மழை ஒரு மௌனம்

கடந்த வாரத்தில் ஒருநாள் மாலை 6-மணியளில்  குடைக்கு மேல் மழையுடன் தேக்காவின் வீதிகளை கடந்துகொண்டிருக்கையில், சனிக்கிழமை சந்திக்காத ஒரு நிகழ்வு பற்றியும், ஞாயிற்றுகிழமை சந்திக்கவிருக்கும் ஒரு நிகழ்வுபற்றியும் அதிகரிக்கும் மழைதுளியை போன்று ஒரு விரிவான பதிவு எழுதவேண்டும் என்ற எண்ணம் உயர உயர எழுந்துகொண்டிருந்தது. அந்த நேரமும் அதன் பின்னான சில மணிநேரமும் மனம் எல்லாம் பதிவு பற்றிய சிந்தனையில்……

 

அன்றிரவு பேருந்தில் பயணிக்கும்போது பரிச்சயமான ஒரு குரல் ஒலி 96.8ல் நிகழ்வுகளை தொகுத்துகொண்டிருக்கையில் எண்ண தொகுத்துகொண்டிருக்கிறார் என்று செவிப்பறையை அந்த பக்கம் திருப்பினாலும் பிறகு வீட்டிற்கு வந்து யோசித்தபோதுதான் தோன்றியது தொகுப்பாளினி மீனாட்ச்சியின் குரல் அவ்வளவு மட்டும்தான் மனதில் பதிந்திருந்தது அது என்ன நிகழ்வாக இருக்கூடும்? என்ன இரண்டு பாட்டுபோட்டு சிரிச்சு சிரிச்சு நேயர்களிடம் பேசியிருக்ககூடும் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டேன்.

 

பதிவு பற்றிய சிந்தனையுடன் அன்றிரவு எதிரி என்சைக்ளோபீடியா எனும் நூலினை வாசிக்கத் தொடங்கினேன். அதில் வரக்கூடிய ஒரு பத்தி நான் எழுத நினைத்ததை சொல்லிச் செல்வதாக தோன்ற அந்த பதிவையே இங்கே இணைத்துவிட்டால் என்ன என்று தோன்றியது.

 

நான் நினைத்ததை பதிந்திருப்பின் புரிதலற்றே அந்த பிண்டங்கள்  எழுத்துக்களை அணுகியிருக்ககூடும். இந்தபதிவும் கூட அவர்களுக்கான ஒன்றை கடந்து நம் எல்லோருக்குமான ஒன்றை தொட்டுச்செல்வதில் இப்போது ஓவென்ற மழைக்கு பின்னான அந்த நிசப்தம், மௌனம் என்னை பக்குவபடுத்தி அரணவனைத்துக்கொள்கிறது.

 

 

கிழக்கு பதிப்பகம் வெளியீடான எழில் கிருஷ்ணன் எழுதியஎதிரி என்சைக்ளோபீடியா” என்ற நூலில் பக்கம் 49 — ல்

 

ஹாலிவுட் சினிமாப் பிரியர்களுக்கு ஹாலி பெரி  (Halle Berry)  என்கிற நடிகையை தெரியாமல் இருக்கமுடியாது. 2002-ஆம் வருடம் மான்ஸ்டர் பால் என்கிற படத்துக்காக ஆஸ்கர் விருது வாங்கிய ஹாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவர். ஆஸ்கர் விருதை வாங்கிய முதல் கறுப்பின நடிகையும் அவர்தான்.

 

ஆஸ்கர் விருது வழங்கும் ஒருநாளுக்கு முன்பு அமெரிக்கர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் இன்னொரு சுவாரஸ்யமான விருது வழங்கும் விழா நடப்பது வழக்கம். கோல்டன் ராஸ்பெரி (Golden raspberry Awards) என்பது அந்த விருதின் பெயர். ஆஸ்கரில் சிறந்த நடிகர்களுக்கான விருது வழங்குவதற்கு எதிர்பதமாக இந்த விழாவில் மோசமான படங்கள், மோசமான நடிப்பு என்று ரசிகர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட படங்களுக்கு விருது வழங்குவார்கள். (98 ஆம் வருடம் L.A.Confidential  படத்துக்கு சிறந்த மோசமான திரைக்கதை என்று ராஸ்பெரி விருது வழங்கிய மறுநாள், அதே படத்துக்கு சிறந்த திரைக்கதை விருதை ஆஸ்கர் அறிவித்தது.)

