முதன்மைத்துவமாய் ஒரு பிறப்பு

9

கோவிந்தசாமிப் பிள்ளை திருமண அரங்கில் 26.01.09 அன்று மாலை 6.30 மணியளவில் செல்வி காவ்யாவின் மழலை குரலில் தமிழ்வணக்கத்துடன் நிகழ்வு தொடங்கியது. நூலாசிரியர் மலர்விழி இளங்கோவனின் இலக்கிய உலக வருகை பற்றிய செய்தியுடன் விழாவிற்கு வந்திருந்த பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் முகமாக விழா அரங்கமேடையை அழங்கரித்த ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால், சிறப்புவிருந்தினர் டாக்டர் உமாராஜன் உள்ளிட்ட நூல் ஆய்வாளர்களின் குறிப்புரையுடன் புதுமைத்தேனீ மா.அன்பழகனின் வரவேற்புரை அமைந்தது.

 

தலைமையை விரும்பாத இவர் தலை மை” –யையும் விரும்பாதவர் என்ற நிகழ்வின் நெறியாளர் செல்வி துளசியின் அன்பழைப்பில் நெகிழ்ந்த ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் முன்பு ஒருமுறை எழுதிய ஆண்களை விட பெண்கள் அதிகம் கவிதைக்கு நெருக்கமானவர்கள்  என்ற வரிகளை உள்ளடக்கிய கவிதைப்பெண் என்ற தலைப்பிலான கவிதை பொறுத்தமானதாக இருக்கும் என்று வாசித்து நூலாசிரியருடன் எங்களின் மனதினையும் நிறையச்செய்தார். பின்னர் எல்லோராலும் விரும்பப்படும் அம்மா திருமதி.வள்ளியம்மை சுப்பிரமணியம் தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார்.

 

தி.மு.க தலைமை இலக்கியம் வழங்கிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு கேடயம் பெற்ற தொழிலதிபர் போப்ராஜ், சமீபத்தில் வெளியீடுகண்ட சங்கமம் எனும் காவியத்தை படைத்த கவிச்சோலையின் இலக்கண ஆசான் பாத்தென்றல் முருகடியான், நூலாசிரியரின் மரபு வழிபயணத்தின் ஆசானும் கவிதையின் வாசகனுமான கவிதைநதி ந.வீ.விசயபாரதி ஆகியோரைபற்றிய புதுமைத்தேனி மா.அன்பழகனின் அறிமுகத்தோடு நூலாசிரியரின் அன்பினால் சிறப்புச் செய்யப்பட்டது. நிகழ்வில் இல்லாத அங்கமாக ஆஸ்கார் விருதினை எதிர்பார்த்து காத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான மே மாதம்திரைப்படத்தில் மார்கழி பூவே மார்கழி பூவேபாடலை பாடிய ஷோபாசங்கரின் வருகையால், அரங்கம் நிரம்பிய திரைஇசை ஆர்வளர்களின் விருப்பத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது இசையின்றி எங்களுக்காக பாடப்பட்டமார்கழி பூவே மார்கழி பூவேபாடல்!.

 

சின்ன சின்ன தகவல்களை கூட ஆதாரமின்றி தந்துவிடக்கூடாது என்று கவனமாக இருக்கும் தங்கை மலர்விழியின் அறிவுக்கு கிடைத்த அழகிய வெளிப்பாடுதான் இந்த இதழ் வெளியீடு என்று, நூலசிரியரின் மரபுக் கவிதைக்கான பயணத்தின் கர்த்தா திணையளவு செய்த என்னை பனையளவு நன்றி பாரட்டிவிட்டார் என்று தன் அடக்கத்துடன் ஏற்கும் முகமாக அமைந்தது கவிஞர் ந.வீ.விசயபாரதியின் நூல் அறிமுகஉரை.  பொருளாதார பிரச்சினையினை மையஓட்டமாக இணைத்து கருவறைப் பூக்களில் உலகியல் என்ற பார்வையில் நகைச்சுவை ததும்ப அமைந்த தொழிலதிபர் ஜோதி.மாணிக்கவாசகத்தின் நூல் ஆய்வில் கவிஞரின் கவிதையோடு நம்மை சுற்றிலுமான சந்தர்பங்கள் நிறைய கிடக்க பயன்படுத்துவது நம்கையில்தான் என்றும், தேர்வுகளில் முதல் நிலையில் வரக்கூடியபெண்கள் திருமணத்திற்கு பின்பு சமுக நீர்ஓட்டத்திலிருந்து விலகுவதால் ஏற்படும் பொருளாதார நிலைமை, பெண்மையின் நிர்வகிப்பில் இதுவரையில் எந்த ஒரு நிர்வாகமும் திவாலானதாக இதுவரை கேள்விபடவில்லை என்றதுடன், சீட்டுக்கட்டாய் சரியும் பங்குச்சந்தையையும் தொட்டு பேசிய இவரின் பேச்சால் எதிர்வரும் காலத்தில் ஜோதி.மாணிக்கவாசகம் அவர்களை முன்வைத்து நம்பிக்கை தரும் தொழில் முனைவோர் கருத்தரங்குகள் சிங்கப்பூரை கடந்தும் நடைபெறாலம்.

