ஈழம் மேலும் ஒரு நாடகம்

நன்றி: செய்தி தமிழ் விண்

 

 

இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து சென்னையில் பா... உண்ணாவிரதம்

இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி பா... சார்பில் எதிர்வரும் 12ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சம உரிமை இலங்கைத் தமிழரது பிறப்புரிமை என்பதை சுட்டிக் காட்டவும்,

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும்

அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும்

மத்திய அரசை வற்புறுத்தி சென்னையில் வரும் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் எனது தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம்  நடைபெறும் என்று கூறியுள்ளார்.

 

காலை: ஒன்பது மணிக்கு முன்புdosaisemiya-uppumalemrava-idli

 

 

மாலை: ஐந்து மணிக்கு பின்பு

whisky_colleckshuncocjus

10 thoughts on “ஈழம் மேலும் ஒரு நாடகம்

 1. நாமக்கல் சிபி சொல்கிறார்:

  இப்பதிவு சம்மந்தப் பட்டவர்களை மட்டுமின்றி உண்மையான தமிழினச் சகோதர உணர்வுடன் உண்ணாநிலைப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களையும் மனச்சேர்வுக்கு ஆளாக்கும் என்பதை அறிவீர்களா?

 2. பாண்டித்துரை சொல்கிறார்:

  அன்பின் நாமக்கல் சிபி அரசியல் சார்பற்ற அமைப்புகள் நிறுவனங்கள் இத்தகு சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்தால் நான் வரவேற்கிறேன். அது என்ன ஒரு நாள் நோன்பு குறைந்த பட்சம் 3 நாட்கள் தொடர் உண்ணா நோன்பு இருக்கட்டும் நான் வரவேற்கிறேன்

 3. பாண்டித்துரை சொல்கிறார்:

  6 7 வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன் மூப்பனார் அவர்கள் தனிக்கட்சி தொடங்கியபோது எங்கள் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இப்படித்தான் ஈழம் சார்ந்த ஒரு நாள் உண்ணாநோன்பு இருந்து அந்த பகுதியில் பிரபலமடைந்து சில அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டார்

 4. பாண்டித்துரை சொல்கிறார்:

  ///சகோதர உணர்வுடன் உண்ணாநிலைப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களையும் மனச்சேர்வுக்கு ஆளாக்கும் என்பதை அறிவீர்களா?
  ////

  கண்டிப்பாக வருந்த மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.

  இவர்களின் செயல் கண்டு ஈழமக்கள் வருத்தபடாமல் இருக்கவேண்டும்.

  இந்த நிகழ்விற்கு பின்னாவது மத்திய அரசு அமைச்சரை அனுப்புமா என்று நாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டும்

 5. Chandran சொல்கிறார்:

  ஈழம் மேலும் ஒரு நாடகம். நீங்கள் கூறியது சரியே.

 6. ’டொன்’ லீ சொல்கிறார்:

  உண்மை தான்…அரசியல் நாடகங்கள்

 7. பாண்டித்துரை சொல்கிறார்:

  /
  கண்டிப்பாக வருந்த மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன்.இவர்களின் செயல் கண்டு ஈழமக்கள் வருத்தபடாமல் இருக்கவேண்டும்.இந்த நிகழ்விற்கு பின்னாவது மத்திய அரசு அமைச்சரை அனுப்புமா என்று நாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டும்//

  உண்மைதான்! ஒன்றும் செய்ய இயலாமல் கையறு நிலையாகத்தான் இருக்கிறோம் என்பதை தலைகுனிந்து ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது!
  கடைசி ஈழத்தமிழனொருவனும் வீழ்ந்து மடிவதற்கு முன்பேனும் அனுப்பி வைத்தார்கள் எனில் மகிழ்ச்சிதான்!

  நாமக்கல் சிபி- மின்னஞ்சலில் பகிர்ந்துகொண்டது

 8. ஜோதிபாரதி சொல்கிறார்:

  காரியம் செய்கிறேன் பேர்வழி என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
  உண்மையான உணர்வுகளை கண்டுபிடிப்பதற்கு நமக்கு யங் குணக உளவியல் தெரிந்திருக்க வேண்டும் அல்லது நார்கோடிக் அனலிசிஸ் செய்தால் தான் முடியும்.

 9. ஜமால் A M சொல்கிறார்:

  வருத்தமான உண்மை.

 10. பாண்டித்துரை சொல்கிறார்:

  இந்த விடயத்தில் தொல்.திருமாவளவன் எடுத்துள்ள நிலைப்பாட்டினை வரவேற்கிறேன் (சாகும்வரை உண்ணாவிரதம்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s