 

மழையில் நனையும் புறா, குளிரில் இறகுகளை உதறிக்கொள்வது மனிதன் பார்வைக்கு ரம்யமான காட்சி. ஆனால் புறா படும் கஷ்டம் யாரறிவார். ஆஸ்கர் விருதைப் பெற மறக்காமல் ஆஜர் ஆகும் திரையுலகினர் ராஸ்பெரி விருது வழங்கும் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கமாட்டார்கள். உனக்கு திறமையே இல்லை என்று ஊரறிய வழங்கப்படும் விருதை மனவலியோடும் அவமானத்தோடும் வாங்கவேண்டிய நிர்பந்தம்தான் என்ன! அமெரிக்காவாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் மனித மனம் என்பது ஒன்றுதானே.

 

2002-ஆம் வருடம் ஆஸ்கர் வாங்கிய பிறகு ஹாலி பெரிக்கு எங்கு சென்றாலும் விசேச மரியாதை கிடைத்தது. அவர் சினிமாவில் தும்மினாலும்கூட அடடா என்ன தத்ரூபமாக தும்மல் போடுகிறார் என்று வியக்கும் ரசிகர் கூட்டம் அவருக்கு பெரிகியது.

 

2005-ம் வருடம் கேட்வுமன் என்கிற ஒரு படத்தில் நடித்தார் ஹாலி பெரி. அந்த படத்துக்குக் கையெழுத்திடும்போது ஹாலி பெரியின் உள்ளுணர்வு ஏதாவது சொல்லியதா என்று தெரியாது. ஆனால் படம் வெளிவந்தபிறகு விமர்சிகர்கள் படத்தையும் ஹாலிபெரியையும் கிழி கிழி என்று கிழித்துவிட்டார்கள் ஏற்கனவே புண்பட்டிருந்த ஹாலி பெரியின் மனதில் ராஸ்பெரி ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது. அந்த வருடத்துக்கான மோசமான நடிப்பு என்று அவர் பெயரை அறிவித்தனர்.

 

வழக்கம்போல ஆஸ்கர் விருது வழங்கும் தினத்துக்கு முதல்நாள் ராஸ்பெரி விழா கோலாகலமாக ஆரம்பமானது. ஹாலிவுட் வழக்கப்படி ஹாலி பெரி இந்த விருதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று விழா அமைப்பினர் தானாக முடிவு செய்துகொண்டனர். ஆனால் ஹாலிபெரி மாயைகளை தகர்த்தெறிந்தார். ஆஸ்கர் விழாவுக்கு வருவதுபோல் பளபளப்பான உடையில் வந்து சேர்ந்தார். முதல் முறையாக ராஸ்பெரி விழாவை ஒரு முன்னணி நடிகை அலங்கரித்த சம்பவம் அது. விழா பரபரப்பை எட்டியது.

 

அவரது பெயர் அறிவிக்கப்பட்டபோது புன்னகையோடு சென்று தலைதாழ்த்தி விருதைப் பெற்றுக்கொண்டார். அடுத்ததாக மைக் முன்னால் வந்து நின்றார். விழாவுக்கு வந்த பார்வையாளர்களுக்கு படபடப்பு ஏற்பட்டது. என்ன பேசப்போகிறார் ஆஸ்கர் வாங்கிய என்னையா அவமானப்படுத்துகிறார்கள் என்று விருதைத் தூக்கி எறியப்போகிறாரா?

 

என் திரை வாழ்க்கைக்கு இந்த விருது மிகவும் முக்கியமானது. நேற்று நான் அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில் இருந்தேன். இன்று தலைக்குனிகிற அளவுக்கு ஒரு மோசமான படத்தில் நடித்து என் ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறேன்.

 

நான் இந்த விழாக்கு நேரில் வந்து விருதைப் பெற்றுக்கொண்டது எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருக்கும் இதில் என்ன இருக்கிறது! எப்படி வெற்றிகளை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறாயோ அதுபோல தோல்விகளையும் சுமக்க கற்றுக்கொள்ளவேண்டும். என்று சிறு வயதுமுதலே என் அம்மா அறிவுறுத்தியிருக்கிறார். தோல்விகளை ஏற்றுக் கொள்ளாதவர்களால் வெற்றியை நெருங்க முடியாது என்பது என் வாழ்வின் சித்தாந்தம்.

 

பார்வையாளர்கள் கைவலிக்கக் கை தட்டினார்கள். விழா அமைப்பினர் ஹாலியின் பேச்சில் உருகி மேடம் இனி உங்களை இந்த விழாவில் பார்க்ககூடாது என்று சொல்லி வழியனுப்பிவைத்தார்கள்.

 

நன்றி: கிழக்கு பதிப்பகம்+எழில் கிருஷ்ணன்+எதிரி என்சைக்ளோபீடியா+மழை

©pandiidurai@yahoo.com

One thought on “மழை ஒரு மௌனம்

  1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

    வாருங்கள் பாண்டிதுரை !

    அன்புடன்
    கோவி.கண்ணன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s