2008 திரும்பிப் பார்க்கிறேன்

happy2008

அட! அதற்குள் 2008 கடந்துவிட்டதா, என்பதை தவிர திரும்பிப்பார்த்தால் எல்லாம் மகிழ்வான தருணங்களாகத்தான் இருந்திருக்கிறது.

 

2008-ன் துவக்கத்தில் நாம் என்னும் காலாண்டிதழை நண்பர்களுடன் ஆரம்பித்தது, பிரம்மா என்னும் கவிதை தொகுப்பினை (எனது முதல் கவிதை தொகுப்பு) நான்கு நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டது, அம்ருதா, யுகமாயினி, வடக்குவாசல், உயிரெழுத்து, அநங்கம், உயிரோசை (இணையம்) இதழ்களில் எனது படைப்புகள் வெளிவந்தது, முதல் தொலைக்காட்சி படைப்பு (சிங்கப்பூர் வசந்தம்), சிங்கப்பூரின் நிரந்தர குடியுரிமை (PR) பெற்றதுடன் அடுத்த ஆண்டு என் ஊரில் எழுந்து நிற்கப்போகும் குடியிருப்புக்கு அடித்தளம் போட்டது வரை எல்லாம் மகிழ்வான தருணங்களே.

 

என்ன பாண்டி, அப்ப துன்பங்களே இல்லையா? என்றால்

 

இருக்கிறது!

 

ஆகக்கொடிய வலியினை மார்ச்-08  மத்தியில் அரவணைத்துக்கொண்டேன். இதன் வீச்சு இதயத்தில் துளையாய் இன்னும் இருக்கிறது. 2009-தினை இன்முகமாக வரவேற்க எல்லோரும் எழும் தருணத்திலும் என்னுள்ளேயான துன்பத்தின் சாயலை வெளிக்கொணர விரும்பவில்லை.

 

எப்பவும் அழாதடா, சிரிச்ச முகமாக இரு. இல்லை இல்லைனு சொல்லாத, எல்லாம் உன்னிடம் இருக்கிறது. வரும்! எல்லாம் ஒவ்வொன்றாய். உன்னைச் சுற்றிலும் மெழுகின் ஜோதியைத்தான் நீ நிரப்ப வேண்டும் என்று சொன்ன தோழி நினைவுக்கு வருகிறாள் இவானோடு! .

 

அதற்கான முயற்சியாய் 2008ன் துன்பங்களோடு

 

இனி

எனக்கான வலியினை

யாரிடமும் சொல்லப்போவதில்லை

ஏன்

என்னிடம் கூட!

 

2009 ன் துவக்கத்தில் எதற்காக காத்திருக்க போகிறாய் என்றால்

 

ஒரு கவிதைக்காக!!!

 

2008 ன் துவக்கத்திற்கான முதல் நாளிரவு அழகான ஒரு கவிதையை மனம் சுமந்துநின்றது, அந்த கவிதையை இந்த நேரத்தில் நினைத்துக்கொள்கிறேன்.

 

 

கவிதைக்கான காத்திருத்தலோடு

பாண்டித்துரை

 

@pandiidurai@yahoo.com

10 thoughts on “2008 திரும்பிப் பார்க்கிறேன்

 1. Paalu Manimaran சொல்கிறார்:

  சீக்கிரமே வெளியாக இருக்கும் சை.பீர்முகமதின் ‘பயாஸ்கோப்காரனும், வான்கோழிகளும்’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்கான பதிப்புரையின் ஒரு சில வரிகளை தம்பி உன்னோடு பகிர்ந்து கொள்கிறேன்….

  //நீண்டு கொண்டிருக்கின்ற பயணத்தின் வழி நெடுக நிகழ்வுகளும் அவை தரும் நினைவுகளும், ஞாபக அடுக்குகளில் சேமிக்கப்பட, பழைய நாட்கள் முடிகின்றன. இன்னும் புதிய நிகழ்வுகளோடும், அவை தர இருக்கின்ற நினைவுகளோடும், புதிய நாட்கள் விடிகின்றன.

  எல்லா நினைவுகளும் ஞாபக அடுக்குகளில் நிரந்தரமாக இருந்து விடுவதில்லை. காலத்தின் மாயக்கரம் அதைத் தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கிறது. அழுத்தமாகப் பதிந்தவை மட்டுமே அழியாமல் இருக்கின்றன. அப்படி அழியாமல் தப்பியவை எப்போது நம் கண்முன் முகம் காட்டும் என்று நமக்குத் தெரியாது. எதிர்பாராமல் ஒருநாள் பஸ் நிறுத்தத்தில் பார்த்துவிடும் பழைய நண்பன்போல் அவை திடீரென்று முகம் காட்டலாம் அல்லது ஏதாவது ஒரு சிறு நிகழ்வு தூண்டிவிடும் பொறியில் வெடித்துச் சிதறி நம் மனமெங்கும் ஆயிரம் கரங்களோடு ஆக்கிரமித்துக் கொள்ளலாம்.//

  இந்த வரிகள் சொல்லும் சேதி, 2009ற்கான நம்பிக்கைகளைத் தந்து செல்லலாம்…நல்ல நம்பிக்கைகளோடு துவங்கட்டும் 2009!!

 2. தயாளன் சொல்கிறார்:

  இனிய புதுவருட வாழ்த்துகள்

 3. பாண்டித்துரை சொல்கிறார்:

  உங்களுக்கான வாழ்த்துகளோடு
  மிக்க நன்றி தயாளன்.

 4. பாண்டித்துரை சொல்கிறார்:

  ஒரு நூல் வெளிவருவதற்கு முன்பே அதில் உள்ள வரிகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி பாலுணா. 2009ல் இதை விட வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்.

  2009ல் உங்களின் நாலு வார்த்தை புதுப்பொலிவுடன் புதுக் களத்தில் வெளிவர வாழ்த்துகள்

 5. ஜோதிபாரதி சொல்கிறார்:

  தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நீதிபதி பாண்டித்துரை!

 6. பாண்டித்துரை சொல்கிறார்:

  நன்றி பழைமை பேசி. உங்களுக்கும் வாழ்த்துகள்

 7. பாண்டித்துரை சொல்கிறார்:

  மிக்க நன்றி ஜோதி பாரதி. நீங்கள் எடுக்கப் போகும் ஒவ்வொரு முயற்சிக்கும் என்னுடைய வாழ்த்துகள்

 8. கலா சொல்கிறார்:

  வெற்றி,தோல்வி,மகிழ்ச்சி,துக்கம்,சோகம்,சுமைகள்,கஷ்ரங்கள்,வலிகள்
  இல்லாத வாழ்க்கை யாருக்குமே இல்லை{.கோடிஸ்வரராய் இருந்தாலும் சரி,
  குப்பத்து ஐனங்களாய் இருந்தாலும் சரி} இது வரைக்கும் நடந்தவைகள் நல்லவைகளே!
  இனிமேலும் நடக்கப் போறது நல்லவையே என நினையுங்கள்.உங்கள் ஆசைகள்,எண்ணங்கள்,கனவுகள்,குறிக்கோள்கள் நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நன்றி
  பிஷான் கலா

 9. பாண்டித்துரை சொல்கிறார்:

  பிஷான் கலா
  தங்களின் வருகைக்கு நன்றி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s