அழைப்பிதழ்

ஜீலை20 அன்று நடைபெறவிருக்கும்

நானும் எனதுநண்பர்களும் இணைந்து எழுதியுள்ளபிரம்மாபுத்தகவெளியீட்டு விழாவிற்கு

 

அன்புடன் அழைக்கின்றேன்

பாண்டித்துரை

82377006

 

நூல்வெளியீடு

 

இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி மையம்

நாள்: 20 ஜீலை 2008 ஞாயிற்றுக்கிழமை

 நேரம்: மாலை 6.30 மணியளவில்

 

     பிரம்மா

 

தமிழ் வாழ்த்து: ஈழத்துத்தாய் வள்ளியம்மை சுப்பிரமணியம்

 

வரவேற்புரை:      தன்முனைப்புப் பேச்சாளர் கண்டனூர் சசிகுமார்

 

வாழ்த்துப்பா:   கவிஞர் சின்னபாரதி

 

விழாத் தலைமை

திருமதி. புஷ்பலதா கதிரவேலு

சிங்கப்பூர் தேசிய நூலக வாரிய அதிகாரி

 

 

இவர்களைப்பற்றி                                                         இவர்கள்

 

 

கவிஞர். கோட்டைபிரபு                       சொல்லருவி பெரி.சிவக்குமார்

 

கவிஞர். (நீதிபதி) பாண்டித்துரை    எழுத்தாளர். இராம.வைரவன்

 

கவிஞர். செல்வா                                   கவிஞர். திருமதி இன்பா

 

கவிஞர். காளிமுத்து பாரத்                கவிஞர். காதலுடன் கண்ணா

 

 

நூல் வெளியீடு

தமிழ்த் தொண்டர் போப்ராஜ் என்கிற நாகை தங்கராஜ்

(ஜோஸ்கோ டிராவல்ஸ்)

 

 

முதன்மை பிரதி பெறுபவர்

தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் BBM

(தலைவர். மாதவி இலக்கிய மன்றம்)

 

 

சிறப்புரை

சொல்லின் செல்வர்

முனைவர் இரத்தின வேங்கடேசன்

 

 

நிகழ்ச்சி நெறியாளர்: கவிதை நதி கவிஞர் .வீ. விசயபாரதி

 

நன்றியுரை:        கவிஞர் (நீதிபதி) பாண்டித்துரை

 

  பிரம்மா பிறக்கிறான்; வாழ்த்திட வாருங்கள்!

 

 

 

 

பிரம்மாக்களுடன்  இணைந்து

இன்முக அழைப்பு

.வீ.சத்தியமூர்த்தி கண்டனூர் சசிகுமார் சின்னபாரதி

அறிவுநிதி மணிசரவணன்

 

அலைபேசி தொடர்புக்கு

82377006 ஃ 90613810 ஃ 93969383

 

 

Advertisements

தென்றல்

 

 

தென்றலாய்
ஒரு கவிதையை வாசித்துக்கொண்டிருந்தாள்
கேட்டுக்கொண்டிருந்ததன் முடிவினில்
ன்றும் புரியவில்லை
ன்றுமட்டும் புரிந்தது
எனக்கு
மொழிப்பழக்கமில்லையென்பதை
சாவிகொடுக்கப்பட்ட பொம்மையுடனான
அவளின் சம்பாஷனை வழியே………………

“கலவை”

15.06.2008 ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ்மொழிமையத்தில் சபா.இராஜேந்திரன் அவர்களின்கலவைமுதல் சிறுகதைதொகுப்பு (தங்கமீன் பதிப்பக வெளியீடு) வெளியடப்பட்டது.

 

இந்த வெளியீட்டுவிழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட பலருக்கும் பத்து தினங்களுக்கு முன்னரேகலவைசிறுகதை புத்தகத்தை அவர்களின் வீட்டுமுகவரிக்கு அனுப்பிவைத்துவிட்டார் நூலாசிரியர். காரணம் புத்தவெளியீட்டன்று தொடர்ந்து மாலை நடைபெற்ற வாசக கலந்துரையாடலே !

