திருமணமான
இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முறை
கூறியிருப்பாய்….
என்னையே
உனக்கு கொடுத்தேனே
என்று…..
எண்ணிப் பார்ப்பாயா
என்றேனும்….
நீ உன்னை
என்னிடம் இழந்த
அதே நொடியில்தான்
நானும் என்னை
உன்னிடம் இழந்திருக்கிறேன்
என்பதனை….
எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை. எல்லா ஆண்கவிஞர்களாலும் கவனிக்கபடவேண்டிய கவிதை. கவிஞர் அறிவுமதி நடத்தும் “தை” என்ற காலாண்டிதழில் “ஆதங்கம்” என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுதியவர் சிங்கப்பூர் பெண்கவிஞர் மலர்விழி இளங்கோவன்.
எத்தனை ஆண்கள் இப்படி நினைத்திருப்பர் (நானும் நினைச்சதிலங்க). இது போன்ற கவிதைவரியை நான் படித்த வரையில் எத்த ஒரு ஆண்கவிஞரும் எழுதியதில்லை. சிங்கப்பூர் கவிமாலை போன்ற நிகழ்வுகளில் கவிஞர் மலர்விழி இளங்கோவனை சந்திக்கும் வாய்ப்பு அமைவதுண்டு. அப்படியொரு நிகழ்வில் நான் இந்த கவிதையை படிக்கநேர்ந்தது பற்றி கூறி மிகவும் அருமையென்றேன். கவிஞர் மலர்விழி இளங்கோவனின் குரல் ஆதங்கமாகவே ஒலித்தது. தலைப்பு ஆண்களின் ஆதங்கம் என்று குடுத்திருந்தேன் ஆனால் இதழில் ஆண்களை ஆண்கள் நிராகரித்து விட்டனர் என்றார். இவரது மற்ற கவிதைகளையும் நான் இரசிப்பேன் காரணம் இவரது பல கவிதைகள் ஆதங்கதொணியில் ஒலிக்கும். சமூகத்தின்மேல் கொண்ட அக்கறையுடன் என்பதாலே.
ஒருமாதந்திர கவிச்சோலையில் “அண்ணா” என்ற தலைப்பிலான போட்டிக்கவிதைக்கு கவிதை வடித்த எல்லோரும் அண்ணா புகழ் பாடிக்கொண்டிருக்க அண்ணா இன்று எங்கே சென்றுகொண்டிருக்கிறார் (அரசியலில்) தொணியில் ஒரே மாற்றுக்கவிதையாக வாசிக்கப்பட்டது மலர்விழி இளங்கோவன் கவிதை மட்டுமே. அந்த கவிதை தமிழகத்தில் படிக்கப்பட்டிருந்தால் சில வசவுச்சொற்களுடன் கற்கள் பறந்து வந்திருக்ககூடும்.
2007-ம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் உயரிய விருதான “தங்கமுனை பேனா” மூன்றாம் நிலையினை பெற்றார் பரிசுத்தொகை வெள்ளி 2000.00 இந்திய மதிப்பில் ரூபாய் 60000.00வரை. (முதல் நிலைக்கான பரிசுத்தொகை வெள்ளி 10000.00 இதில் 4000.00 ரொக்கமாகவும் 6000 வெள்ளி பயணங்கள் உள்ளிட்ட சலுகைகளாகவும் வழங்கப்படும் இந்திய மதிப்பில் ரூபாய் 300000.00 இரண்டாம் நிலைக்கான பரிசுத்தொகை வெள்ளி 3000.00 இந்திய மதிப்பில் ரூபாய்90000.00- சிறுகதை பிரிவிற்கான பரிசுத்தொகையும் இவையே இந்த ஆண்டு முதல் குறும்படத்திற்கும் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது). 2008-ம் ஆண்டிலும் கவிதைக்கான தங்கமுனை பேனா விருதினை இவர் பெறக்கூடும் கவிதை தொகுப்பினை வெளியிடாத பட்சத்தில்! மேலும் மூன்றாம் தர படைப்புகளுக்கு முதல் நிலை விருதினை கொடுக்கும் சிங்கப்பூர் தேர்வாளார்கள் பெண் எழுத்தாளர்களின் முதல் தரமான படைப்பு என்று வரும்போது மட்டும் முதல்நிலை மறுக்கப்படுவதுகூட காரணமாக இருக்கலாம் உடனடி புத்தக வெளியீட்டிற்கு! இருப்பினும் சிறுகதைக்கான தங்கமுனை பேனா விருதினை இவர் பெறக்கூடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. (அந்தந்த பிரிவுகளில் தனித் தொகுப்பாக புத்தகங்கள் வெளியிட்டிருப்பின் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது).
