நிராகரிக்கப்படவேண்டிய விமர்சனம் . (சிங்கப்பூரின் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு))

ஜீன் 2010 வல்லினம்’ (மலேசியா) மின்னிதழில் வெளிவந்த சிங்கப்பூரின் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு) என்ற முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி அவர்களின் விமர்சனக் கட்டுரைக்கான எதிர்வினையை வல்லினம் இதழுக்கு அனுப்பச் சொல்லி நண்பர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். ஒரு இதழுக்கு ஏற்ற கட்டுரையா இல்லையா என்று அந்தகட்டுரைகளை வாசிக்கும் போதே அதன் வாசகர்கள் உணர்ந்துவிடுவார்கள். அப்படி இந்த கட்டுரையை நான் படித்தபோது  

 

வல்லினம் இதழ் மீது ஏமாற்றமே ஏற்பட்டது.

வல்லினம் இதழில் வெளியான முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி – யின் கட்டுரைக்கான இணைப்பு

http://www.vallinam.com.my/issue18/essay5.html

முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ.லஷ்மி-யின் கட்டுரைக்கு பிற எழுத்தாளர்கள் அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்துள்ளனர் அதற்கான இணைப்பினையும் இங்கு கொடுத்துள்ளேன்.

கே.பாலமுருகன் (மலேசியா)  http://bala-balamurugan.blogspot.com/2010/06/blog-post_03.html
பாலுமணிமாறன் http://baalu-manimaran.blogspot.com
அப்துல்காதர் ஷாநவாஸ்   https://shaanavas.wordpress.com
சூன்யா http://soonya007.blogspot.com
இந்திரஜித் http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=3016

90-க்கு பிறகு கவிதைச் சூழல் எப்படி இருக்கிறது என்று வல்லினம் இதிழில் முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லஷ்மி தன்னுடைய சுயத்தை பதிவு செய்துள்ளார். இந்த கட்டுரையை படித்த பலரும் முன்பு அவர் பெற்ற கௌரவத்தை திரும்பவும் பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டு எழுதியிருப்பதாகவே கருத்துரைத்தனர் (விமர்சனப் புலிங்கிற பட்டம்க)

அவர் பெறுவதும் விடுவதும் பற்றிய பிரக்ஞை எனக்கு இல்லை..

கவிதை குறித்த விமர்சனம், கவிஞர் குறித்த விமர்சனத்தில் பொதுத்தன்மையை வசதியாக மறந்துவிட்டார் (மறதி கட்டுரை முழுமைக்கும் வியாப்பித்துள்ளது). கட்டுரை முழுமைக்கும் சிங்கையின் புறச்சூழலை கவிஞர்கள் பாடுவதாக குறிப்பிடும் முனைவர் (இனி முனைவர் என்றே அழைப்போம்) இத்துணை காலத்தில் அகம் என்ன என்று அவர்களுக்கு ஒரு வகுப்பு எடுத்திருந்தால் ஒரு வேளை கவிஞர்கள் “அகம்பிரம்மாஸ்மி” என கவிதை புனைந்திருக்கலாம்.

நீ வாழும் காலத்தில் என்ன செய்தாய் அதுதான் முக்கியம். அது அவரவர் மனதினை பொறுத்தது. அப்படி சுப்பிரமணியம் ரமேஷ் சிங்கப்பூரில் இருந்த காலத்தில் வாசகர் வட்டத்தை சிறப்பாகவே முன்னெடுத்துச்சென்றார்.  சுப்பிரமணியம் ரமேஷ் (மானஸாஜென்) கண்டடைந்த ‘நேற்றிருந்தோம்’ (நேற்றிருந்தோம் – சிங்கப்பூரின் 60-களை மீள்பார்வை செய்யும் முகமான 60-களில் வாழ்ந்தவர்களின் அனுபவப் பகிர்வு- இது சிங்கப்பூருக்கான ஒரு ஆத்மார்த்தமான தேடல்னு – ஓ இது கவிதை அல்லவல்ல அல்லவல்லவா)