சிங்கப்பூர்ல் புத்தக வெளியீடு என்றால்  இரண்டு மணிநேரத்திற்குள் முடிந்துவிடும். ஆனால்கலவை”  சிறுகதைதொகுப்போ வாசகனும் எழுத்தாளனும் சேர்ந்த கலவையை மையப்படுத்தி காலை 10.30 மணியிலிருந்து 12.30 வரை ஐந்து எழுத்தாளர்களின் பார்வையில் கலவை என்ற ஆய்வும் அதன்பின் 1.30 மணிமுதல் மாலை 4.30மணிவரை பத்து சிறுகதைகள் அடங்கியகலவைசிறுகதை  மீதான வாசகர்பார்வை அதற்கு நூலாசிரியரின் பதில் பின்னர் ஒட்டுமொத்த வாசகப்பார்வையின் தொகுப்புரை என்று பிரமிக்கசெய்யும்மளவு வித்தியாசமாக நடைபெற்றது இனிவரும் ஆரோக்கியமான புத்தகவெளியீட்டிற்கு முன்மாதிரியாக இருக்ககூடும்.

தங்கமீன் பதிப்பத்தின் ஏற்பாட்டால் நடைபெற்ற இவ்விழாவில் நிகழ்ச்சியை தங்கமீன் பதிப்பக உரிமையாளர் எழுத்தாளர் பாலுமணிமாறன் நெறிப்படுத்திச்சென்றார். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளார் சங்க கழக செயலாளர் சுபஅருணாச்சலம் வரவேற்றுப் பேசினார்.

என்பார்வையில்  கலவை என்று எழுத்தளார் புதுமைத்தேனி மா.அன்பழகன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் எழுத்தாளர் நா. ஆண்டியப்பன் எழுத்தாளார் குமாரி சூர்யரெத்னா கவிஞர் நீதிப்பாண்டி என்ற பாண்டித்துரை (நான்) ஒலி 96.8ன் மூத்த செய்திநிர்வாகி செ..பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார

மதிய உணவிற்குபின் எழுத்தாளர்கள் திரு.இரா.கண்ணபிரான் திருமதி.கமலாதேவி அரவிந்தன் இருவரின் கலைவைபற்றிய பார்வையிலான கட்டுரைகளின் வாசிப்பினையடுத்து திரு.அருண் மகிழ்நன் கலந்துரையாடலை வழிநடத்திச்செல்ல கதைக்கருவை பற்றி கலந்துரையாடியபொழுது  ஒருமாணவன்ஒரு நாள்ஒரு ஆசிரியைஎன்ற சிறுகதை பலரின் விமர்சனங்களுக்கு உட்பட்டது. ” தடுமாற்றம் ” ” இன்னசெய்தாரைபோன்ற சிறுகதைகளும் தொடர்ந்து அதிகம் விவாதிக்கப்பட்டது. மொழிபற்றிய பார்வையில் ஆங்கில கலப்புபற்றியும் ஆசிரியர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்  என்பதால் அதானாலான எதிர்பார்ப்புகள் என்று தொடந்த கலந்துரையாடலின் முடிவில் விமர்சகர் .சுப்பிரமணியம் தொகுப்புரையாற்றினார். இறுதியாக நூலாசிரியர் சபா.ராஜேந்திரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்.

புதிதாக எழுத வந்திருப்பவர்களுக்கு இந்நிகழ்வு ஒரு பயிற்சிபட்டறையே. இதுபோன்ற நிகழ்வுகள்தான் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை ஆரோக்கியமாகவும், அடுத்தகட்ட நகர்வினை நோக்கி இட்டுச்செல்லும் காரணியாகவும் இருக்ககூடும்

நன்றி: www.tamiloviam.com              “கலவை” சிறுகதை தொகுப்பு வெளியீடு

பாண்டித்துரை

 

அதிகாலை பூகம்பம்

 

 

                                                                         

 

எனது ப்ரத்யோகமான  pandiidurai@yahoo.com மின்னஞ்சலில் என்னுடைய  https://pandiidurai.wordpress.com வலைப்பக்கத்தையும் என்கிற வலைப்பக்கத்தையும் இணைத்திருந்தேன்.

 எழுத்தாளர் சாருவிற்கு சில மின்னஞ்சல்கள் அனுப்பத்தொடங்கியதை தொடர்ந்து அவ்வளவாக பதிவுசெய்யமால் இருந்த எனது நகுலன் வலைதளத்தை பின்னினைத்து நான் வலைதளத்தில் படித்த ஒரு கட்டுரையை நீங்கள் படித்திருக்கூடும் என்று சொல்லி அனுப்பியிருந்தேன்.

