மஹ்மூத் தர்வீஷ் (1941 – 2008 )

தமிழின் தீவிர சிற்றிதழ்களின் அஞ்சலிக் கட்டுரைகள் மூலமாகத்தான் மஹ்மூத் தர்வீஷ் பற்றி அறிய நேர்ந்தது. மஹ்மூத்தின் முழுமையை இந்த கட்டுரைகளால் உணரமுடிந்தது. இதழ்களில் இடம்பெற்ற சில கவிதைகள் அத்துனையும் என்னை ஈர்க்க கூடியவையாகவே இருக்கின்றன.

15- தினங்களுக்கு முன்பு நான் மஹ்மூத்தை இவ் இதழ்களின் வாயிலாக அறிந்துகொண்டேன் என்றாலும் அன்றிலிருந்து இன்றுவரை என்னுள் அவரின் ஒரு கவிதை மட்டும் தினமும் சிலதடவையேனும் எட்டிப்பார்க்காமல் இருப்பதில்லை அந்தக் கவிதை ‘அடையாள அட்டை”

ஆங்கிலம் வழி தமிழில்: வ.கீதாஇ எஸ்.வி. ராஜதுரை

அடையாள அட்டை

எழுது
நான் ஒரு அராபியன்
எனது அடையாள அட்டை எண் 50000
எனக்கு எட்டுக் குழந்தைகள்
அடுத்த கோடையில் ஒன்பதாவது
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
தோழர்களுடன் கல் உடைப்பவன்
எனக்கு எட்டு குழந்தைகள்
அவர்களுக்காக
ஒரு ரொட்டித் துண்டை
ஆடைகளை நோட்டுப் புத்தகத்தைப்
பாறையிலிருந்து பிய்தெடுத்தவன்
உனது கதவைத் தட்டி யாசித்து நிற்பவனல்ல
உனது வாசற்படிகளில் முழந்தாளிடுபவனும் அல்ல
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
எனக்கொரு பெயருண்டு: பட்டம் இல்லை
கோபத்திலும் சுழலும் இந்த மண்ணில்
பொறுமையை கடைப்பிடிப்பவன்
எனது வேர்கள் ஆழப் புதைந்துள்ளன
யுகங்களுக்கு அப்பால்
காலத்துக்கு அப்பால்
நாகரிங்கள் உதிப்பதற்கும் முன்னதாக
ஸைப்ரஸ் மரமும் ஒலிவ மரமும்
தோன்றுவதற்கு முன்னதாக
களைகள் பரவுவதற்கு முன்னதாக

எனது மூதாதையர் கலப்பையின்
மைந்தர்கள்
மேட்டுக்குடியினரல்லர்
எனது பாட்டனார் ஒரு விவசாயி
பெருமை வாய்ந்த வழ்சாவழியில்
பிறந்தவர் அல்லர்
நாணலும் குச்சிகளும் வேய்ந்த
காவல்காரனின் குடிசையே என் வீடு
தந்தை வழிச் செல்வத்தைத் சுவீகரிக்கும்
பெயரல்ல என்னுடையது

எழுது
நான் ஒரு அராபியன்
முடியின் நிறம்: கறுப்பு,
கண்கள்: மண் நிறம்,
எடுப்பான அம்சங்கள்:
கஃபியேவைழ* என் தலையில் இறுக்கிப்
பிடிக்கும்
இந்த முரட்டு கயிறு,
முகவரி:
மறக்கப்பட்டுவிட்ட ஒரு தொலைதூரக் கிராமம்
அதன் தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை
கிராமத்து ஆண்கள்
வயல்களில் வேலை செய்கிறார்கள்
கல் உடைக்கிறார்கள்
இதில் உனக்கென்ன கோபம்?

