மொழி விளையாட்டு (இலக்கியாவின் நினைவில்)

ilakya

எப்போதும் சிரிப்பாயே

இன்று மட்டும் என்ன

நீ கேட்ட

வண்ணாத்திபூச்சியையும்

நாய்குட்டியையும்

அப்பா வாங்கித்தரவில்லையா

அதனால் என்ன

உனக்கு பிடித்த வண்ணங்களில்

உன்மொழியான விரலசைவில்

வண்ணாத்திபூச்சியையும்

நாய்குட்டியையும் வரைந்துகொடு

அப்பாவின் தலையணையடியில்

நாம் பத்திரப்படுத்தலாம்

வரக்கூடிய கனவில்

உன் ப்ரிய நாய்குட்டி

அப்பாவுடன் விளையாடத் தொடங்கலாம்

தொடர்ச்சியாய் பறந்துவரும்

வண்ணாத்திப்பூச்சியை எட்டிப் பிடிக்க முயற்சித்தபடி

இவையெல்லாம் உன்னாலானது என

அப்பாவிற்கு தெரியாது

பிறகொருநாள் நீ கதைகேட்கும்போது

நாய்குட்டி எட்டிப்பிடித்த பட்டாம்பூச்சியென

சொல்லக்கூடும்

ரசிப்பதாய் நினைத்த
உன் ரகசிய புன்னகையை கடந்தபடி

 

 

( அன்பு நண்பர்கள் இறைமதியழகன் – சுதா அவர்களின் புதல்வி இலக்கியாவிற்கு இன்று பிறந்தநாள் (7வயது) அவள் நினைவில் எழுதப்பட்ட கவிதை. )

 

இலக்கியாவிற்கான

வாழ்த்துகளுடன்

பாண்டித்துரை

 

நன்றி: (கவிதை தலைப்பு): jyovramsundar.blogspot.com

நன்றி:கீற்று.காம் 

 

Advertisements

2 thoughts on “மொழி விளையாட்டு (இலக்கியாவின் நினைவில்)

  1. anbumani சொல்கிறார்:

    இலக்கியாவுக்கு எனது உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் கவிதையும் அருமை!

  2. பாண்டித்துரை சொல்கிறார்:

    தங்களின் வருகை வாசிப்பு வாழ்த்திற்கு நன்றி அன்புமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s