‘நேற்றிருந்தோம்’ இன்று கட்டுரை தொகுப்பாக மலர வாசகர் வட்டத்தின் பொழுதுகளை களவாடிக்கொண்டிருப்பதை அங்கு மௌனமாக வந்து செல்லும் வாசகர்கள் அறிவார்கள். மூத்த எழுத்தாளர் இராம.கண்ணபிரான் அவர்கள் சமீபத்திய வாசகர் வட்டத்தில் (மணற்கேணி 2009 வெற்றியாளர்களுடனான சந்திப்பில்) சுப்பிரமணியம் ரமேஷ் வந்தபின்பு கட்டுரைகளாக வாசகர் வட்ட கருத்துகள் பதிவு செய்யப்பட்டது என்பதை குறிப்பிட்டிருந்தார். அதற்கான சாட்சியாக இன்றும் சில பதிவுகளை வாசகர் வட்டவலைபதிவில் பார்க்கலாம்.  http://vasagarvattam.blogspot.com

லதா சிங்கப்பூரின் அகத்தை படைக்கிறார் என்பதற்காக சுப்பிரமணியம் ரமேஷ்-ம் படைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது அல்லது நிர்பந்திப்பது எந்த அடிப்படையில் சரியான ஒன்று என்று எனக்கு தெரியவில்லை. மேலும் அது உங்களின் கவிதை குறித்த ரசனையின் மொன்னை தனத்தை அப்பட்டமாக காட்டுகிறது. சுப்பிரமணியம் ரமேஷ்-ன் கவிதை குறித்தும் நீங்கள் பேசாதது மொன்னை தனத்தை பலமாக ஆமோதிப்பதாகவே வாசகர்களுக்கு தோன்றலாம்.

லதா கவிதைகளின் மீதான சுப்பிரமணியம் ரமேஷ்-ன்  விமர்சனம் அவசியமானது, சுப்பிரமணியம் ரமேஷ் பற்றிய இன்னும் சில உங்களின் காழ்ப்பு வரிகள் பாவம் அவரிடம் எதையோ எதிர்பார்த்து நீங்கள் ஏமாந்த கதையை வெளிப்படுத்துவதாக படிக்கும் சிலர் நினைக்கக்கூடும். (யு- டீயூப் இணைப்பினை கொடுத்திருந்தால் வல்லினம் ஆசிரியர்கள் புகைப்படத்தை தேடி கட்டுரைக்கு சான்றாக வெளியிட்டிருப்பார்கள் – இப்போது கூட நீங்கள் அனுப்பிவைக்கலாம் )

இந்த கட்டுரைக்கு துளியும் சம்பந்தம் இல்லாதது ஜெயந்தி சங்கர் பற்றிய பதிவுகள்.

அவரின் மொழி பெயர்ப்பு கவிதைகள் பற்றி ஏதேனும் முன்வைத்திருந்தால் ஜெயந்திக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும் .

மலேசிய எழுத்தாளர் கே.பாலமுருகன் அவரது எதிர்வினையில் குறிப்பிட்டது போல நீங்களும் அதைத்தானே செய்திருக்கிறீர்கள். என்ன ‘மௌனம்’ (மலேசியா) இதழில் வெளிவந்த கட்டுரையில் கொஞ்சம் பிட் சேர்த்து ‘வல்லினம்’  இதழுக்கு அனுப்பியிருக்கிறீர்கள். இன்னும் கொஞ்சம் பிட் சேர்த்து ஏதேனும் இதழுக்கு அனுப்பலாம். பாவம் ‘வல்லினம்’ ஆசிரியர் குழவினர் மௌனத்தை வாசித்திருப்பின் இந்த கட்டுரை தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்று கட்டுரையாக வந்திருக்கலாம் . (வாசிக்காதது அவர்களின் உன்னதத்தை குறிக்கிறது)

மாதங்கியின் கவிதை ஒன்றை முனைவர் ‘சொல்வனம்’ எனும் இணைய இதழில்  தேடி கட்டுரையில் பதிவிட்டிருப்பதன் காரணத்தை அதற்கான கவிதா விமர்சனத்தில் வாசகர்கள் கண்டுணரலாம். பிற கவிதைகள் பற்றிய குறிப்புகள் புத்தகத்தில் இருந்து குறிப்பிட இந்த கவிஞரின் கவிதையை மட்டும் இணையத்தில் இருந்து எடுத்து கையாண்டிருப்பதன் காரணத்தை வாசக எண்ணங்களுக்குள் வகைப்படுத்தியிருப்பர்.

