ஜனவரி – 26 சிங்கப்பூரில்

v13

ஜனவரி-26 திங்கள் கிழமை அன்று சிங்கப்பூரில் சீன புத்தாண்டு கொண்டாட்டம் அன்றும் மறுநாளான செவ்வாய் கிழமையும் அரசு விடுமுறை. ஆனால் பல்வேறு நிறுவனங்கள் சீனபுத்தாண்டு சமயத்தில் ஒரு வார காலத்திற்கும் மேலான தொடர்விடுமுறையை அறிவிப்பர். ஆக சீன புத்தாண்டு கொண்டாட்டடித்திற்கான விடுமுறை ஜனவரி 24-ல் இருந்தே தொடங்கிவிடுகிறது.

 

ஜனவரி 26 அன்று மாலை 6.00 மணியளவில் சிங்கப்பூர் கவிஞர் மலர்விழி இளங்கோவன் அவர்கள் தனது முதல் கவிதைதொகுப்பினை வெளியிடுகிறார். அன்று அநேகபேருக்கு விடுமுறை என்பதால்

 

வாருங்கள்

வாழ்த்துங்கள்

 

கவிமாலை கவிஞர்களின் சார்பாக

அழைப்பது

பாண்டித்துரை.

v12

v11

v

ஆண்களின் ஆதங்கம்

 

 

  malar

திருமணமான

இத்தனை ஆண்டுகளில்

எத்தனை முறை

கூறியிருப்பாய்.

என்னையே

உனக்கு கொடுத்தேனே

என்று..

எண்ணிப் பார்ப்பாயா

என்றேனும்.

நீ உன்னை

என்னிடம் இழந்த

அதே நொடியில்தான்

நானும் என்னை

உன்னிடம் இழந்திருக்கிறேன்

என்பதனை.

 

எனக்கு மிகவும் பிடித்தமான கவிதை. எல்லா ஆண்கவிஞர்களாலும் கவனிக்கபடவேண்டிய கவிதை. கவிஞர் அறிவுமதி நடத்தும் தை என்ற காலாண்டிதழில் ஆதங்கம்” என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுதியவர் சிங்கப்பூர் பெண்கவிஞர் மலர்விழி இளங்கோவன்.

 

எத்தனை ஆண்கள் இப்படி நினைத்திருப்பர் (நானும் நினைச்சதிலங்க). இது போன்ற கவிதைவரியை நான் படித்த வரையில் எத்த ஒரு ஆண்கவிஞரும் எழுதியதில்லை. சிங்கப்பூர் கவிமாலை போன்ற நிகழ்வுகளில் கவிஞர் மலர்விழி இளங்கோவனை சந்திக்கும் வாய்ப்பு அமைவதுண்டு. அப்படியொரு நிகழ்வில் நான் இந்த கவிதையை படிக்கநேர்ந்தது பற்றி கூறி மிகவும் அருமையென்றேன். கவிஞர் மலர்விழி இளங்கோவனின் குரல் ஆதங்கமாகவே ஒலித்தது. தலைப்பு ஆண்களின் ஆதங்கம் என்று குடுத்திருந்தேன் ஆனால் இதழில் ஆண்களை ஆண்கள் நிராகரித்து விட்டனர் என்றார். இவரது மற்ற கவிதைகளையும் நான் இரசிப்பேன் காரணம் இவரது பல கவிதைகள் ஆதங்கதொணியில் ஒலிக்கும். சமூகத்தின்மேல் கொண்ட அக்கறையுடன் என்பதாலே.

 

ஒருமாதந்திர கவிச்சோலையில் அண்ணா என்ற தலைப்பிலான போட்டிக்கவிதைக்கு கவிதை வடித்த எல்லோரும் அண்ணா புகழ் பாடிக்கொண்டிருக்க அண்ணா இன்று  எங்கே சென்றுகொண்டிருக்கிறார் (அரசியலில்) தொணியில் ஒரே மாற்றுக்கவிதையாக வாசிக்கப்பட்டது மலர்விழி இளங்கோவன் கவிதை மட்டுமே. அந்த கவிதை தமிழகத்தில் படிக்கப்பட்டிருந்தால் சில வசவுச்சொற்களுடன் கற்கள் பறந்து வந்திருக்ககூடும்.

