மழை ஒரு மௌனம்

கடந்த வாரத்தில் ஒருநாள் மாலை 6-மணியளில்  குடைக்கு மேல் மழையுடன் தேக்காவின் வீதிகளை கடந்துகொண்டிருக்கையில், சனிக்கிழமை சந்திக்காத ஒரு நிகழ்வு பற்றியும், ஞாயிற்றுகிழமை சந்திக்கவிருக்கும் ஒரு நிகழ்வுபற்றியும் அதிகரிக்கும் மழைதுளியை போன்று ஒரு விரிவான பதிவு எழுதவேண்டும் என்ற எண்ணம் உயர உயர எழுந்துகொண்டிருந்தது. அந்த நேரமும் அதன் பின்னான சில மணிநேரமும் மனம் எல்லாம் பதிவு பற்றிய சிந்தனையில்……

 

அன்றிரவு பேருந்தில் பயணிக்கும்போது பரிச்சயமான ஒரு குரல் ஒலி 96.8ல் நிகழ்வுகளை தொகுத்துகொண்டிருக்கையில் எண்ண தொகுத்துகொண்டிருக்கிறார் என்று செவிப்பறையை அந்த பக்கம் திருப்பினாலும் பிறகு வீட்டிற்கு வந்து யோசித்தபோதுதான் தோன்றியது தொகுப்பாளினி மீனாட்ச்சியின் குரல் அவ்வளவு மட்டும்தான் மனதில் பதிந்திருந்தது அது என்ன நிகழ்வாக இருக்கூடும்? என்ன இரண்டு பாட்டுபோட்டு சிரிச்சு சிரிச்சு நேயர்களிடம் பேசியிருக்ககூடும் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

 

பதிவு பற்றிய சிந்தனையுடன் அன்றிரவு எதிரி என்சைக்ளோபீடியா எனும் நூலினை வாசிக்கத் தொடங்கினேன். அதில் வரக்கூடிய ஒரு பத்தி நான் எழுத நினைத்ததை சொல்லிச் செல்வதாக தோன்ற அந்த பதிவையே இங்கே இணைத்துவிட்டால் என்ன என்று தோன்றியது.

 

நான் நினைத்ததை பதிந்திருப்பின் புரிதலற்றே அந்த பிண்டங்கள்  எழுத்துக்களை அணுகியிருக்ககூடும். இந்தபதிவும் கூட அவர்களுக்கான ஒன்றை கடந்து நம் எல்லோருக்குமான ஒன்றை தொட்டுச்செல்வதில் இப்போது ஓவென்ற மழைக்கு பின்னான அந்த நிசப்தம், மௌனம் என்னை பக்குவபடுத்தி அரணவனைத்துக்கொள்கிறது.

 

 

கிழக்கு பதிப்பகம் வெளியீடான எழில் கிருஷ்ணன் எழுதியஎதிரி என்சைக்ளோபீடியா” என்ற நூலில் பக்கம் 49 — ல்

 

ஹாலிவுட் சினிமாப் பிரியர்களுக்கு ஹாலி பெரி  (Halle Berry)  என்கிற நடிகையை தெரியாமல் இருக்கமுடியாது. 2002-ஆம் வருடம் மான்ஸ்டர் பால் என்கிற படத்துக்காக ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர். ஆஸ்கர் விருதை வாங்கிய முதல் கறுப்பின நடிகையும் அவர்தான்.

 

ஆஸ்கர் விருது வழங்கும் ஒருநாளுக்கு முன்பு அமெரிக்கர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இன்னொரு சுவாரஸ்யமான விருது வழங்கும் விழா நடப்பது வழக்கம். கோல்டன் ராஸ்பெரி (Golden raspberry Awards) என்பது அந்த விருதின் பெயர். ஆஸ்கரில் சிறந்த நடிகர்களுக்கான விருது வழங்குவதற்கு எதிர்பதமாக இந்த விழாவில் மோசமான படங்கள், மோசமான நடிப்பு என்று ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட படங்களுக்கு விருது வழங்குவார்கள். (98 ஆம் வருடம் L.A.Confidential  படத்துக்கு சிறந்த மோசமான திரைக்கதை என்று ராஸ்பெரி விருது வழங்கிய மறுநாள், அதே படத்துக்கு சிறந்த திரைக்கதை விருதை ஆஸ்கர் அறிவித்தது.)