ஒரு நிகழ்வில் முனைவர் அவர்களுக்கு சிங்கப்பூரின் சுப்புடு என்று யாரோ பட்டம் கொடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது. அவரது கவிதையையும் முனைவர் அவர்கள் விமர்சித்திருப்பின்  மோதிரக் கையில் குட்டுபட்டவராக அந்தக் கவிஞர் மோட்சம் அடையலாம்.

முனைவரின் வசதிக்கு (மறதிக்கு) பல கவிஞர்களை இந்த கட்டுரையில் காணவில்லை. ஒரு வேளை ‘மௌனம்’ இதழின் பக்க பற்றாக்குறையை வல்லினம் இதழில் ஒப்பேற்றியது போல வல்லினம் இதழின் பற்றாக்குறைக்கு வேறு ஏதேனும் இதழ்களை நாடலாம் அல்லது முனைவரே 90க்கு பிறகு சிங்கப்பூரில் கவிதைச் சூழல் என்று ஒரு புத்தகம் போடலாம் (அதை படித்து நான் அறிந்த சிங்கப்பூர் இலக்கியம் என்று வெங்கட் சுவாமிநாதன் ஒரு பத்திக் கட்டுரையும் எழுதலாம்)

பல்வேறு கவிஞர்கள் பற்றி குறிப்பிடும் போது அவர்களின் கவிதை குறித்து பேசும் முனைவர் மா.அன்பழகன் அவர்களை பற்றி குறிப்பிடும் போது எங்கும் அவரின் கவிதையை முன்வைத்து பேசாததை மா.அன்பழகனார் ‘வல்லினம்’ வாசித்திருப்பின் வருந்தியிருக்கலாம் (மோ.கு படவில்லையே என்று). நீங்கள் அவரின் எந்த ஒரு கவிதையையும் வாசிக்கவில்லை என்பதாகவே வாகர்கள் நினைக்ககூடும்.

இங்கு பல ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின் கவிதைகள் சிங்கப்பூரின் புறத்தையும் சிங்கப்பூரை துதி பாடுவதாக குறிப்பிடும் முனைவர் என்றேனும் ஒ.அ.ஊ-ளின் வாழ்வியலை (முனைவர் ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ) (பணிக் காலம் தங்கும் இடம் என ———-) கொஞ்சம் ஆராய்ந்து இருப்பின் கவனமும் கருத்தும் மாறியிருக்கலாம் (அங்காடித் தெருவிற்கு பதிவு எழுதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு)

பெரும்பாலான ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களின்  (ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் – இப்படியும் அழைக்கலாம்) பணிக்கால அளவு குறைந்த பட்சம் 10 மணிநேரம் பலர் ஞாயிற்றுக்கிழமை உட்பட வேலை செய்கிறார்கள். நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பலர் அன்று விடுப்பு எடுத்தோ அல்லது கூடுதல் பணி நேரத்தை துண்டித்துவிட்டோதான் (கூடுதலாக ஊதியம் கிடைக்கும்  நேரம்) இத்தகைய நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். அது அவர்களின் ஆர்வம் விருப்பம் (வேறு ஏதேனும் ஆர்வம் இவர்களுக்கு இருந்திருந்தால் முனைவர் அவர்களுக்கு இந்த பிரச்சினை வந்திருக்காது)

சகோதரிகளின் திருமணத்தை, மழலை பேச்சை, மனைவியின் முத்தத்தை, உறவுகளின் மரணத்தை அதன் மீது எழும் ஒப்பாரியை  தொலைபேசியில் கேட்டு இன்ப துன்பமடையும் ஒ.அ.ஊ-களுக்கு அவர்களின் ஊர் பற்றிய நினைவுகள்தான் அதிகம் இருக்கும். அதன் மீதான எழுத்துகள்தான் அதீதமாக வரும்  (மேலும் கவிதை எழுதும் எல்லோரிடத்திலும் அகம் புறம் என்று எதிர்பார்ப்பது முனைவருக்கு நியாயமானதே)