 

சமீபகாலமாக சாருஆன்லைன் மாற்றம் செய்தபின்னர் வலைதளம் பற்றிய பதிவுகளை சாரு  பதிவுசெய்வதால் எனது நகுலன் வலைதளம் கவனிக்கப்படக்கூடும் என்பதே (சாருவிற்கு எழுத்தளர் நகுலன்மீதான ஈடுபாடு பலரும் அறிந்த ஒன்றே). அப்படி நான் மாற்றம் செய்து பின்னினைத்ததற்கு முதல்நாள்தான் முகமறியா நண்பன் கென்னின் பிறந்தநாள்.

 

 

சாருவிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சலை இங்கு பின்னினைத்துள்ளேன்.

 

Re: hope charu

Saturday, 28 June, 2008 07:41

From: “charunivedita” <charunivedita@charuonline.com>

To: pandiidurai@yahoo.com


pesuvatharku niraiya irukkirathu….is this yr poem?  pl call me
xxxxxxxxxx  

 

 

எல்லாம் அமையவேண்டும் என்று சொல்வார்கள் அல்லவா. அன்று எனக்கு அப்படித்தான் போல, எனது முதலாளி பணிநிமித்தம் மலேசியா செல்ல நான் மட்டும் அலுவலகத்தில் இருந்ததால் உடனே சாருவிற்கு தொடர்பு கொண்டேன்.

 

சாருவிடம் நான் பேசியபொழுதெல்லாம்  ஐயா என்றே விளித்தேன் எனக்கு சங்கடமாகவே இருந்தது. சிங்கப்பூரில் நான் இப்படி பழக்கப்பட்டுவிட்டேன். உங்களின் கவிதைகளை பற்றிய பதிவினைதான் இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றார். கென் கவிதை பற்றி பேசியபொழுது என்னுள் பதட்டம், என் கவிதையாக பாவித்தே என்னிடம் பேசியதும் உடனே இல்லை ஐயா அவை எல்லாம் கென்னின் மடிநிறைய கற்கள்(மின்) கவிதைதொகுப்பிலிருந்து நான் தேர்ந்தெடுத்து கென்னை வாழ்த்திய வரிகள் என்றேன். (அப்படி சொல்லமல் விட்டிருந்தால் அன்றையபொழுதில் கென் தலைப்பிலான கவிதை பாண்டித்துரையின் கவிதை என்றே வெளிவந்திருக்கும்)

 

அப்பபேசுவதற்கு நிறைய இருக்கிறது கவிதை என்று வினவ

 

அது என்னுடைய கவிதை என்றேன்.

 

பால்யத்தின் கனவுகள் காலாவதியாகவிட்டன கவிதை என்று மீண்டும் வினவ

 

அதுவும் என்னுடைய கவிதை என்றேன்.

 

இரண்டு கவிதையும் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றார். பின்னர் உங்களின் கவிதைக்கு கீழே உங்களின் பெயரினை போட்டுவிடுங்கள் அப்பொழுதுதான் இதுபோன்ற பிரச்சினைகள் வராமலிருக்கும் என்றார், சரி என்றேன்.  (பேசிமுடித்தவுடன்  உடனே எனது கவிதைகளின் கீழே எனது பெயரினை பதிவுசெய்தேன், சிறுகதைகளில் சிலவற்றிற்கு மட்டும் முன்பே பதிந்திருந்தேன்பின்னர் கென்னின் கவிதைகளை அனுப்பவியலுமா என்றார். பின்னர் நகுலன் வலைதளப்பக்கத்தில் உள்ள அழகர்சாமி பற்றிவிசாரித்தார் குங்குமம் இதழில் வெளிவந்தது, எனக்கு அவரைபற்றி தெரியாது என்றுச் சொல்லி அந்த வலைப்பக்கத்தின் நோக்கத்தினை எடுத்துக்கூறினேன். (அதுவரையில் இரண்டுபதிவுகள்தான் நான் பதிவுசெய்திருந்தது. நகுலன் வலைதள நோக்கம்பற்றியெல்லாம் அப்பொழுது எழுதவில்லை)

 

அதவிட நமக்கு வேறவேலை என்னனு நினைத்துகொண்டு அடுத்த நிமிடமே மடிநிறைய கற்களை இறக்கிவைத்தேன், அப்படியே  கென்னின் இணையமுகவரியையும் அனுப்பிவைத்தேன். பின்னர் இந்த எண்ணிற்கு எப்பொழுது வேண்டும் என்றாலும் அழைக்கலாமா என்றேன், அழைக்கலாம் என்றார்.