சிங்கப்பூரில் பெண் எழுத்தர்கள் மிகக்குறைவே. அதுவும் இங்கு நடக்கும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மிக சொற்பம் (சொற்பம் என்றால் 3-ற்குள் வைத்துக்கொள்ளுங்கள்). மலர்விழி இளங்கோவன் பல நிகழ்வுகளில் கலந்துகொள்வார். அதுவும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன். அதனால் தானோ என்னவோ தெனாலிராமன் கதையில் வரும் மெலிந்த பூனையாக அவரது மகள் இன்று.
கவிமாலை கவிக்குடும்பத்தில் ஒருவரான இவரது முதல் கவிதைதொகுப்பான “கருவறைப் பூக்கள்” எதிர்வரும் சீனப்புத்தாண்டு ஜனவரி 26 திங்கள்கிழமை மாலை ஆறு மணிக்கு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோவில் மண்டபத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில்தான் தெரிந்தது இவர் எனது குடுபத்தினரின் நெருங்கிய நண்பர் என்பது!
“கருவறைப் பூக்கள்” எவ்விதமான வலியினை சுமந்துவந்துள்ளது என்பது தெரியாது. புத்தக வெளியீட்டிற்கு பின்னர்தான் எனக்கும் எல்லோருக்குமான புத்தகத்தினை படிக்கும் வாய்ப்பு. நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.
இத் தொகுப்பு பற்றி ம.தி.மு.க தலைவர் “வைகோ” தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது
“கவிதை என்பது பூக்களாக மட்டுமல்ல வாட்களாகவும் தழுவும் தென்றலாக மட்டுமல்ல கிளர்ந்தெழும் புயலாகவும் இருந்திடவேண்டும் என்பதை உணர்ந்தே ஒவ்வொரு கவிதைகளையும் வடித்திருக்கிறார் கவிஞர்.
கவிஞர் மலர்விழி இளங்கோவனின் கருவறைப் பூக்கள் காகிதப் பூக்களல்ல காவியப்பூக்கள்”
திருமதி மலர்விழி இளங்கோவனுக்கான வாழ்த்துகளுடன்
பாண்டித்துரை
தங்க முனைப் பேனா விருது பெற்ற கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவன்னுக்கு பாராட்டுகள். மேன்மேலும் பல விருதுகள் பெற நல்வாழ்த்துகள்
கவிஞர் திருமதி மலர்விழி இளங்கோவனுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்..:-)
நல்ல கவிதை
நல்ல பகிர்தல் …
My wishes to Mrs.Malarvizhi Ilangovan, for grand success of the book launch!
இந்தக் கவிதையை ஓராண்டுக்கு முன்பு ஓர் இணைய இதழில் படித்த ஞாபகம்.
முதல் கவிதைத் தொகுப்பை வெளியிடும் சகோதரி திருமதி மலர்விழி இளங்கோவனுக்கு எனது வாழ்த்துகள்!
நன்றி cheenakay
நன்றி ’டொன்’லீ
நன்றி பாலுணா
நன்றி ஜமால்
நன்றி ஜோதிபாரதி
————-
’டொன்’லீ, ஜமால், ஜோதிபாரதி
சீன புத்தாண்டு விடுமுறைக்கு சிங்கப்பூரில் வேறு பணிகள் எதுவுமில்லாது இருப்பின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள முயற்சிக்கவும் .
நட்புடன்
பாண்டித்துரை
///ஜோதிபாரதி (09:52:48) :
இந்தக் கவிதையை ஓராண்டுக்கு முன்பு ஓர் இணைய இதழில் படித்த ஞாபகம்.///
படித்திருக்க வாய்ப்புண்டு
கீற்று மற்றும் திண்ணையில் இந்த கவிதைபற்றி நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்
கவிதை தொகுப்பு வெளியிடும் சகோதரி மலர்விழி இளங்கோவனுக்கு எனது வாழ்த்துக்கள்