நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம்-6 வது இதழ் வெளிவந்திருக்கிறது.
நாம் இதழ் பற்றிய சிங்கப்பூர் தொடர்பிற்கு அழையுங்கள்
பாண்டித்துரை : 82377006
தமிழக தொடர்பிற்கு அழையுங்கள்
பிரபு:9865257343
எங்களின் சின்ன சின்ன கனவுகளை உள்ளடக்கி 22.01.2010 எங்களின் புது வீடு திறக்கப்பட்டது. 15 நாள் விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தேன் ஊருக்கு சென்றதை வெகு சிலரிடம்தான் தெரிவித்திருந்தேன்.
புதுவீடு நிரம்ப மகிழ்ச்சியை கொடுத்தது. அம்மா அப்பாவின் விருப்படி ஒவ்வொரு சின்ன சின்ன அசைவுகளையும் பார்த்து பார்த்து கட்டியது. ஒப்பந்தகாரரிடம் வீட்டை கொடுக்காமல் அம்மா அப்பாவே முன் நின்று கட்டியதால் ஒவ்வொரு செங்களிலும் அவர்களின் வாசமும் நேசமும் மிகுந்திருந்தது. வீட்டை கட்டி முடித்ததில் அப்பாவுக்குதான் நிரம்ப மகிழ்ச்சி. பெண் கல்யாணத்திற்கு கூட அதிகம் விடுப்பு எடுக்காதவர் புது வீட்டு அழைப்பிற்காக 15நாட்கள் விடுப்பு எடுத்திருந்தார். நிறைய உறவினர்கள் நண்பர்கள் என்று வந்திருந்தாலும் சில உறவினர்கள் பல நண்பர்கள்னு குறுகிய கால அவகாசத்தில் அழைக்க விடுபட்டவர்கள் அதிகம்.
புது வீடு மகிழ்ச்சியா இருந்தாலும் அந்த பழையவீடு தந்த நினைவுகள் ஏராளம். அந்த வீடே இருந்திருக்கலாம் என்ற நினைப்பும் வந்து செல்கிறது. எனக்கு கோபம் வந்தால் ஏறி உக்காரும் வேப்பமரம் கிணத்துக்குள்ள குதிச்சிருவேன் சொல்லி மற்றவர்களை மிரட்டிய கிணறு கசப்பான மருந்து சாப்பிட பயந்து ஒளிந்து கொண்ட கீற்று தட்டி கோழிகிடாப்பு வெள்ளம் சிதைத்த சுவர் என நிறைய கீறல்கள். அந்த வீட்டுலதான் அக்காவுக்கு திருமணம் நடந்தது ராமுசித்திக்கு குழந்தை பிறந்தது நானும் என் தம்பியும் மட்டுமே அடித்துக்கொண்டு விளையாடிய திடல் என எனக்குள்ளும் என் குடும்பத்திலும் இனி நினைவாக மட்டும்
இனி எனது பால்யதையும் அந்த வீட்டையும் மீள பெறமுடியாது.
புதுவீட்டின் வாசனையை முழுமையாக கிரகிக்கமுடியவில்லை விடுமுறை முடிந்துவிட்டது. இன்னும் ஆறுமாதம் கழித்து பார்க்கும் போது பழைமைக்கு மாற முயற்சித்து எங்காவது எண்ணை பிசுக்குடன் கொஞ்சம் நிறம் மங்கி அம்மா அப்பாவின் அதீத புன்னகையோடு அரவணைத்க்கலாம்.
ஒரு வேப்பமரமும்
வெள்ளம் சிதைத்த வீடொற்றின்
நவீன பக்கத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
மகிழ்ச்சியாக இருக்கலாம்
வேப்பமரம் வெட்டப்பட்ட கனத்தையும்
வெள்ளம் சிதைத்த சுவற்றின்
மிச்ச செங்கற்களை உருவிய பொழுதையும்
நினைக்காது இருக்கும் வரை
மகிழ்வுடன்
இரா. நீதிப்பாண்டி (பாண்டித்துரை)
இரா. சக்திவேல்