 

கென்னை தொடர்பு கொண்டு சாருவிடம் பேசியதையும், சாரு உங்களின் கவிதைகள் பற்றி கேட்டதையும் சொல்லி நான் மடிநியை கற்களை அனுப்பிவிட்டேன் என்றபொழுது  சாருவிடமிருந்து வந்த மின்னஞ்சலை அனுப்பவியலுமா என்று கேட்டார் சாருவிடம் நான்பேசியதுபற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு அந்த ஒருவரி மின்னஞ்சலை அனுப்பினேன் (அதான்பா மேலே கொடுத்திருப்பது)  அத்துடன் ருவின் தொலைபேசியென்னும்.

 

சரி நம்மவலைப்பக்கம் பற்றிய செய்தி வரலாம் என நினைத்துக்கொண்டு அன்று விடுமுறை என்பதால் எனது வாரஇறுதிநாட்களுக்கான பயணத்தில் நான். (திங்களன்றே இணையபக்கம் மீண்டுவருவது) . மாலை கென்னிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது,   பாண்டி charuonline பார்த்திங்களா. கென் கவிதையும் உங்களின் கவிதையும் வந்துள்ளது என்றார், ரொம்ப சந்தோசமாக இருக்கு பாண்டி எல்லாம் உங்களாலதான் என்றார். என்ன கென் எனக்குபோய் நன்றி சொல்லிக்கொண்டு, எல்லாம் உன்னாலதான் உனக்குத்தான் நான் நன்றி சொல்லனும் என்றேன். (கென் என்ற தலைப்பிலானா கவிதையே என்னுடைய பிற கவிதைகளையும் சாரு படிக்க காரணமாக இருந்திருக்ககூடும் என்ற என்னுடைய எண்ணம்). கென்னிடம் விரிவாக பேச நேரமில்லை ஆனால் உடனே charuonline பார்க்கவேண்டி அருகே அலைந்து ஒரு nett  caff சென்று charuonline மட்டும் பார்த்துவிட்டுவந்துவிட்டேன். (என் மின்னஞ்சலை திறந்துபார்க்கவில்லை).

 

 மறுநாள் (ஞாயிறு) மீண்டும் கென்னிடமிருந்து அழைப்பு, பாண்டி ரொம்ப சந்தோசமா இருக்கேன் எனக்கு மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசினை நீ கொடுத்திருக்கிறாய் என்று, சாருவை சந்தித்ததும் அங்கே எனது நகுலன் பதிவு பற்றி பேசியதும் என்று சில நிமிட உரையாடலில் நான் கென்னிடம் கேட்டது, இதுக்கு முன்னாடி சாருவை நீங்கள் நேரில்  பார்த்து பேசியிருக்கிறீர்களா என்று…..   phone-ல் பேசினது கூடஇல்லை பாண்டி என்றபொழுது என்னாலும் உணரமுடிந்தது. சரி கென் சாருவிற்கு எப்படி உங்கள் எண் கிடைத்த என்று வினவ,  சாரு எனக்கு பிறந்நாள் வாழ்த்து சொல்லியதால் நான்தான் நன்றிசொல்ல நீங்கள் கொடுத்த எண்ணில்தொடர்பு கொண்டேன் அதன்பின்னர் நடந்ததுதான் இவைஎல்லாம் என்றார்.

