அறிவுநிதி, அரவிந்தன், அய்யப்பமாதவன்

 

இவர்களைபற்றி என்ன சொல்லப்போகிறேன் என்பது இந்தப்பதிவின் நோக்கமல்ல.

  இது என்னுடைய 

    100– வது பதிவு

 

 

அறிவுநிதி, ( இளமுகில) அரவிந்தன, அய்யப்பமாதவன்

இவர்களுக்கு

 

இந்த பதிவு சமற்பணம்

 

ariv1 

அறிவுநிதி

 

 

சிங்கப்பூர் வந்தபின்புதான் என் எழுத்து கொஞ்சம் பரவலாக்கப்பட்டது. அப்படி எழுதிக்கொண்டிருக்கையில், என் எழுத்தினை புரட்டிப்போட்டு அதன் மறுபக்கத்தை தொடுவதற்கு முதல்காரணம் அறிவுநிதி. ஏதோ ஒன்றை வித்தியாசப்படுத்தி ஒவ்வொருமுறை எழுதியபின் அதை அறிவுநிதியிடம் வாசிக்கும்போது சலனமில்லாமல் அவரை கடந்து செல்ல என் கை பிடித்து முன் செல்லச் சொல்லி கையை கட்டிக்கொண்டு, புன்னகைத்துகொண்டு என்னுள் பிறக்கின்ற ஒவ்வொரு கவிதையிலும் எங்கோ ஓரு இடத்தின் பின் நின்றுகொண்டிருக்கிறார்.

 

cap

(இளமுகில்) அரவிந்தன்

 

என் கவிதைகளில் 10 க்கு 9½ கவிதைகளை, கவிதையை நீ செய்யிறய்யா,  உணர்வா வரணும் என்று என்னுடன் சமரசம் செய்துகொள்ளாமல்  எழுத்துக்களை விமர்சித்து,  பின் உன் முயற்சியை நான் கண்டிப்பாக பாரட்டவேண்டும் என்று என் ஒவ்வொரு அசைவுகளையும் உள்வாங்கி, சக நண்பர்களிடம் என்னைபற்றி பரப்பிய பிம்பஙகளுக்காகவாவது ஆக சிறந்த கவிதை அதுவும் (இளமுகில்) அரவிந்தனுக்கு பிடித்த ஒன்றாக எழுதிவிட இன்றும் முயன்றுகொண்டிருக்கிறேன்.

 

copy-of-ca035

அய்யப்பமாதவன்

 

ஒவ்வொரு முறை தொடர்பு கொள்ளும் போதும் ஒலிவழியே செவிப்பறையில் தெரிந்துவிழும் முதல் வார்த்தை தம்பி உற்சாகமா இருக்கியாடா. இப்ப என்ன புதிதாய் எழுதுன, அண்ணன் ஒரு கவிதை சொல்றேன் கேக்கிறியா, பக்கத்தில கோணாங்கி இருக்கிறார் பேசிறியா என்று சொல்லி முடிக்கும் முன்னே கோணாங்கியின் கைகளுக்குள் தொலைபேசியை இணைப்பதுவரை அறிவுநிதி, அரவிந்தனுக்கு அடுத்து நான் எழுதிச்செல்லும்போது அய்யப்பமாதவன் சிறுபுன்னகையுடன் தோன்றி மறைந்து செல்வதுண்டு

 

 

வலைப்பக்கம், நாம் காலண்டிதழ் (நண்பர்களுடன் இணைந்து நடத்தும் இதழ்), பிரம்மா (நண்பர்களுடன் இணைந்த         கூட்டுத் தொகுப்பு) ஒலி96.8, வசந்தம் தொலைக்காட்சி, சில சிற்றிதழ்களில், இணைய இதழ்களில் இடம்பிடித்த கவிதைகள் என்ற உயிர் வலியின் தொடுகைகள் நீள…, சும்மா கலக்கிட்டிங்கபோங்க, பேஸா இருக்கு என்று பலர் சொல்வதை விடுத்து, எங்கோ ஒருவனின் அருகாமையில் அமர்ந்து அவன் கரம்பிடித்து இன்னும் கொஞ்சம் அந்த மௌனத்தை நீட்டிக்கும் எழுத்துக்களை தேடிக்கொண்டிருக்கிறன்.

 

அதே தனிமையில்

அதே மௌனத்துடன்.

 

அடுத்தடுத்த பதிவுகளில்

 

பாண்டித்துரை

 

நன்றி: அறிவுநிதி அரவிந்தன் அய்யப்பமாதவன

 

11 thoughts on “அறிவுநிதி, அரவிந்தன், அய்யப்பமாதவன்

  1. கோவி.கண்ணன் சொல்கிறார்:

    நண்பர்களைப் போற்றும் உங்கள் நல்ல உள்ளம் எழுத்தாக தெரிகிறது.

  2. பாண்டித்துரை சொல்கிறார்:

    நன்றி கண்ணன்

  3. திகழ்மிளிர் சொல்கிறார்:

    வாழ்த்துகள்

  4. பாண்டித்துரை சொல்கிறார்:

    நன்றி திகழ்மிளிர்

  5. கலா சொல்கிறார்:

    உங்கள் வலையத்தில் மூவருக்கு நன்றி சொல்லி வலைப் பதிவில்
    வளைய விட்டிருக்கின்றீர்கள் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது
    எவரிடமிருந்தும் எந்தவகை உதவி கிடைத்தாலும் நன்றி சொல்ல மறக்கவே
    கூடாது.அதை உங்கள் வலையத்தில் பார்க்கும்போது நான் உங்களுக்கு
    நன்றி சொல்கின்றேன்.இந்த மூன்றெழுத்தை சொல்பவர்களுக்கும் மகிழ்ச்சி
    அதை பெறுபவர்களுக்கும் மகிழ்ச்சி.

    நன்றி
    கலா

  6. பிரேம்குமார் சொல்கிறார்:

    நூறு பதிவுகள் முடித்தமைக்கு வாழ்த்துக்கள் பாண்டி. மேலும் மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள் கவிஞரே 🙂

  7. பாண்டித்துரை சொல்கிறார்:

    நன்றி கலா

    நன்றி பிரேம்குமார்

  8. மாதங்கி சொல்கிறார்:

    அன்பு வாழ்த்துகள் நீதி

  9. எம்.கே.குமார் சொல்கிறார்:

    வாழ்த்துகள் தம்பி, இன்னும் நிறைய, நிறைவாக எழுத அன்பான வாழ்த்துகள்!!!

  10. Paalu Manimaran சொல்கிறார்:

    Let you reach 1000 “Pathivugal”.

    Best Wishes!!

  11. பாண்டித்துரை சொல்கிறார்:

    நன்றி மாதங்கி
    நன்றி எம்.கே.குமார்
    நன்றி பாலு மணிமாறன்

பின்னூட்டமொன்றை இடுக