முத்துப்பாண்டி இல்லம்

எங்களின் சின்ன சின்ன கனவுகளை உள்ளடக்கி 22.01.2010 எங்களின் புது வீடு திறக்கப்பட்டது. 15 நாள் விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தேன் ஊருக்கு சென்றதை வெகு சிலரிடம்தான் தெரிவித்திருந்தேன்.

 

புதுவீடு நிரம்ப மகிழ்ச்சியை கொடுத்தது. அம்மா அப்பாவின் விருப்படி ஒவ்வொரு சின்ன சின்ன அசைவுகளையும் பார்த்து பார்த்து கட்டியது. ஒப்பந்தகாரரிடம் வீட்டை கொடுக்காமல் அம்மா அப்பாவே முன் நின்று கட்டியதால் ஒவ்வொரு செங்களிலும் அவர்களின் வாசமும் நேசமும் மிகுந்திருந்தது. வீட்டை கட்டி முடித்ததில் அப்பாவுக்குதான் நிரம்ப மகிழ்ச்சி. பெண் கல்யாணத்திற்கு கூட அதிகம் விடுப்பு எடுக்காதவர் புது வீட்டு அழைப்பிற்காக 15நாட்கள் விடுப்பு எடுத்திருந்தார். நிறைய உறவினர்கள் நண்பர்கள் என்று வந்திருந்தாலும் சில உறவினர்கள் பல நண்பர்கள்னு குறுகிய கால அவகாசத்தில் அழைக்க விடுபட்டவர்கள் அதிகம்.

 

புது வீடு மகிழ்ச்சியா இருந்தாலும் அந்த பழையவீடு தந்த நினைவுகள் ஏராளம். அந்த வீடே இருந்திருக்கலாம் என்ற நினைப்பும் வந்து செல்கிறது. எனக்கு கோபம் வந்தால் ஏறி உக்காரும் வேப்பமரம் கிணத்துக்குள்ள குதிச்சிருவேன் சொல்லி மற்றவர்களை மிரட்டிய கிணறு கசப்பான மருந்து சாப்பிட பயந்து ஒளிந்து கொண்ட கீற்று தட்டி கோழிகிடாப்பு வெள்ளம் சிதைத்த சுவர் என நிறைய கீறல்கள். அந்த வீட்டுலதான் அக்காவுக்கு திருமணம் நடந்தது ராமுசித்திக்கு குழந்தை பிறந்தது நானும் என் தம்பியும் மட்டுமே அடித்துக்கொண்டு விளையாடிய திடல் என எனக்குள்ளும் என் குடும்பத்திலும் இனி நினைவாக மட்டும்

 

இனி எனது பால்யதையும் அந்த வீட்டையும் மீள பெறமுடியாது.

 

புதுவீட்டின் வாசனையை முழுமையாக கிரகிக்கமுடியவில்லை விடுமுறை முடிந்துவிட்டது. இன்னும் ஆறுமாதம் கழித்து பார்க்கும் போது பழைமைக்கு மாற முயற்சித்து எங்காவது எண்ணை பிசுக்குடன் கொஞ்சம் நிறம் மங்கி  அம்மா அப்பாவின் அதீத புன்னகையோடு அரவணைத்க்கலாம்.

 

ஒரு வேப்பமரமும்
வெள்ளம் சிதைத்த வீடொற்றின்
நவீன பக்கத்தில்
நின்று கொண்டிருக்கிறோம்
மகிழ்ச்சியாக இருக்கலாம்
வேப்பமரம் வெட்டப்பட்ட கனத்தையும்
வெள்ளம்  சிதைத்த சுவற்றின்
மிச்ச செங்கற்களை உருவிய பொழுதையும்
நினைக்காது இருக்கும் வரை

மகிழ்வுடன்

இரா. நீதிப்பாண்டி (பாண்டித்துரை)

இரா. சக்திவேல்

4 thoughts on “முத்துப்பாண்டி இல்லம்

 1. பாண்டித்துரையின் புதிய வீட்டிற்கு வாழ்த்து.
  ———————————————————————————
  சிங்கப்பூர் கவிமாலை கவிஞரும்,கணக்காளருமாகிய நீதிப்பாண்டி அவர்களால் அமைக்கப்பட்ட புதிய இல்லத்தைப் பார்த்தவுடன் அம்மாவின் மனதில் ஏற்பட்ட உற்சாகத்தில் பிறந்த பாடலிது.

  ஆக்கமான அன்புவழி அரணாகிய வீடு
  ஊக்கத்துடன் ஒத்துழைத்து உருவாக்கிய வீடு
  தேக்கமான பாசத்திலே திழைத்திருக்கும் வீடு
  நோக்கமெல்லாம் முன்னேற்ற நுணுக்கமான வீடு.

  பாண்டித்துரை சகோதரரின் பண்பான இல்லம்
  காண்போரின் பார்வையிலே கணிசமான இல்லம்
  தூண்களெலாம் விருந்தினரை வரவேற்கும் இல்லம்
  மாண்புடைய மேன்மையான மனிதர்வாழும் இல்லம்.

  வேப்பமரம் சிதைந்தாலும் விநோதமான மனையாம்
  கூப்பிட்டு விருந்தளிக்கும் குதூகல மனையாம்
  சாப்பிட்டுப் போங்களென்று ஆதரிக்கும் மனையாம்
  மாப்பிள்ளைக் கோலங்கள் மருவுகின்ற மனையாம்.

  ஆசிகளுடன்…………………அம்மா………….வள்ளியம்மை சுப்பிரமணியம்

 2. பாண்டித்துரை சொல்கிறார்:

  தங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி;

 3. கிரி சொல்கிறார்:

  “புது வீடு மகிழ்ச்சியா இருந்தாலும் அந்த பழையவீடு தந்த நினைவுகள் ஏராளம். அந்த வீடே இருந்திருக்கலாம் என்ற நினைப்பும் வந்து செல்கிறது”

  🙂 உண்மை தான்.

  வாழ்த்துக்கள் பாண்டித்துரை

 4. பாண்டித்துரை சொல்கிறார்:

  நன்றி கிரி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s