தோற்றுப்போகும் தெய்வீகம் (சிங்கப்பூர் தைபூசம்)

(புகைப்படத்தில் என் மாமாவிற்கு அலகு குத்தப்படுகிறது மற்றொரு மாமா பார்வையிடுகிறார்)

4

 

சிங்கப்பூர் வந்தபின்பு ஊரைப்பற்றி யாரும் குறைசொன்னால் ஒருவித எரிச்சலும் கோபமும் வருவதுண்டு. ஆனால் இந்த விசயத்தில் ஊர் தைபூசம் தோற்றுப்போகலாம். கடந்த சனிக்கிழமை 08.02.09 அன்று இரவு  பெருமாள் கோவிலில் இருந்து டேங்க் ரோடு முருகன் கோவிலுக்கு இரண்டுமணிரே பயணமாக (ஆங்காங்கே தடுத்துவிடப்படுவதால் இந்த தாமதம்)டேங் ரோடு முருகன் கோவிலுக்கு பால்குடம் எடுத்துசென்று வழிபடுகின்றனர். தைபூசம் நாளான ஞாயிறு அன்றுதான் காவடிகளின் வருகையும் மலேசிய தமிழர்களின் (மிகுதியாக ஜோகூர்பாருவிலிருந்து) வருகையும் அதிகம். அன்று இரவு வரையிலும் பக்தர்களின் வருகை நீண்டுகொண்டே இருக்கும்.

 2(புகைப்படத்தில் பால்குடத்தில் பால் ஊற்றுவதற்கு முன்பும் பின்பும், சாமிஆட்டம், 50ற்கும் மேற்பட்ட பால்குடங்களை எடுத்த என் மாமா மற்றும் அவரின் உறவினர் நண்பர்கள் குறிப்பாக கீழக்கோட்டை – 14 வருடங்களாக தொடர்கிறதுஇதில் ஒரு சிலரை தவிர எல்ரேலாரும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள்)

பால் குடம் எடுக்கும் மிகுதியான பெண்கள் நெற்றியில் சிறிய வேல் குத்தி செல்கின்றனர். நிறைய குழுந்தைகளும் வேல் குத்திச்செல்கின்றனர். விதவிதமான காவடி தேரினை இழுத்துச்செல்வது என்று இந்த ஒருநாள்தான் தமிழர்களுக்கு தீபாவளி, பொங்கல் (ஆங்காங்கே மிகுதியான பொங்கல் நிகழ்வுகள் இங்கு நடந்தாலும் எல்லாம் செயற்கையானவை ஒருவித காட்சிபொருளாகத்தான் எனக்கு தோன்றியது)  போன்ற பண்டிகைகள் தராத ஊர் ஞாபகங்களை தைபூசம் மீட்டுத்தருகிறது.

5(புகைப்படத்தில் தேரினை இழுத்துச் செல்கிறார், பெண் சுமக்கும் காவடி,இது ஒரு வகை அழகு குத்த்தல்)

7(புகைப்படத்தில் காவடி, இந்த குழந்தை பற்றி தனியே ஒரு பதிவு போடவேண்டும் அதற்காக கிளிக்கியது, காவடி, இந்த சிறுவர்களில் ஒருவர் நெற்றியில் சிறு வேல் குத்திக்கொண்டார்)

 6

 (புகைப்படத்தில் மாமாவின் பாதுகாப்பிற்கு என் சகோதரன், முதுமையிலும் தொடர்கிறது, டேங்ரோடு முருகன் கோவில் வாசலில் காத்திருப்பு, டேங்ரோடு நோக்கி ஒரு குழுவினரின் தேடுதல் பயணம்)

 

 1

(புகைப்படத்தில் சன்டே டைம்ஸ் நிருபர், ஸ்ர்டெயிட்டைம்ஸ் புகைப்படகாரரின் கேள்விகளுக்கு பதில்சொல்லும் என் தாய்மாமா)

 81

(மேலே உள்ள புகைப்படம் சிராங்கூன் சாலையில் வைக்கப்பட்டிருந்த சாலை  தடுப்பு கீழே உள்ள புகைப்படம் டேங்ரோடு முருகன் கோவில் பகுதியில் வைக்கபட்ட்ட சாலை தடுப்புமுதல் புகைப்படத்தால் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கு பிரச்சினையில்லைபிரச்சினை இரண்டாவது புகைப்படததில்சாலையின் தளத்திற்கு இல்லாமல் சற்றே மேலே வளைந்தும் வளையாமலும் இருக்கும் கம்பிகளால் பலர் இடறிவிழுந்திருக்க வாய்ப்புண்டு நிர்வாகம் இன்னும் சரிவர செய்ய நிறைய குறைகள் இருக்கிறது )

7 thoughts on “தோற்றுப்போகும் தெய்வீகம் (சிங்கப்பூர் தைபூசம்)

 1. ஜோ சொல்கிறார்:

  ஏன் ‘அழகு’ -ன்னு சொல்லுறீங்க ?
  அது ‘அலகு’ இல்லையா?

 2. பாண்டித்துரை சொல்கிறார்:

  //ஜோ said
  ஏன் ‘அழகு’ -ன்னு சொல்லுறீங்க //

  சுட்டியமைக்கு நன்றி ஜோ. திருத்திவிட்டேன்

 3. ஜோதிபாரதி சொல்கிறார்:

  எனக்கு உறுத்தலாக இருந்த விடயங்களை சுட்டு(புகைப்படக் கருவியில்) பகிர்ந்திருக்கிறீர்கள். பதிவு நன்று. எனக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அதைச் சுடாமல் விட்டுவிட்டேன்.

  இது பற்றிய என்னுடைய பதிவு
  http://jothibharathi.blogspot.com/2009/02/blog-post_08.html

 4. ”டொன்”லீ சொல்கிறார்:

  ம்..கிரியும் இதைப் போன்ற ஒரு பதிவு இட்டிருந்தார்…

  எனக்கு இந்த விடயங்களில் உடன்பாடில்லாதபடியால் அடக்கி வாசித்து விட்டு வெளியேறுகிறேன்…:-))

 5. rammalar சொல்கிறார்:

  நல்ல பதிவு.
  நான் சிங்கப்பூர் வந்த போது, மாரியம்மன் கோயிலில் முருகனுக்கு,தரமான
  நாதஸ்வர இசையுடன் நடந்த ஆராதனை கண்டு லயித்துப் போனேன்.

  “மநஸிஜ கோடி, கோடி லாவண்யாய’ என்று சொன்னதன் மூலம்,
  முத்துசுவாமி தீட்சிதர்,
  “முருகன் மன்மதனை விட கோடி, கோடி மடங்கு அழகுள்ளவர்!’
  என்று பெருமைப்படுத்துகிறார்.
  “மநஸிஜன்’ என்றால் மன்மதன் என்று பொருள்
  .”அழகன் முருகன்” என்ற கட்டுரை படிக்க;

  http://www.dinamalar.com/weeklys/vmalarnewsdetail.asp?news_id=339&dt=02-10-09
  நன்றி
  ராமநாதன்
  http://rammalar.wordpress.com

 6. valaipookkal சொல்கிறார்:

  Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

 7. பாண்டித்துரை சொல்கிறார்:

  நன்றி ஜோதி பாரதி
  நன்றி டொன்லீ
  நன்றி ராமநாதன்
  நன்றி வலைப்பூக்கள் – விரைவில் இணைத்துவிடுகிறேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s