மரணம் பற்றி
பேசிக்கொண்டிருந்தார்கள்
துர் தேவதைகளின்
நடமாட்டத்தையும்
இன்னும் கொஞ்சம் நேரத்தில்
எல்லோரும் செத்து வீழப்போவதாகவும்
பிழைப்பதற்கான வலைகள் யாவும்
அறுபட்டு விட்டதால்
மனிதன் இல்லா உலகம்
கட்டியெழுப்பபோவதாகவும்
அதன் அதிபராக இன்னார் வரக்கூடும் என்றும்
இன்னும் ஏதேதோ பேசியதன் முடிவினில்
ஞாபகப்படுத்திக்கொண்டனர்
இந்த நூற்றாண்டின்
ஆகக் கொடிய ஆயுதமான
மனிதர்களின் சாம்ராஜ்யத்தை
கடந்து கொண்டிருக்கிறோம்
இன்னும் கொஞ்சம் நேரத்தில்
மரணத்தை சுமந்துகொண்டு
மழை வரக்கூடும்
நாம்
தப்பிச் செல்வதற்கு
இரண்டு தோணி செய்யவேண்டும்.