 

//சாண் ஏறும் உன்னால்// முழம் ஏறவும் முடியும்// முழுவதும் ஏறவும் முடியும்// என்ற நூலாசிரியரின் நம்பிக்கைதலைப்பிலான கவிதையே கருவறைப் பூக்களில் உறவியல் என்ற தனது முதல் நூல்ஆய்வினை செய்ய உந்துசக்தியாக இருந்தது என்ற திருமதி விஜி. ஜெகதீஷ் தனது பதின்மவயது பருவங்களுடன் அம்மா கற்பித்த ஆத்திச்சூடியை ஞாபகபடுத்தி இன்று பெண்குழந்தையை பெற்று வளர்கும் போதுதான் அவர்களின் அடிவயது பயத்தினை உணரமுடிகிறது, அப்படி அமைந்த கவிஞரின் கவிதையை சுட்டி உறவுக்குள் விட்டுக்கொடுத்தல், நடுநிலையாக சித்தித்தலை உள்ளடக்கிய ஆண்கள் ஆதங்கபடக்கூடிய கவிதையுடன், உலகநடப்புகளை உன்னிப்பாய் கவனிக்கும் இவரின் கவிதைகள் இயல்பான கவிதைகளாக நிரம்பி வழிவதை முன்னுரைத்து, இன்று மலர்விழி இளங்கோவனின் கவிதையால் ஈர்க்கப்பட்டு நானும் முதன் முதலாக ஒரு கவிதை எழுதியதாக எண்ணிப்பார்ப்பாய மலர்விழி என்ற கவிதையை சொன்னபோது எத்தனைபேருக்கு கவிதை எழுத ஆரம்பிக்கும்போதே மேடையும் கைத்தட்டல்களும் கிடைக்கிறது என்பதை எண்ணிக்கொண்டிருந்தேன்.

 

நூலுக்கு அணிந்துரையளித்த முனைவர் சு.ப.திண்ணப்பன், சிங்கப்பூர் எழுத்தாளார் கழக தலைவர் நா.ஆண்டியப்பன், கவிஞர் பிச்சினிகாடு இளங்கோ ஆகியோருக்கு நன்றியறிதலோடு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பின்னர் இதழ் மொழி கவிதையை சுட்டியும் நூலாசிரியருடனான அறிமுகம் பற்றியும் கவிதைநூல் ஒரு செய்திவாசிப்பினையும் தருகிறது என்ற  நிகழ்வின் சிறப்பு விருந்தினர் மருத்துவர் உமா ராஜன், என் போன்றவருக்கு திருக்குறள் கூட புரிந்துகொள்வது கடினம்தான் ஆனால் மலர்விழி இளங்கோவனின் கவிதைகள் புரிந்துகொள்வது மிக எளிமையான ஒன்றாக இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் தனிமையில் அமர்ந்து நானே படித்து புரிந்துகொண்டு இன்புறுவேன் என்றது என்னுள் அவருள்ளான குழந்தைமையையே ஞாபகபடுத்தியது. பின்னர் குழந்தையின் அழுகையும் சிரிப்பினூடே மலர்ந்த கருவறைப்  பூக்கள்  நூலினை மருத்துவர் உமா ராஜன் வெளியிட முதல் பிரதியை திரு.எம்.ஏ. முஸ்தபா அவர்களின் சார்பாக அவரது மருமகன் திரு.ரோஸித் அலிமின் பெற்றுக்கொண்டார்.

