பிறழ்வாய் நீ நான் இல்லை அவன்

man225mj7

கனவுகள் கனவுகள் கனவுகள், என்னை துரத்தும் கனவுகள் நான் துரத்தும் கனவுகள். கொடைக்கானல், ஹாசன், பெங்களுர், சென்னை, சிங்கப்பூர் அதற்குமேல் அதற்குமேல் சிரிக்கத் தோன்றியது அழத்தோன்றியது இதற்கு முன்பு நடனமாடிடாத கால்கள் நடனமாட தொடங்குகிறது முகம் சோகமாகிறது துளிர்த்த கண்ணீர்துளிகள் கண்களுக்குள்ளேயே வரண்டுவிடுகிறது யாருக்காகவோ வாழ்வதாக பேசித்திரிகிறேன் பசிக்கிறது சாப்பிடுகிறேன் அடுத்த ஒரு வருடத்திற்கு வீடு கட்ட என்னை அடமானம் வைத்துவிடுகிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தீட்டிய திட்டங்கள் எல்லாம்  அடுத்த ஓராண்டை கடந்து நிற்கிறது,  இதே நிலைதான் கடந்த ஆண்டும். நாலு நம்பரில் பம்பர் அடித்துவிடுவதாககூட ஒரு கனவு! இன்னும் அதற்கான ஆயத்தங்களில் நாலு நம்பர் கடை எந்த திக்கில் இருக்கும் என்று தேடியது கிடையாது, ஆகக் குறைந்தபட்சம் ஒரு வெள்ளி வேண்டுமே அதை முதலில் சேமிக்க வேண்டும்.

 

நான் மட்டும் இப்படித்தானா? இந்த உலகில் இருக்கும் மனிதர்கள் எல்லோருக்குமே இப்படித்தானா? குழப்பங்கள் குழப்பங்கள் குழப்பங்கள், என்னை தொடரும் குழப்பங்கள் நான் போட்டு குழப்பிய குழப்பங்கள். கவிதை எழுதவேண்டும், சில கவிதைகள் எழுதியாயிற்று. பைத்தியம் போல இருக்கிறேன், யார் இங்கே பைத்தியம் நானா? நீயா? பைத்தியத்திற்கான வரையறையை பைத்தியத்திடம் கேட்டால் யார் இங்கே பைத்தியம் நானா? நீயா? நாளை திருமணம் செய்யவேண்டும், அதற்கு பின் ஒரு பிள்ளை ஆணோ பெண்ணோ, அவளை பள்ளியில் சேர்க்கவேண்டும் அதை எல்லாம் பொண்டாட்டி பார்த்துக்கொள்வாள் என்றாலும் திருமணம் திருமணம் திருமணம் நடக்கும் ஒருநாளில்.

 

சிலருடன் பேசிக்கொண்டிருக்கிறேன், பிறகு மௌனமாகிறேன். அவர்கள் பேசத் தொடங்குகிறார்கள், தலைகுனிகிறேன் துக்கம் துக்கம் துக்கம் இல்லை தூக்கம் தூக்கம் தூக்கம். முப்பதானாயிரம் வெள்ளி வந்திருக்கணும் இல்ல ஆனா இருபத்தி ஆறுதானே வந்திருக்கு, இல்ல இல்ல கணக்கு சரிதான் டாலரை மாற்றும் போது இருக்கும் ஏற்றம் இறக்கம் இருக்க வேண்டியதுதானே அப்ப முப்பதானாயிரம் வெள்ளி சரிதானே! இறங்கி நடக்கத் தொடங்குகிறேன், கொஞ்சதூரம் கொஞ்சதூரம் கொஞ்சதூரம் நிரம்பதூரம் நடந்தாயிற்று. மழை வருகிறது, குடை  மறந்துவிட்டேனே ஓடு ஓடு ஓடு, வேகமாக ஓடு மேல செல்வோமா வேண்டாமா. முப்பதானாயிரம் வெள்ளி அறுபதனாயிரத்தை கடந்திருந்தால் வேண்டாம் போக வேண்டாம் நடக்கத்தொடங்குகிறேன் ஆறு வெள்ளி ஒரு குடை எடுத்திருக்கலாம்ம் நனைகிறேன். மெல்ல சிரிக்கிறேன் யாரும் பார்க்கவில்லை அவரவர்கள் ஒதுங்கி நிற்கிறர்கள், குடையை பிடிக்கிறார்கள் சிக்னல் வாகனங்கள் நிற்கிறது வாகனங்கள் போகிறது எந்த வாகனம் என்னை மோதக்கூடும், அதற்கு முன்பு அந்த வாகன எண்ணில் ஒரு நாலு நம்பரை எடுக்க வேண்டும், ஆகக் குறைந்தபட்சம் ஒரு வெள்ளியாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் சேமித்திடவேண்டும்.

©pandiidurai@yahoo.com

2 thoughts on “பிறழ்வாய் நீ நான் இல்லை அவன்

  1. Paalu Manimaran சொல்கிறார்:

    //குறைந்தபட்சம் ஒரு வெள்ளியாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் சேமித்திடவேண்டும்.//

    இதே நம்பிக்கையில்தான் இன்னும் போகிறது சிங்கப்பூர் வாழ்க்கை… சேமிப்பைப் பற்றி சிந்திக்க முடியவில்லை… ஒரு மழைநாளில், ஆறு வெள்ளி குடை பற்றி மட்டும்தான் சிந்திக்க முடிகிறது.

    அழகான, முதிர்ச்சியான எழுத்து. நிறைய எழுதச் சொல்லத் தோன்றுகிறது! குடை வாங்கிறோம்..என்றாவது மழை பெய்யும் என்ற நம்பிக்கையில். தம்பி, உனது நிலவெளியிலும் ஒரு நாள் பெய்யும் மழை!

  2. பாண்டித்துரை சொல்கிறார்:

    நன்றி பாலுணா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s