அடுத்த பிறவியல்
நீங்கள்
யாராக பிறக்கவிரும்புகிறீர்கள்
நம்பிக்கையில்லை
இல்லை
இருந்தால்
பிறந்தால்
ஒரு நாய்க்குட்டியாக
இல்லை
மனிதர்களில்
ம்…
அழுவதற்குமுன்
இறந்துவிடும்
சிசுவாக
சாலையை கடக்கமுற்பட்டபோது
விர்ரென்று சென்ற பேருந்தில்
சின்னாவையொத்த முகச்சாயலில்
யாரோவா?
சின்னாவா?
சின்னாவை
இப்போது நினைக்காவிட்டால்
பிறகெப்போதும் நினைக்கப்போவதில்லை
சிறு
தயக்கத்திற்கு பின்னர்
நீட்டிக்கப்பட்ட வாழ்க்கையில்
கேட்க்கக்கூடிய நபராக
அவர் இருந்திருக்கிறார்
வண்ணாத்தி பூச்சியின்
றெக்கை வெட்டப்பட்ட
குரூரம் நிரம்பிய
பால்யத்தின் பக்கங்களுக்கு அஞ்சி
முத்தங்கள் பற்றிய
கனவிற்காக
நாம் காத்திருக்கிறோம்.
பொய்யான ஒன்றை பேசிக்கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை பார்த்துக்கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை எழுதிக்கொண்டிருக்கிறேன்
பொய்யான ஒன்றை ………………………………………………