இது அப்பாஸ்-ற்கான அஞ்சலிக் குறிப்பல்ல

ப்பாஸ்-ன் சில கவிதைகளை சிற்றிதழ்களில் படித்திருக்கிறேன். அவ்வளவுதான் அவரின் எழுத்தின் மீதான எனது பரிட்சயம். அப்பாஸ்-ன் மறைவையடுத்து தமிழகத்தில் இருந்து வந்த சில மின்னஞ்சல்கள் நினைவுபடுத்தின அப்பாஸ் உடன் மரணத்தையும்.

எவ்விதமான பதட்டமும் துர்மரணம் பற்றிய சிந்தனைகளற்று பணியில் மூழ்கியதை இப்போது நினைக்கையில் தமிழகத்திற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஏதோ ஒன்றை இழந்துவிட்டதை இதுபோன்ற மரணங்கள் தான் உணர்த்துகின்றன. அந்த நேரத்தில் வலிந்து அழநினைப்பதை போலியாக எண்ணி கட்டாயபடுத்தி வரவழைக்கபடும் சில கண்ணீர்த் துளிகளும் இப்போதெல்லாம் என்னில் எட்டிப்பார்ப்பதில்லை.

சமீபத்தில் மலேசிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட “உயிர் எழுத்து” ஆசிரியர் சுதீர் செந்தில் சிங்கப்பூர் வந்து கலந்துகொண்ட ஒருநாள் சந்திப்பில் உடன் முதலில் இறந்த வழியே அப்பாஸ்-ன் உயிரை சுமந்தபடி வந்திருந்தார். அங்கு பேசிய ஒரு மணிநேரத்தில் சுதீர் செந்தில் ஒரு சமயம் என் கவிதைகள் மீது அப்பாஸ் முன்வைத்த விமர்சனங்கள் ஒரே இரவில் சில சிற்றிதழ்களில் வெளிவந்த கவிதைகள் உட்பட ஐம்பதிற்கும் அதிகமான கவிதைகளை தயவு தாட்சண்யமின்றி கிழித்தெரிய வைத்தது. அதன் பின் என்னுள் பிறந்த கவிதைகளுக்கு அப்பாஸ்-ம் ஒரு கர்த்தா என்றபோது கவிதைகளை உயிர்பிக்க வைத்தவனுக்கு கவிஞனை உயிர்பிக்கவைக்க தெரியாமை குறித்து வருத்தமே மேலோங்கியது.

எனக்கு முழுமையாய் கிடைத்த முதலில் இறந்தவன்-னை இன்னும் முழுமையாய் வாசித்து முடிக்கவில்லை. வாசித்தவரையில் மழை பெய்ய ஆரம்பித்துவிட்ட கவிதை வழியே அவ்வப்போது டேனியல் என்னோடு பேசத் தொடங்கியிருக்கிறான்.

சில கவிதைகளை தந்துவிட்டு

கடவுளாகிப் போனவனுக்கு

என்ன சொல்ல

 

ஆசிர்வதிக்கப்பட்ட

உன் முன் வந்தடைய

மரணம் ஒன்றும்

தொலைதூரத்தில் இல்லை

இன்றோ

நாளையோ

 நான் வந்தடைவதில்

எந்த சந்தேகமும் இல்லை

அதற்குள் சில கவிதைகளை

எழுதிவிட வேண்டிய

அவசரத்தில் இருப்பதால்

மரணம்

ந்

து

வந்து கொண்டிருக்கலாம்

©pandiidurai@yahoo.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s