 

 

பாண்டி இன்று charuonline பாருங்க என்றார் கென்.  ( கென் அனுமாதித்தது இயல்பாக எல்லோராலும் அனுமானிக்ககூடியதே ஆனால் அப்பொழுது அதன் வீரியத்தை எவராலும் அனுமானித்திருக்க முடியாது). இல்ல கென் அக்காவீட்டில் இருக்கிறேன் மாலைதான் என்னால் செல்லமுடியும் என்று, மாலை இணையதளத்திற்கு சென்று நான் திறந்தது  படித்தவுடனே அவ்வளவு மகிழ்ச்சி உடனே கென்னை தொடர்புகொண்டேன் ஆமா பாண்டி எனக்கே என்னுடைய சில நண்பர்கள் தொடர்புகொண்டு சொன்னபின்னாடிதான் போய்பார்த்தேன். உண்மையிலே பாண்டி இது எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் பாண்டி நன்றி என்றபொழுது, இல்லகென் நான் தான் உனக்கு நன்றிசொல்லனும் என்றேன் (கென்னின் மகிழ்ச்சியினை நானும் முழுமையாக எடுத்துகொண்டதே காரணமாக இருக்ககூடும்) .

 

பின்னர் எனது மின்னஞ்சலை திறந்தால் எனக்கு மிகப்பெரிய வருத்தம். ஆமாம் எல்லாம் முடிந்தபின்னர் இந்த மின்னஞ்சலை படிக்கிறேனே என்று பின்னர் சாருவிற்கு வருத்தம் தெரிவித்து திங்களன்று நீண்ட மின்னஞ்சல் அனுப்பினேன்.

 

இதுதான் சாருவிடமிருந்து எனக்கு வந்த மின்னஞ்சல்

Re: ken kavithaikal

Saturday, 28 June, 2008 09:50

From: “charunivedita” <charunivedita@charuonline.com>

To: “pandi durai” <pandiidurai@yahoo.com>

dear paandi
what a coincidence it is….i like ken’s poems and he likes me! 
beautiful…and another coincidence is yesterday is ken’s b.day and today i
am reading his poems!

whats his tel no.  there is a small surprise for u in an hour….wait and
see…

charu

pandi durai writes:

>
> அன்பின் சாரு
>  
>
உங்களிடம் தொலையாடியதில் மிக்க மகிழ்ச்சி. (பதட்டத்துடனே பேசினேன்)
>  
>
கென் மின் கவிதை தொகுப்பை இணைத்துள்ளேன்
>  
>
உங்களின் ஆலோசனைபடியே விரைவில் மாற்றம் செய்கின்றேன்.
>  
>
எனது வலைப்பக்கத்தில் கென் என்ற தலைப்பில் உள்ள கவிதைகள் தவிர்த்து பிற கவிதைகள் எல்லாம் என்னுடையவையே
>  
>
கென் வெறித்தனமான சாருவின் எழுத்துக்களை விரும்புபவன். உங்களை எதிர் வரும் பெங்களுர் சந்திப்பில் சந்திக்க ஆவலாகவும் இருக்கிறான்.
>  
>
கென்னின் வலைப்பக்கம் உங்களுக்காக http://www.thiruvilaiyattam.com/
>  
>  
>
என்றும் நேசிக்கவே விரும்பும்
>
பாண்டித்துரை

 

 

 

எனக்கு சாருவிடம் கேட்க சில கேள்விகள் இருக்கின்றன.

 

ஏன் சாரு உனக்கு வேறவேலையே இல்லையா.

 

வலைதள உலகம் இரத்தத்தை மட்டும்தான் பார்க்கவில்லை. ஆனால் அதனையும் தாண்டி வலிந்து, மொழிந்து இயங்கிக்கொண்டிருக்கிறது.

 

நீங்களே அறிந்து போலி டோண்டூ என்ற பட்டத்தை சுமந்தவரல்லவா 

 

படிச்சோமா அத்தோடவிட்டேமானு இல்லாம அது என்ன படித்ததில் பிடித்தது என்ற பதிவுவேற
 

இதனால உனக்கு என்ன கிடைக்கபோகுது சாரு ?

உன்னை சுத்தி எவனும் ஜால்ரா அடிக்க போவதில்லை. அப்படியே அடிச்சாலும் சிரிச்சுக்கிட்டு போயிடபோற ……

 

லக்கிலுக்கோ, பாண்டித்துரையா இணையத்தை செழுமைபடுத்த பணம் அனுப்ப போறதில்லை.

 

அப்புறம் ஏன் ?

