“புன்னகைக்கும் இயந்திரங்கள்“ 15.03.09 அன்று சிங்கப்பூரில்

 

 

மூன்று புத்தகங்கள் வெளியிடுவதில், எங்காவது சந்தித்தால் என்னை கண்டு புன்னகைக்கும் சித.அருணாச்சலம், மற்றும் “வாசகர்வட்டம் “பிரம்மா நூல் வெளியீடு “நாம் காலண்டிதழ் “அநங்கம் அலைவரிசையில் பயணிக்கும் இராம.வைரவன் நூல் வெளியீடுபற்றிய செய்தியினை முதன்மைபடுத்தி வலைதளத்தில் பதிந்து நண்பர்கள் வட்டத்தில் மின்னஞ்சல் செய்யலாம் என்றிருந்தேன்.

 

கணிணி முன் அமர்ந்து அழைப்பிதழை பிரித்து படித்ததில் கொஞ்சம் சுவாரஸ்யம் குன்றி வேறொன்றை முதன்மைபடுத்த மனம் இட்டுச்சென்றது.

 

அது என்னானே தெரியல எல்லா நிகழ்வுகளிலும் தமிழ் வாழ்த்து மட்டும் பெண்ணே பாட வேண்டும், (அதை உடைத்து சிங்கப்பூரின் சில மேடைகளில் தனித்த அடையாளத்துடன் ஒலித்தது என்றால் இனியதாசனை சொல்லவேண்டும்) தமிழ் தாயாக பிறந்துவிட்டதாலா?

 

3-புத்தகங்கள் வெளியீடும் இன்நிகழ்வில் ஒரு புத்தகத்தை சௌந்தரநாயகி என்ற பெண் எழுதியிருக்கிறார். (அவருக்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துகள்) ஆனால் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிரலில் தான் பெண்ணை காணவில்லை. மனம் ஒரு குரங்கு என்ற ஒரு சொலவடை உள்ளது அது இந்த மாதிரி நேரத்தில்தான் ஞாபகத்திற்கு வரவேண்டுமா? கடந்த ஆண்டுதான் தங்கமீன் பதிப்பகம் வெளியிட்ட வேறொரு மனவெளி என்ற சிங்கப்பூரின் 20 பெண் எழுத்தாளர்கள் அடங்கிய சிறுகதை தொகுப்பு வெளியிடபட்டு உலகம் முழுவதிலும் ஒரு சிலர் வாசித்துக்கொண்டிருக்கையில் அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த பதிவையும் வாசித்துக்கொண்டிருக்கலாம்.

 

சிங்கப்பூரின் வாசகர் வட்டம் எழுத்தாளர் இராம.வைரவனுக்குள் சில சலனங்களையும் புரிதல்களையும் மாறுதல்களையும் கொஞ்சம் நகர்வினையும் ஏற்படுத்தியிருக்கலாம் என்ற என் எண்ணம் சரியான கணிப்புதானா என்பதை  “புன்னகைக்கும் இயந்திரங்கள்  நூலினை வாசித்து முடிக்கையில் தெரிந்துவிடும்.

 

 

நூல் வெளியிடும் சிதஎக செயலவை உறுப்பினர்களுக்கான

வாழ்த்துகளுடன்

இந்த பதிவின் வாயிலாக

நிகழ்வில் கலந்துகொள்ள உங்களையும் அழைக்கின்றேன்.

 

இடம்:அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் திருமண மண்டபம் 15 டேங் ரோடு

நாள்: ஞாயிறு 15.03.09

நேரம்: மாலை மணி 6.00

மொத்த நூலின் விலை: 25வெள்ளி மட்டுமே

 

 

 

p2

p1

 

Advertisements

எதிர்வரும் 8 சிங்கப்பூரில் தொல்.திருமாவளவன்

2117thirumavalavan_j

 

தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்,  விடுதலைசிறு‌‌த்தைகள் ட்சித் தலைவர் தொல்.‌திருமாவளன் “வள்ளுவமும் வள்ளலாரும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

 

முன்னதாக மகளிர் தினத்தை முன்னிட்டு கவிஞர் மலர்விழி இளங்கோவன் தலைமையில் மகளிர் கலந்துகொள்ளும் கவியரங்கம் நடைபெறும்.

 

நாள்: 8 மார்ச் 2009 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: மாலை 6.00 மணி

இடம்: பெருமாள் கோவில் திருமண மண்டபம் (சிராங்கூன் சாலை)

 

 

 

 

ஏற்பாடு: தமிழவேள் நற்பணி மன்றம்