காத்திருக்கிறேன்
எனது இருப்பை
இன்னும் கெட்டியாக்குகிறார்கள்
வெள்ளை நிறப் பீங்கான்களில்
டீ நிரப்பிக் காத்திருக்கிறேன்
எனது அறையில்
ஜன்னல்கள் திறந்தே இருக்கின்றன
அதனால்
நீங்கள் காற்றைப் பற்றி
யோசிக்க வேண்டாம்
கூண்டுகள் இல்லாத
பறவைகள்
வீடெங்கும் சுற்றித் திரிகின்றன
அதில்
நீங்கள் விரும்பும்
வெள்ளைப் பறவையும் உண்டு
அவைகள் எனது உணவு மேஜையில்
தனது அலகால்
உங்களது பசியை நிரப்பக் கூடும்
நீங்கள் யாரோடும் வரலாம்
ஒரே ஒரு நிபந்தனை
உங்களுக்க முகமூடிகள் இருந்தால்
வாசலிலேயே கழற்றி விடுங்கள்
அவற்றைப் பெற்றுக் கொள்ள
நீ விரும்பும்
வெள்ளைப் பறவை காத்திருக்கிறது.
எழுத்து – அப்பாஸ்