 

அதுசரி அது என்ன உயிர்மையில் வெளிவந்த உலகநாயகனே  கட்டுரையில் வலைதளத்தில் நீ படித்த புனேயிலிருந்து பூபதியை   முதன்மைபடுத்தியெல்லாம் ஏன் எழுதுற. உனக்கு எழுத தெரியாது அதான் அங்க copy பண்ணி  இங்க paste  பண்ணுறனு சொல்லிக்கிறாங்க.

 

இதனால இரண்டுநாளு  நான், பூபதி, லக்கிலுக்குனு  காலர் தூக்கிவிட்டுக்கிட்டுத் திரியபோறோம்  அம்புட்டுத்தான்.

 

ம் சொல்ல மறந்துட்டேனே சாரு 
நகுலன் வலைதளத்தைபற்றி படித்துவிட்டு எனக்கு ஒரு இனிய தோழி எனக்கு கிடைச்சிருக்கா தெரியுமா அவளோட பேசும்போதெல்லாம் ஏதோ ஒன்று என்னில் எழுந்துஅடங்குகிறது
சாருவிற்குதான் நன்றிசொல்லனும் பாண்டிநீ எனக்கு கிடைச்சதுக்கு அப்படினா தெரியுமா !

 

பாரு சாரு உன்னால நான் சந்தோசமா இருக்கேன்உன் எழுத்தை படித்ததால என் தோழி சந்சோசமா இருக்க………

 

உனக்கு இதனால என்ன சாரு கிடைச்சிருக்கு . (பத்திரிக்கைக்கு எழுதுனாவாவது ஒரு 350ரூபாய் இரண்டு மாசம் கழித்து கிடைக்கும்)

 

அப்புறம் அது என்னசாரு 3வது எழுத்துலக வாரிசுனு கென்னை சொல்லியிருக்க. கென்னுக்கிட்ட உனக்கு எழுதி வைக்க பத்திரம் எதுவும் இல்ல தெரியுமா (ஒருவிதத்தில் உன்னமாதிரிதான் அவனும், இத்தனை நாளைக்கு முன்னாடி ஓசில வலைப்பூவவலைதளத்தில் பதிவுசெய்தான். இப்பதான் அவன் நண்பன் ஒருவன் இணைய தளத்தை சொந்தமா வாங்கி கொடுத்திருக்கான் ).

 

எவன் சொல்லாவிட்டாவும் இலக்கிய உலகின் தாசாப்தத்தில நீ இருக்கத்தான்போற அப்புறம் ஏன் இது எல்லாம் ……

 

எவன் ல்லா எழுதினா என்னஎழுதாட்டி என்னஅவன் அடுத்தத்துக்கு ம் எழுதஅட்வான்ஸ் வாங்கிட்டு இருக்கான் , நீ என்னடான்னா லைத்தம் , வாரிசுன்னு சொல்லிட்டு அலையனுமா ?


இனிமேலும்
நீ வலைதளத்தை படிப்ப
எழுதுவ
எனக்கு தெரியும்

ஏன்னா நீ சாருநிவேதிதா

நீ அடங்கவேமாட்டியானு வெளியில பேசிக்கிறாங்க சாரு..


சாரு

நீ கடந்துசெல்
நீயாக கடந்துசெல்
காத்திருக்கிறது நிசப்தம்


என்னடா மொக்கராசு (பாண்டித்துரை) உனக்கு என்ன பிரச்சினை இதல்லாம் இப்ப ஏன் சொல்லுதறனு கேட்கனும்னு நினைச்சிங்கனா

சும்மா இரண்டு உம்மா . எழுதனும்னு தோணுச்சு எழுத்திட்டேன்.

 

நன்றி: எழுத்தளார் சாருநிவேதிதா .
 
 
குறிப்பு :
 
சாருவிடமிருந்து கென்னின் படைப்புகளை படித்தபின்னர் வந்த மின்னஞ்சலை மேலே குறிப்பிட்டிருந்தாலும் பிடிஎஃப் வடிவிலும் அதனை இங்கு இணைத்துள்ளேன்.

 

 

பாண்டித்துரை

 

வாசிப்போம் சிங்கப்பூர் 2008

 

இந்த வருடம் 2008 வாசிப்போம் சிங்கப்பூர்  நிகழ்விற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எதிர்வரும் ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில் சிங்கப்பூரில் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார்.