 

மழையில் நனையும் புறா, குளிரில் இறகுகளை உதறிக்கொள்வது மனிதன் பார்வைக்கு ரம்யமான காட்சி. ஆனால் புறா படும் கஷ்டம் யாரறிவார். ஆஸ்கர் விருதைப் பெற மறக்காமல் ஆஜர் ஆகும் திரையுலகினர் ராஸ்பெரி விருது வழங்கும் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்கள். உனக்கு திறமையே இல்லை என்று ஊரறிய வழங்கப்படும் விருதை மனவலியோடும் அவமானத்தோடும் வாங்கவேண்டிய நிர்பந்தம்தான் என்ன! அமெரிக்காவாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் மனித மனம் என்பது ஒன்றுதானே.

 

2002-ஆம் வருடம் ஆஸ்கர் வாங்கிய பிறகு ஹாலி பெரிக்கு எங்கு சென்றாலும் விசேச மரியாதை கிடைத்தது. அவர் சினிமாவில் தும்மினாலும்கூட அடடா என்ன தத்ரூபமாக தும்மல் போடுகிறார் என்று வியக்கும் ரசிகர் கூட்டம் அவருக்கு பெரிகியது.

 

2005-ம் வருடம் கேட்வுமன் என்கிற ஒரு படத்தில் நடித்தார் ஹாலி பெரி. அந்த படத்துக்குக் கையெழுத்திடும்போது ஹாலி பெரியின் உள்ளுணர்வு ஏதாவது சொல்லியதா என்று தெரியாது. ஆனால் படம் வெளிவந்தபிறகு விமர்சிகர்கள் படத்தையும் ஹாலிபெரியையும் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்கள் ஏற்கனவே புண்பட்டிருந்த ஹாலி பெரியின் மனதில் ராஸ்பெரி ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது. அந்த வருடத்துக்கான மோசமான நடிப்பு என்று அவர் பெயரை அறிவித்தனர்.

 

வழக்கம்போல ஆஸ்கர் விருது வழங்கும் தினத்துக்கு முதல்நாள் ராஸ்பெரி விழா கோலாகலமாக ஆரம்பமானது. ஹாலிவுட் வழக்கப்படி ஹாலி பெரி இந்த விருதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று விழா அமைப்பினர் தானாக முடிவு செய்துகொண்டனர். ஆனால் ஹாலிபெரி மாயைகளை தகர்த்தெறிந்தார். ஆஸ்கர் விழாவுக்கு வருவதுபோல் பளபளப்பான உடையில் வந்து சேர்ந்தார். முதல் முறையாக ராஸ்பெரி விழாவை ஒரு முன்னணி நடிகை அலங்கரித்த சம்பவம் அது. விழா பரபரப்பை எட்டியது.

 

அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது புன்னகையோடு சென்று தலைதாழ்த்தி விருதைப் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக மைக் முன்னால் வந்து நின்றார். விழாவுக்கு வந்த பார்வையாளர்களுக்கு படபடப்பு ஏற்பட்டது. என்ன பேசப்போகிறார் ஆஸ்கர் வாங்கிய என்னையா அவமானப்படுத்துகிறார்கள் என்று விருதைத் தூக்கி எறியப்போகிறாரா?

 

என் திரை வாழ்க்கைக்கு இந்த விருது மிகவும் முக்கியமானது. நேற்று நான் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்தேன். இன்று தலைக்குனிகிற அளவுக்கு ஒரு மோசமான படத்தில் நடித்து என் ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறேன்.

