நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா?
அதற்காகவே கோலம் வீடு தேடி வரும் பட இயக்கத்தை தொடங்கியிருக்கிறோம்.
கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்….. தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்பாளியும பார்வையாளரும நேரடியாக உறவு கொள்ளும இயக்கமே கோலம். எண்ணற்ற புள்ளிகளாக பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிகளை இணைத்து ஒரு கோலம் வரையும் படைப்பாளிகளின் அமைப்பு கோலம்.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்கள் முன்பதிவுத் தொகை எமக்கு வந்து எம்மை பிரமிக்கச் செய்யட்டும்.
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 9444024947. மின்னஞ்சல்: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்.
ஞாநி
நல்ல முயற்சி..பார்ப்பம் இது சாத்தியமாகின்றதா (இது உண்மையாகவே ஞானியால் அனுப்பபட்டதா..? என் வலையிலும் மறுமொழியாக இது இடப்பட்டிருகின்றது..:-)
ஞாநியால் அனுப்பபட்டதே.
கடந்தமுறை சிங்கப்பூர் வந்திருந்தபோது அவர் இதுபற்றிய விண்ணப்ப பிரதியை என்னிடம் கொடுத்து நண்பர்கள் வட்டத்தில் கொடுக்கசொன்னார். சில நண்பர்களுக்கு கொடுத்தேன். அந்த நேரத்தில் என் வலைப்பக்கத்தில் பதிவு செய்ய நேரமின்மையால் கோலம் பற்றிய செய்தியை பதியவில்லை
பாண்டித்துரை
நன்றி பாண்டித்துரை…:-)
இது எந்த அளவிற்கு பலனளிக்கிறது என்று பார்ப்போம்
நண்பர்களே
கோலம் ஒரு புது முயற்சி. எந்த அளவு வெற்றி பெறுகிறோம் என்பது நம்மால் மிகக் குறைந்தபட்சம் ஆயிரம் முதல் 2 ஆயிரம் பேரையாவது டி.வி.டி சந்தாதாரர்கள் ஆக்க முடிகிறதா என்பதை மட்டுமே பொறுத்தது. இது எளிதானதல்ல என்பதை நாங்களும் அறிவோம். எனினும் சிற்றிதழ் முயற்சிகளைப் போல நல்ல மாற்றுக்கு ஆசைப்படுவோர் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுவதை ஒருபோதும் கைவிடமுடியாது. தொடர்ந்து முயற்சிப்போம். வெற்றி பெறுவோம். ஆதரியுங்கள்.
அன்புடன்
ஞாநி
நன்றி ஞாநி.
அன்பின் கிரி!
நலமா.
உங்கள் பின்னூட்டத்திற்கு பதிவிட நினைத்திருந்த வேளையில் ஞாநி அவர்களே பதில் அனுப்பியிருக்கிறார்
நல்ல முயற்சி. வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
ஒரு சந்தேகம்!!
முன் பதிவு செய்ய பணம் அனுப்புபவர்களிடம் எதற்காக வயது, பாலினம், தொழில் முதலியவற்றைக் கேட்கிறீர்கள்.
பெயரும், விலாசமும், மின்னஞ்சல் அல்லது ஏதாவது ஒரு தொலைபேசி (தொலைபேசி அல்லது செல்பேசி) மட்டும் இருந்தால் போதாதா?
அல்லது முழு விபரமும் தந்தால்தான் அனுப்புவீர்களா?!!
மாயாவி சவுக்கியமா!
இந்தப் பதிவில் ஞாநி அவர்கள் தொலைதொடர்பு எண் உள்ளது. நீங்கள் தொடர்புகொண்டால் உங்களுக்கான தெளிவான பதில் கிடைக்கும்.
அடுத்த வாரத்தில் எப்படியும் ஒரு இருபது காமிக்ஸ் புத்தகம் கிடைக்கும் படிக்கவேண்டும்.