகு சூழலில் இருமாத இதழாக அநங்கம் என்கிற இதழ் (தனிச்சுற்று) மலேசிய மண்ணில் மலர்ந்துள்ளது.

 

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளாரான s.இராமகிருஸ்ணனின் வாழ்த்துகளுடன் மும்முனை தாக்கங்களாய் படைப்பாளிகள்விமர்சகர்கள்வாசகர்கள்-ளை இணைப்பதாக அநங்கம் (ஜீன்-08 பதிப்பு) வெளிவந்துள்ளது. மலேசிய சிறுகதைவெளியல் மிகச்சிறந்த சிறுகதையொன்றை விட்டுச் செல்ல காத்திருக்கும் கே.பாலமுருகன் இவ்விதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரும் எனக்கு காதலால் அறிமுகப்படுத்தப்பட்டவரே.

 

அநங்கம் இதழ் எனக்கு தமிழ்வெளியின் வனம்தனை ஞாபகப்படுத்துகிறது. ஞாபகம் என்று சொல்லவருவது வனம் போன்று பக்கஅளவில் ஒத்துவருகிறது என்பது மட்டுமே.

 

அநங்கம் முதல் இதழில் மஹாத்மன், யுவராஜன், கே.பாலமுருகன் இவர்களின் சிறுகதைகளும்

 

சீ.முத்துச்சாமி, .நவீன், செ.நவீன் இவர்களின் பத்திகளும்

 

பாண்டித்துரை (நான்), தோழி, ரமேஸ்.டே, கவிதா, .மணிஜெகதீசன் இவர்களின் கவிதைகளுடன் வெளிவந்துள்ளது.

 

மலேசிய பெருவெளியில் அநங்கம் இதழுக்கான இடத்தினை கட்டமைப்பது கே.பாலமுருகன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினருக்கும், வாசகர்ளாகிய நம்முடைய பொறுப்புகளாகும்.

 

அநங்கம் இதழ் சிறப்புற

நட்புடன் வாழ்த்துவது

 

பாண்டித்துரை

சிங்கப்பூர்