 

நான் இந்த விழாக்கு நேரில் வந்து விருதைப் பெற்றுக்கொண்டது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும் இதில் என்ன இருக்கிறது! எப்படி வெற்றிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாயோ அதுபோல தோல்விகளையும் சுமக்க கற்றுக்கொள்ளவேண்டும். என்று சிறு வயதுமுதலே என் அம்மா அறிவுறுத்தியிருக்கிறார். தோல்விகளை ஏற்றுக் கொள்ளாதவர்களால் வெற்றியை நெருங்க முடியாது என்பது என் வாழ்வின் சித்தாந்தம்.

 

பார்வையாளர்கள் கைவலிக்கக் கை தட்டினார்கள். விழா அமைப்பினர் ஹாலியின் பேச்சில் உருகி மேடம் இனி உங்களை இந்த விழாவில் பார்க்ககூடாது என்று சொல்லி வழியனுப்பிவைத்தார்கள்.

 

நன்றி: கிழக்கு பதிப்பகம்+எழில் கிருஷ்ணன்+எதிரி என்சைக்ளோபீடியா+மழை

©pandiidurai@yahoo.com

நனவாகும் கனவு

eelam1 

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள்

அப்துல்கலாம்

சொல்லிக்கொண்டே இருப்பார்

 

ஆழமான கனவு

கொஞ்சம்

நீளமான கனவு

 

ஆமாம்

என் கனவை

நாளை பிறக்கும்

குழந்தையும்

சுமக்கப் போகிறது(தா)

 

நரை விழுந்த

கிழத்தின் துடிப்புகூட

நம்மில் பாதியாய்

 

ஞாபகபடுத்திக் கொள்கிறேன்

ஒவ்வொரு செல்லடியின்

சப்தத்திற்கு பின்பு

நாளை நனவாகும் என்று

 

விதைக்கப்பட்ட ஆன்மா(க்கள்)

உலவிக்கொண்டிருக்கிறது

அந்த நம்பிக்கை

விடியும் ஒரு நாள்

ஈழத்தில்

 

(இந்த கவிதை 16.11.08 அன்று சிங்கப்பூர் பெக்கியோ சமூகமன்றத்தில் கவிச்சோலை அமைப்பு நடத்திய மாதந்திர கவிதைப் போட்டியில் நனவான கனவு என்ற தலைப்பில் வாசிக்கப்பட்டது)

©pandiidurai@yahoo.com

வடக்கு வாசல் – அக்டோபர் 08

சாலையை கடக்கமுற்பட்டபோது vv

விர்ரென்று சென்ற பேருந்தில்

சின்னவையொத்த முகச்சாயலில்

யாரோவா?

சின்னவா?

சின்னவை

இப்போது நினைக்காவிட்டால்

பிறகெப்போதும் நினைக்கப்போவதில்லை

***

சிறு

தயக்கத்திற்கு பின்னர்

நீட்டிக்கப்பட்ட வாழ்க்கையில்

கேட்கக்கூடிய நபராக

அவர் இருந்திருக்கிறார்

***

வண்ணாத்திப் பூச்சியின்

றெக்கை வெட்டப்பட்ட

குரூரம் நிரம்பிய

பால்யத்தின் பக்கங்களுக்கு அஞ்சி

முத்தங்கள் பற்றிய

கனவிற்காக

நாம் காத்திருக்கிறோம்.

***

பொய்யான ஒன்றைபேசிக்கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை கேட்டுக் கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்

பொய்யான ஒன்றை……………………………………………………………………..

 

பாண்டித்துரை (சிங்கப்பூர்)

நன்றி: வடக்கு வாசல்

 

சாருவின் பக்கத்தில்

 charu1

Thanks to Ken & Nagulan

 

 

 

 

Yes.  சாருவின் பக்கத்தில் வர இவர்கள் இருவரும்தான் காரணம்.

 

சாருவின் பக்கத்தில் உக்காட்ர்ந்து இருக்கவில்லை நிற்கவில்லை இப்படி நிறைய இல்லை இல்லை

 

அப்புறம் எப்படி பக்கத்தில்?

 

கென்னின் பிறந்தநாளுக்கு வாழ்த்துசெய்தியை எனது வலைபக்கத்தில் பதிவுசெய்ய….

