“கலவை”

15.06.2008 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழிமையத்தில் சபா.இராஜேந்திரன் அவர்களின்கலவைமுதல் சிறுகதைதொகுப்பு (தங்கமீன் பதிப்பக வெளியீடு) வெளியடப்பட்டது.

 

இந்த வெளியீட்டுவிழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பலருக்கும் பத்து தினங்களுக்கு முன்னரேகலவைசிறுகதை புத்தகத்தை அவர்களின் வீட்டுமுகவரிக்கு அனுப்பிவைத்துவிட்டார் நூலாசிரியர். காரணம் புத்தவெளியீட்டன்று தொடர்ந்து மாலை நடைபெற்ற வாசக கலந்துரையாடலே !

சிங்கப்பூர்ல் புத்தக வெளியீடு என்றால்  இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால்கலவை”  சிறுகதைதொகுப்போ வாசகனும் எழுத்தாளனும் சேர்ந்த கலவையை மையப்படுத்தி காலை 10.30 மணியிலிருந்து 12.30 வரை ஐந்து எழுத்தாளர்களின் பார்வையில் கலவை என்ற ஆய்வும் அதன்பின் 1.30 மணிமுதல் மாலை 4.30மணிவரை பத்து சிறுகதைகள் அடங்கியகலவைசிறுகதை  மீதான வாசகர்பார்வை அதற்கு நூலாசிரியரின் பதில் பின்னர் ஒட்டுமொத்த வாசகப்பார்வையின் தொகுப்புரை என்று பிரமிக்கசெய்யும்மளவு வித்தியாசமாக நடைபெற்றது இனிவரும் ஆரோக்கியமான புத்தகவெளியீட்டிற்கு முன்மாதிரியாக இருக்ககூடும்.

தங்கமீன் பதிப்பத்தின் ஏற்பாட்டால் நடைபெற்ற இவ்விழாவில் நிகழ்ச்சியை தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் நெறிப்படுத்திச்சென்றார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் சங்க கழக செயலாளர் சுபஅருணாச்சலம் வரவேற்றுப் பேசினார்.

என்பார்வையில்  கலவை என்று எழுத்தளார் புதுமைத்தேனி மா.அன்பழகன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் எழுத்தாளர் நா. ஆண்டியப்பன் எழுத்தாளார் குமாரி சூர்யரெத்னா கவிஞர் நீதிப்பாண்டி என்ற பாண்டித்துரை (நான்) ஒலி 96.8ன் மூத்த செய்திநிர்வாகி செ..பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார

மதிய உணவிற்குபின் எழுத்தாளர்கள் திரு.இரா.கண்ணபிரான் திருமதி.கமலாதேவி அரவிந்தன் இருவரின் கலைவைபற்றிய பார்வையிலான கட்டுரைகளின் வாசிப்பினையடுத்து திரு.அருண் மகிழ்நன் கலந்துரையாடலை வழிநடத்திச்செல்ல கதைக்கருவை பற்றி கலந்துரையாடியபொழுது  ஒருமாணவன்ஒரு நாள்ஒரு ஆசிரியைஎன்ற சிறுகதை பலரின் விமர்சனங்களுக்கு உட்பட்டது. ” தடுமாற்றம் ” ” இன்னசெய்தாரைபோன்ற சிறுகதைகளும் தொடர்ந்து அதிகம் விவாதிக்கப்பட்டது. மொழிபற்றிய பார்வையில் ஆங்கில கலப்புபற்றியும் ஆசிரியர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்  என்பதால் அதானாலான எதிர்பார்ப்புகள் என்று தொடந்த கலந்துரையாடலின் முடிவில் விமர்சகர் .சுப்பிரமணியம் தொகுப்புரையாற்றினார். இறுதியாக நூலாசிரியர் சபா.ராஜேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு பயிற்சிபட்டறையே. இதுபோன்ற நிகழ்வுகள்தான் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை ஆரோக்கியமாகவும், அடுத்தகட்ட நகர்வினை நோக்கி இட்டுச்செல்லும் காரணியாகவும் இருக்ககூடும்

நன்றி: www.tamiloviam.com              “கலவை” சிறுகதை தொகுப்பு வெளியீடு

பாண்டித்துரை

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s