 

காணும்பொங்களுக்கான மகிழ்ச்சியை தந்திருப்பதாக சொன்ன நூலசிரியர் மலர்விழி இளங்கோவனின் ஏற்புரை மற்றும் நன்றியறிதல் இலக்கிய பயணம், அதற்கு வழித்துணையாய் பயணித்த துணைவர் உள்ளிட்ட குடும்பத்தினர், கவிமாலை காப்பாளர் பிச்சினிகாடு இளங்கோ, கவிச்சோலை, கவிமாலை அமைப்புகள், அதன்பால் பெற்ற நட்பு வட்டம் என்று விரிந்த ஞாபங்களில் நிகழ்வினை மா.அன்பழகனுடன் முன்னின்று நடத்திய ந.வீ சகோதரர்களும் மூம்மூர்திகளாய் காட்சி தருவதாக சொல்லி, இன்றும் கனவு போன்று இருக்கும் கை விரல்களை எண்ணி முடிக்ககூடிய நாட்சிக்கனத்தில் கிடைக்க பெற்ற ம.தி.மு.க செயலாளர் திரு.வை.கோ அவர்களின் முன்னுரையையும் தொட்டு நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த ஒவ்வொருவரையும் மறவாமல் நினைவுகூர்ந்து நன்றி நவிழ்தார்.

 

முதல் முறையாக தமிழ் நிகழ்வினை நெறிபடுத்திய செல்வி. துளசியின் பேச்சில் கன்றின் துள்ளல் நிறைந்த அழகியலைகாண முடிந்தது. இந்த நூலின் அட்டைப்படத்தை வடிவமைத்ததும் இவர் என்பது இவரின் கூடுதல் சிறப்பு. நிகழ்விற்கு தமிழர் பேரவை தலைவர் தேவந்திரன், தினமலர் நிருபர் வெ.புருஸோத்தமன், மறைந்த கவிஞர் உதுமான் கனியின் துணைவியார், நூலக அதிகாரி புஸ்பலதா, ஒலி96.8 ன் படைப்பாளிகள் உமா கணபதி, பொன் மகாலிங்கம், எழுத்தாளர்கள் மாதாங்கி, சித்ரா ரமேஸ், நூர்ஜகான் சுலைமான், ஜெயந்தி சங்கர், பாலுமணிமாறன், இராம.வைரவன் முனைவர் ரெத்தினவேங்கடேசன், கவிஞர்கள் இறை மதியழகன், தமிழ்நதி, ரசீத்,  கோ.இளங்கோ, பாடலாசிரியர் நெப்போலியன், இதழ் ஆசிரியா ஜஹாங்கீர், சமுக தலைவர்கள், புரவலர்கள், வணிகர்கள், இலக்கிய ஆர்வளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வினை பட்டிமன்ற பேச்சாளர் பிரசாத், மற்றும் வசந்தம் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு ஒளிப்பதிவாளரும் பதிவு செய்தனர் .

 

இந்த நூல் கவிஞரின் முதல் நூல் வெளியீடு, அவரது கவிதை முதன்முறையாக இசையில் பாடப்பட்டதும் இந்நிகழ்வில்தான், விழாவின் தலைமைஏற்ற ஆசியான் கவிஞரின் தலைமைஉரையை முதன்முதலாய் நான் கேட்டது, நிகழ்வின் சிறப்பு விருந்தினர் டாக்டர் உமா ராஜன், நூலாய்வு செய்த திரு. ஜோதி.மாணிக்கவாசகம், திருமதி .விஜி ஜெகதீசனின் முதல் நூலாய்வு, செல்வி துளசி இளங்கோவனின் முதல் நெறியாளுமையுடன், முதல் நூல்அட்டை பட வடிவமைப்பு என எல்லாம் முதலாய் இருப்பதே  முதன்மைத்துவமாய் ஒரு பிறப்பு என்ற தலைப்பிற்கான  காரணம்.

©pandiidurai@yahoo.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s