 

அந்த நேரத்தில் சாருவிற்கு எதற்கோ மின்னஞ்சல் செய்ய……

 

அந்த மின்னஞ்சலில் பிண்ணிணைக்கப்பட்ட எனது பாண்டித்துரை மற்றும் நகுலன் வலைதளங்கள் சாருவால் கவனிக்கப்பட……..

 

ஜீலை 28 அன்று மட்டும் என்னுடைய வலைதளத்தை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்கள் பார்வையிட்டு சென்றுள்ளனர் (ஆனா ஒரே ஒரு பின்னூட்டம்தான் வந்திச்சுங்கிறதை நான் இங்க சொல்லலை சரியா )

 

சாருவின் இணையப்பக்கத்தில் யாராவது ஒருவரின் வலைப்பக்கம் பற்றி படித்த பிடித்தனு ஒரு பதிவு போட்டுட்டா போதும் மறான் நாளே அந்த வலைப்பக்கத்தில் ஒரு நன்றி.

 

ஜீலை

 

ஆகஸ்ட்

 

செப்டம்பர்

 

அக்டோபர்

 

நவம்பர்…… ம்

 

நான் இன்னும் நன்றி சொல்லவே இல்லை

 

மறந்தாத்தானே சொல்வதற்கு…..

 

சொன்னா மறந்துடுவோம்மே…….

 

இப்படி சிலர் பேசிக்கொண்டிருக்கையில்!

 

 

பிறந்த குழந்தையின்

தொடுதல் 

அந்த ஸ்பரிசம் போன்றது

சாருவின் பக்கத்தில்

என்

வலைதளத்தை பார்த்தது

 

அடுத்த ஆண்டு கூட நான் இந்த பதிவை போட்டிருக்கலாம் அந்த அளவிற்கு அந்த ஸ்பரிசம்………………………..

thanks Charu

 

love

pandiidurai

சாருநிவேதிதாவிற்கு எப்போதுமான என் நன்றிகள்

பாண்டித்துரை

 

 

 

http://charuonline.com/aug08/vk23.html

 

http://charuonline.com/aug08/kelvi10.html

 

http://charuonline.com/june08/pp7.html

 

http://charuonline.com/june08/pp6.html

 

நன்றி:சாருஆன்லைன்.காம்

 

 

 

 ©pandiidurai@yahoo.com

 

 

யாமிம்

துயில் எழுந்த முகத்துடன்
முன்பு ஒருமுறை
நான் வரைந்த ஓவியத்தை
அவளுள் ஒளித்து வைத்திருந்தாள்
தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவள்
எப்போதும் இல்லாத
சாந்தமாக இருந்தாள்
அப்பா
மாமா
அம்மாயி
நண்பர்கள்…..
ஆனந்தமயமான
கண்ணீர்த்துளிகளைப் பரிசளித்தபடி
அவளின் அழகை தரிசித்தனர்
கொஞ்சமும் பயமில்லாமல்
படுத்திருந்தாள்
பரிசளிக்க
என்னிடம் ஒன்றும் இல்லை
சட்டைப்பையில் கூட
முத்தம் குடுக்க நினைத்தேன்
இப்போதைக்கு வேண்டாம் என்பதாய்
புன்னகைத்தபடி சயனித்திருந்தாள்
இதற்கு முன்பு
சேகரித்த சொற்களுடன்
விடுபட்ட ஒற்றைச் சொல்லையும் இணைத்து
“ல்” லில் மாலை அணிவித்தேன்
அப்பாவின் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தவள்
விடுவித்து
என் கையை ஏந்திக்கொண்டாள்
மென்மையாக வருடத்தொடங்கினேன்
நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம்
மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளப்போவதாகவும்
மறுப்பேதுமின்றி
முத்தங்கள் கொடுக்கப்போவதாகவும்
நிலவில் கட்டப்போகும் வீட்டைப்பற்றியும்
யாமிம்
அவளை ரொம்ப பிடித்திருந்தது
இறந்த பின்பு.

©pandiidurai@yahoo.com

 

நன்றி:உயிரோசை (உயிர்மை.காம்)