 

இந்த சந்திப்பு சனி மற்றும் ஞாயிறு அன்று எல்லோரும் கலந்துகொள்ளும் பொதுச்சந்திப்பாக நிகழவுள்ளது. அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவம். எஸ்.ராமகிருஷ்ணன் -னின்  அனைத்து நூல்களும் சிங்கப்பூரின் பிரதான நூலகங்களில் இருக்கிறது.

 

 

பொதுசந்திப்பு பற்றிய விபரங்கள்

 

1. Saturday July 12 6.30-8pm
    Programme Zone,Central Lending Library
     100,
Victoria Street.2. Sunday July 13,

4.30-8pm
    Programme Zone,
   
Ang Mo Kio  Community Library.
 – nearest MRT –
Ang Mo Kio.

 

 

இந்த ஆண்டு எஸ்.ராமகிருஷ்ணன்னின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்  “பெயரில்லாத ஊரின் பகல்வேளை என்ற தொகுப்பாக தொகுத்துள்ளனர். இந்த தொகுப்பின் அடிப்படையில் ஒருநாள் கலந்துரையாடல் இரக்ககூடும்.

 

தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்

 

1. ஆண்கள் தெருவில் ஒரு வீடு
2. 
நம்மில் ஒருவன்
3. 
இடம் பெயர்தல்
4. 
தெரிந்தவர்கள்
5. 
தாவரங்களின் உரையாடல்
6. 
பெயரில்லாத ஊரின் பகல்வேளை
7. 
அந்தரம்
8. 
நத்தைகளின் புன்னகை

 

இந்த தொகுப்பை படித்து முடித்தபொழுதுபெயரில்லாத ஊரின் பகல்வேளை” சிறுகதை  எனக்கு இவரது புதினமானநெடுங்குருதி”-யை ஏனோ ஞாபகப்படுத்தியது.

 

பாண்டித்துர

நள்ளிரவும் தசாவதார மொக்கையும்

 

தலைப்பை பார்த்ததும் தசாவதாரம் திரைப்படத்தை நள்ளிரவில் பார்த்ததாக நினைக்கலாம். அப்படியொரு அபாயம் இதுவரையிலும் ஏற்படவில்லை. ஏன் எனில் இன்னும் நான் படத்தை பார்க்கவில்லை.

 

அப்புறம் எப்படி மொக்கைனு நீங்க………

 

நேற்று நள்ளிரவு என் தோழியிடம் தொலையாடிக்கொண்டிருந்தேன். இரவு உணவு, கொஞ்சம் இலக்கியம் என்று தொடர்ந்ததன் ஓரிடத்தில் தசாவதாரம் பார்த்துவிட்டீர்களா என்றேன். சரியான மொக்கை பாண்டி 150.00 ரூபாய் ப்ளாக்கில (அவர்களின் ஊரில்) டிக்கெட்வாங்கி 13 ம் தேதி அன்றே பார்த்தேன் என்ற பொழுது ,  இதற்கு பிறகு இந்த திரைப்படத்தை பற்றி தெரிந்துகொள்ள அவ்வளவாக நான் ஆர்வம் காட்டவில்லை. எனக்கு கமல்திரைப்படங்கள் ரொம்ப பிடிக்கும்பாண்டி ஆனா இந்த படம் செம்மமொக்கை பாண்டி என்று திரும்பவும் சொன்னார்.

 

மாயக்கண்ணாடி பார்த்தீர்களா என்றேன். ( அந்த நேரத்தில் ஏன் இந்த திரைப்படத்தை பற்றி நான் கேட்டேன் என்று இப்பொழுதும் புரியவில்லை ) .

 

போஸ்டரை பார்த்து ஏமாந்துபோய்விட்டேன் பாண்டி என்று அவள் பேசியது குழந்தை போல இருந்தது. சும்மா வித்தியாசமான கெட்டப்பில் சேரன் போஸ்டரை பார்த்து ஏமாந்து விட்டேன் என்றபடியே சிரித்துக்கொண்டிருந்தார் .

 

நானும்தான்……………

 

என் தோழிக்கு கமலிடமும், சேரனிடமும் பதில் இருக்காது என்பது தெரியும்.

 

சேரன் சார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சொன்னதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

பாண்டித்துரை