 

2007-ம் ஆண்டில் சிங்கப்பூர் அரசின் உயரிய விருதானதங்கமுனை பேனா” மூன்றாம் நிலையினை பெற்றார் பரிசுத்தொகை வெள்ளி 2000.00 இந்திய மதிப்பில் ரூபாய் 60000.00வரை. (முதல் நிலைக்கான பரிசுத்தொகை வெள்ளி 10000.00 இதில் 4000.00 ரொக்கமாகவும் 6000 வெள்ளி பயணங்கள் உள்ளிட்ட சலுகைகளாகவும் வழங்கப்படும் இந்திய மதிப்பில் ரூபாய் 300000.00 இரண்டாம் நிலைக்கான பரிசுத்தொகை வெள்ளி 3000.00 இந்திய மதிப்பில் ரூபாய்90000.00- சிறுகதை பிரிவிற்கான பரிசுத்தொகையும் இவையே இந்த ஆண்டு முதல் குறும்படத்திற்கும் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது). 2008-ம் ஆண்டிலும் கவிதைக்கான தங்கமுனை பேனா விருதினை இவர் பெறக்கூடும் கவிதை தொகுப்பினை வெளியிடாத பட்சத்தில்! மேலும் மூன்றாம் தர படைப்புகளுக்கு முதல் நிலை விருதினை கொடுக்கும் சிங்கப்பூர் தேர்வாளார்கள் பெண் எழுத்தாளர்களின் முதல் தரமான படைப்பு என்று வரும்போது மட்டும் முதல்நிலை மறுக்கப்படுவதுகூட காரணமாக இருக்கலாம் உடனடி புத்தக வெளியீட்டிற்கு!  இருப்பினும் சிறுகதைக்கான தங்கமுனை பேனா விருதினை இவர் பெறக்கூடும் என்ற நம்பிக்கையிருக்கிறது. (அந்தந்த பிரிவுகளில் தனித் தொகுப்பாக புத்தகங்கள் வெளியிட்டிருப்பின் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது).

 

 

சிங்கப்பூரில் பெண் எழுத்தர்கள் மிகக்குறைவே. அதுவும் இங்கு நடக்கும் இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை மிக சொற்பம் (சொற்பம் என்றால் 3-ற்குள் வைத்துக்கொள்ளுங்கள்). மலர்விழி இளங்கோவன் பல நிகழ்வுகளில் கலந்துகொள்வார். அதுவும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன். அதனால் தானோ என்னவோ தெனாலிராமன் கதையில் வரும் மெலிந்த பூனையாக அவரது மகள் இன்று.

 

கவிமாலை கவிக்குடும்பத்தில் ஒருவரான இவரது முதல் கவிதைதொகுப்பான கருவறைப் பூக்கள்” எதிர்வரும் சீனப்புத்தாண்டு ஜனவரி 26 திங்கள்கிழமை மாலை ஆறு மணிக்கு சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள பெருமாள் கோவில் மண்டபத்தில் நடைபெறுகிறது. சமீபத்தில்தான் தெரிந்தது இவர் எனது குடுபத்தினரின் நெருங்கிய நண்பர் என்பது!

 

 

“கருவறைப் பூக்கள்” எவ்விதமான வலியினை சுமந்துவந்துள்ளது என்பது தெரியாது. புத்தக வெளியீட்டிற்கு பின்னர்தான் எனக்கும் எல்லோருக்குமான புத்தகத்தினை படிக்கும் வாய்ப்பு. நிகழ்வில் கலந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

 

இத் தொகுப்பு பற்றி .தி.மு. தலைவர்வைகோ” தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது

 

கவிதை என்பது பூக்களாக மட்டுமல்ல வாட்களாகவும் தழுவும் தென்றலாக மட்டுமல்ல கிளர்ந்தெழும் புயலாகவும் இருந்திடவேண்டும் என்பதை உணர்ந்தே ஒவ்வொரு கவிதைகளையும் வடித்திருக்கிறார் கவிஞர்.

 

கவிஞர் மலர்விழி இளங்கோவனின் கருவறைப் பூக்கள் காகிதப் பூக்களல்ல காவியப்பூக்கள்

 

திருமதி மலர்விழி இளங்கோவனுக்கான வாழ்த்துகளுடன்

பாண்டித்துரை

புதுகை அப்துல்லாவின் வருகையும் என் முதல் பதிவர் சந்திப்பும்

pag

1, 2, 3. புதுகை அப்துல்லாவின் புன்னகைதுளிகள்
4. விடைபெறும் ஜெகதீசன் புதுகை அப்துல்லா
5. கிரி முன் பவ்யமாக புதுகை அப்துல்லா

 pudugaitamil.blogspot.com

சிங்கப்பூர் வலை பதிவர்கள் சந்திப்பு சில வருடங்களாக நடக்கிறது. நேரமின்மையும் தொடர்ச்சியான வலைப்பக்க வாசிப்பின்மையாலும் கலந்துகொள்ளவியலாமல் இருந்தது. புதுகை அப்துல்லாவின் சிங்கப்பூர் வருகையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு சந்திப்பில் கடந்த ஞாயிறு 12.01.09 அன்று கலந்துகொள்ள நேர்ந்தது.

