சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாட்டில் நடைபெறும் முத்தமிழ் விழாவில் கலந்து கொள்ள ஏப்ரல் 10-ன்று அன்று, வெகுஜனப் பத்திரிக்கையில் கலகக்குரல் எழுப்பி வரும் ஞாநி சிங்கப்பூர் வருகிறார். முத்தமிழ் விழா மற்றும், நண்பர்கள் ஏற்பாடு செய்யும் சந்திப்புகளில் இரு தினங்கள் கலந்துகொள்கிறார். ஏப்ரல் 15 அன்று மலேசியா சென்று அங்கு சில நாட்கள் தங்கவிருக்கும் இவர், இவ்விரு நாடுகளில் உள்ள இலக்கிய எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திப்பதில் ஆர்வமாக இருக்கிறார்.
ஊரில் இருந்த காலகட்டத்தில் வீட்டில் ஆவியும் ஜீவியும் அப்பா பிடித்துவருவார் (அக்கா தம்பி போட்டியில் படிப்பதற்கு முன்னுரிமை எனக்குத்தான்) . பின்னர் நான் கர்நாடகா மாநிலத்தில் ஹாசன்–னில் பணிபுரிந்த காலகட்டத்தில் வாசிப்புக்கு துணையிருந்தது தினத்தந்தியுடன் ஆவி ஜீவி தான். சிங்கப்பூர் வந்து எழுத ஆரம்பித்த பின்னர் ஆவி புடிப்பதை நான் விட்டாலும் எனது சகோதரன் புண்ணியத்தால் டிசம்பர்-08 வரை புடிக்க முடிந்தது. இடை பட்ட காலத்தில் ஞாநி ஆவியில் இருந்து விலகி குமுதம் இதழுக்கு எழுத ஆரம்பித்தது தற்செயலாகத்தான் தெரியும், ஞாநி குமுத்திற்கு மாறிய ஆச்சிரியத்தை கண்டடைய கைப்பற்றிய அந்த குமுதம் இதழ் பற்றி வேறொரு பதிவு போட்டிருந்தேன்.
அதை படிக்கனும் நினைச்சா இங்க கிளிக்குங்க.
இப்ப ஆவி குமுதம் எப்பவாவது நண்பர்கள் வீட்டுக்கு சென்றால் படிப்பதுண்டு. ஞாநி பாமரன் என்று இணையபக்கத்திற்கு வந்தமை ஞாநியை மட்டும் வாசிக்கும் வெகுஜனபத்திரிக்கைக்கு இழப்பாக இருந்தாலும் இணையப் பரிச்சயம் இணையவசதி என எடுத்துக்கொண்டால் சொற்பமான எண்ணிக்கைக்கு முன் பத்திரிக்கை விற்பனை ஒன்றும் பாதாளத்திற்குள் சென்றுவிடாது(இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு).
ஆனால் வெளிநாடுகளில் வசிக்கும் என்போன்றவருக்கு ஞாநி–யின் இந்த வருகை (சிங்கப்பூல் + இணையம்) ஒரு கொண்டாட்டம் தான்.
குட்டு : கடந்த ஆண்டு கண்ணதாசன் விழாவில் ஒரு நாட்டுப்பாடலை பாடி முடித்தபின் பேசிய பேச்சிற்காக திரைப்பட நடிகை ஆச்சி மனாகரம்மா–விற்கு
சொட்டு: சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்திற்கு
பூஞ்செண்டு: இன்று காலை என்னை தொடர்பு கொண்ட முதல் அழைப்பில் என்ன பாண்டி தூங்கிட்டியா? தொந்தரவு செய்திட்டேனா? எனும் வினவலுக்கு பின் ஞாநி–யின் வருகை பற்றிய செய்தியை சொன்ன எழுத்தாளர் சித்ரா ரமேஷ்–அவர்களுக்கு.
ஞாநி–யின் இணையப்பக்கம்: http://www.gnani.net
ஞாநியின் வருகைக்கு
ஓ போடுவோம்
குறிப்பு: ஞாநியின் சிங்கப்பூர் வருகை பற்றிய அழைப்பிதழ் இனிமேல் தான் எனக்கு வரும் என்பதால் நிகழ்வு குறித்த தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்.
ஞானிக்கு ஓ போடுவோம்!
பதிவின் தகவலை ஓஹோன்னு படிச்சிக்கிறோம்.
அப்பறம் ஞானிக்கு ஓ போடுவோம்!
ஞாநி க்கு “ஓ” போடலாம்..”ஓகோ” போட முடியாது 🙂
’டொன்’லீ
கோவி.கண்ணன்
ஜோதிபாரதி
நிகழ்விற்கு நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
ஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்காது. இவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதே இவருக்கு முழுநேர தொழில். பொதுவாக இவருக்கும் சாருவுக்கும் ஒத்து வராது. ஆனால் இவர்கள் இருவரையும் எதிர்ப்பதில் ஒற்றுமையானவர்கள்
இவர்களை எதிர்பதின் மூலம் பிரபலம் தேடுகின்றார்கள்