எழுது
நான் ஒரு அராபியன்
எனது குடும்பத்தின் பழத்தோட்டத்தை
நானும் என் பிள்ளைகளும் உழும் நிலத்தை
நீ திருடிக்டிகொண்டாய்
எங்கள் பேரக் குழந்தைகளுக்காக
நீ விட்டுவைத்ததோ வெறும் பாறைகளே
நீ சொல்வதுபோல்
அவற்றையும் கூட
உனது அரசாங்கம் எடுத்துக் கொள்ளுமோ?

எனவே
எழுது
முதல் பக்கத்தில், முதலில்:
நான் யாரையும் வெறுப்பவன் அல்ல
யாருடைய நிலத்தின் மீதும் அத்துமீறி நடப்பவன் அல்ல
ஆனால் நான் பசியால் துடிக்கும் போது
எனது மண்ணை அபகரித்தவர்களின் சதையை
விழுங்குபவன் நான்
அச்சம் கொள்
எனது பசியை கண்டு
அச்சம் கொள்
எனது சினத்தை கண்டு

*கஃபியே – அரேபியர் அணியும் தலைப்பாகை
From afrar inquiry, London, January 1986.

நன்றி: உயிரெழுத்து – செப்டம்பர் 2008

வோட்கா புட்டியும் ஒரு கடவுளும்

 

சிதைவுறும் இரவில்

எப்போதாவது இசைக்கப்படும் பாடல்

எல்லோராலும் முனுமுனுக்கப்படுகிறது

புகைக்கப்பட்ட சிகரெட் துகள்களை சுமந்து

வோட்கா சாப்பிட்ட அயற்சியில்

கடவுளிடம் முறையிடுகிறேன்

எல்லா ஓசைகளையும் உள்வாங்கிக்கொண்டு

உடைந்து சிதறிய கண்ணாடிக்குடுவையின்

கடைசித்துளியை பருகச்சொல்ல

துண்டிக்கப்பட்ட உரையாடலுடன்

தொலைந்துபோகிறேன்

எனக்கான முத்தங்களை பிழிந்து

திறக்கப்படாத வோட்காபுட்டியுடன்

கடவுள்மாத்திரம் தேடத்துவங்க

துள்ளிக்குதிக்கும் மீன்குஞ்சுகளை கடந்து

பீறிடும் வேட்க்கைக்குள் பதுங்கிக்கொள்கிறேன்

வோட்கா புட்டியின் மூடியை

கடவுள் திறக்க  …….

 

©pandiidurai@yahoo.com

 

பாண்டித்துரை கவிதைகள்

அடுத்த பிறவியல்

நீங்கள்

யாராக பிறக்கவிரும்புகிறீர்கள்

 

நம்பிக்கையில்லை

 

இல்லை

இருந்தால்

பிறந்தால்

 

ஒரு நாய்க்குட்டியாக

 

இல்லை

மனிதர்களில்

 

ம்

அழுவதற்குமுன்

இறந்துவிடும்

சிசுவாக

 

 

சாலையை கடக்கமுற்பட்டபோது

விர்ரென்று சென்ற பேருந்தில்

சின்னாவையொத்த முகச்சாயலில்

யாரோவா?

சின்னாவா?

சின்னாவை

இப்போது நினைக்காவிட்டால்

பிறகெப்போதும் நினைக்கப்போவதில்லை

 

 

சிறு

தயக்கத்திற்கு பின்னர்

நீட்டிக்கப்பட்ட வாழ்க்கையில்

கேட்க்கக்கூடிய நபராக

அவர் இருந்திருக்கிறார்

 

 

வண்ணாத்தி பூச்சியின்

றெக்கை வெட்டப்பட்ட

குரூரம் நிரம்பிய

பால்யத்தின் பக்கங்களுக்கு அஞ்சி

முத்தங்கள் பற்றிய

கனவிற்காக

நாம் காத்திருக்கிறோம்.

 

 

பொய்யான ஒன்றை பேசிக்கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை ………………………………………………

 

 

 

©pandiidurai@yahoo.com