செந்தில்நாதனும், ஜெகதீசனும் நிகழ்வு தொடங்கும்முன்னே விடைபெற்றனர். ஜெகதீசன் கொண்டுவந்திருந்த இனிப்பினை (அல்வா சாமியோவ்) சுவைக்க நேர்ந்தது. நிகழ்வு பற்றிய அழைப்பில் குறிப்பிட்டிருந்த மங்களவிளக்கேற்றுதல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியவில்லை, புரியவில்லையும்கூட, அந்த நேரத்தில் மறந்துவிட்டேனும்கூட. டொன்லீயின் சந்திப்பு பற்றிய பத்தியினை படிக்கும்போதுதான் பளிச்சிட்டது. நிகழ்வில் பெரியவாள், கோவியார் என்று சில பதிவர்கள் பூங்காவினை இரு சுற்றி வந்ததை நிகழ்விற்கான அரங்க தேர்வு என்று நினைத்துவிட்டேன். அடுத்த சந்திப்பில் ஜோதியில் ஐக்கியமாகவேண்டும் ஆனால் லக்கிலுக்கின்  வலைபதிவில் உள்ள இந்த வரிகள் “நான்கு பேர் குடிக்கும் இடத்தில் ஐந்தாமவன் ஒருவன் குடிக்காமல் வேடிக்கை பார்ப்பது என்பதே வன்முறைதான்” ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது உடன் எனது கல்லூரி தோழனான ஜீனியர் முரளியும்.

விக்கி என்ற விஜய் ஆனந்தும், முகவை ராம், அதிரை ஜாமாலும் கொஞ்சம் தாமதமாக கலந்துகொண்டனர். விக்கியின் விழியின் முன் பலர் சரண்டர் ஆகியிருக்ககூடும். புதுகை ராம்மிடம்தான் அதிக நேரமாக பேசிக்கொண்டிருந்தேன். என்னைபற்றியும் அவரைப்பற்றியுமான எழுத்து வலை என்று பின்னிச்சென்றது.

புதுகை அப்துல்லாவை பேசச் சொல்லியவுடன் அபுதாபி 2 சிங்கப்பூர் தொடரும் அதிரை ஜமாலுடனான நட்பின் தொடக்கத்தில் தொடங்கி வலைஉலகின் நுழைவு, அதே நேரத்தில் இயங்கதொடங்கிய 45ற்கும் மேற்பட்ட வலைபதிவர்களின் பயணங்கள், சமீபத்திய பரபரப்பான பட்டாம்பூச்சி விருது, சென்னை வலைபதிவர்கள் சந்திப்பு, திரட்டி பற்றிய பகிர்வு, வலைபதிவர் நர்ஸீமின் பதிவான அப்பா பேருந்து நிலையம், மகன் விமானநிலையம் (ஒப்பீட்டிலான சிறுகதை என்று நினைக்கிறேன்) என்ற சில நிமிட பகிர்வே போதுமானதாக இருந்தது முகமறிய நண்பரின் முதல் சந்திப்பில்.

வலைபதிவின் தொழில்நுட்ப பிரச்சினைகளையும் ஒருவொருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். எனக்கான சந்தேகங்களை டொன் லீ, கோவியார், கிரி என்று இனிமேல்தான் சார் நீங்க கேளுங்களே, சார் நீங்க கேளுங்களே சார் நீங்க கேளுங்களே (இந்த இடத்தில் பொல்லாதவன் கருணாஸை நினைத்துகொள்ள வேண்டும்) என்று……… அவர்களுக்கு நான் பொல்லாதவன் ஆகக்கூடும்!

 இந்த சந்திப்பு பற்றி ஏற்பாட்டிற்கு முக்கிய காரணகர்த்தாவாக கோவி.கண்ணன் மற்றும் ஜோசப் பால்ராஜ் இருக்ககூடும் என்று நினைக்கிறேன் நிகழ்வின் முடிவிற்கு பின் தாக சாந்திக்காக (பச்சை தண்ணிங்ண்ணா) நிசமா நல்லவனின் வருகைக்காக காத்திருந்தோம் காத்திருந்தோம் …….. அவரு நிசமா நல்லவராங்க! (நம்புங்க நிசமா நல்லவருதான் டாக்சி கிடைக்காம காத்திருந்திருக்கிறார்)

நிசமா நல்லவரின் டாக்சிக்கான காத்திருப்பின் இடம் நோக்கி பதிவர்கள் நகர எனது வேறு ஒரு நிகழ்வினால் நிசமா நல்லவன் உள்ளிட்ட சிலரை பார்க்கமுடியவில்லை. ஓர் ஆச்சர்யம் கடந்த சில சந்திப்புகளில் நண்பர் அகரம் அமுதாவும் கலந்து கொண்டு சில மீட்புருவாக்க ஞாபங்களை பதித்து சென்றது (எங்கிட்ட சொல்லவே இல்லைங்க) ….. பயணங்களின் தொடர்ச்சியாய் இனி முகமறியா நண்பர்களை சந்திக்ககூடும் அவர்கள் விட்டுச்செல்லும் புன்னகையை மீட்டெடுப்பதற்கு.

பாண்டித்துரை