அவர்களின் சிங்கப்பூர் பற்றிய துதியை பக்தி என்று மாற்றிச்சொல்லலாம். எத்தனை பேருக்கு இங்கிருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா என்று செல்ல வாய்ப்பு கிடைக்கிறது. அப்படி கிடைத்த வாய்ப்பால் தனது வாழ்வினை உறவுகளின் வாழ்வினை பொருளாதார அடிப்படையில் மேம்பட காரணமாக இருந்த சிங்கப்பூரை அவர்கள் புகழ்ந்து பாடுவதை உப்பிட்டவரை உள்ளளவு நினை என்றும் சொல்லலாம். (துதி பாடுவதால் அவர்களின் ஊதியத்தில் ஒரு வெள்ளி கூடியதாக எனக்கு தெரியவில்லை)

தங்கமுனை விருது பற்றிய விபரங்கள் பிழையானவையாக இருக்கின்றன. கவிமாலை இலக்கிய வகுப்பால் எனது எழுத்துப்பிழை சரியடைந்ததுபோல ( முனைவரின் கற்பனா சக்கதிக்கு அக்மார் வணக்கம்) ஞாபகசக்தி அதிகம் உள்ள புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்து பேசும் இராம.கண்ணபிரான் போன்றவர்களிடம் கேட்டுப்பெற்றிருப்பின் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

பெயர் காரணத்திற்கெல்லாம் முரணை கண்டுபிடித்திருப்பது முனைவர் அவர்களின் பலம் என்று நீங்கள் (வாசகர்கள்) நினைத்தால் அதுதான் முனைவர் அவர்களின் முரண் அடிப்படையிலான எல்லா முரண் விமர்சனத்திற்கும் கிடைத்த வெற்றி.

ஒரு புத்தகம் வெளியிடும் போது உறவுகளை வைத்து வெளியிடுவது தவறான செயல் என்று உங்கள் கருத்தின் வாயிலாக அறிந்துகொண்டேன்.

பீஷான் கலா, கோட்டை பிரபு, காளிமுத்து பாரத் என முனைவர் அலசி ஆராய்ந்து தேடி கண்டடைந்ததை முனைவர் அவர்களின் விமர்சனம் குறித்த அக்கறை என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். (நான் அப்படித்தான் எடுத்துக்கொண்டேன்)

கடந்த ஆறு ஏழு மாதங்களாக கவிமாலையில் இரவு உணவு (சுண்டக் காய்ச்சிய பாலுடன்) வழங்குவதை முனைவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருப்பின் குறிப்பிட்டிருப்பார். ஏன் என்றால் என் போன்று இரவு உணவிற்காக வரும் கவிஞர்கள் என்று 3 முதல் நான்கு நபர்களை அடையாளப்படுத்தலாம்.

முனைவர் அவர்கள் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் சிங்கப்பூரில் கவிதைகள் எழுதப்படவேண்டும் கவிதைத்துறை வளர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் எழுதப்பட்ட விமர்சனம் என்ற நோக்கில் வாசித்தால் (அடிக்கடி இதனை நினைத்து கொண்டே வாசித்தால்) வாசித்து முடித்தபின் ஆமாஞ்சாமி சொல்லத் தோன்றும்.

அப்படித்தான் இருக்கிறது கவிதை குறித்த, கவிதைக்கான சூழல் குறித்த, கவிஞர்களின் சூழல் குறித்த, கவிதை பிறப்பதற்கான சூழல் குறித்த முனைவர் அவர்களின் உயரிய தரிசனப் பார்வை. இதை நீங்கள் உயரிய விமர்சனமாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். கவிதை குறித்த காழ்ப்பு எல்லாம் முனைவர் அவர்களுக்கு கிடையாது என்பதை கட்டுரையை வாசித்து முடித்தவுடன் நீங்களும் அறிந்திருக்கலாம். வேறு ஏதோ காழ்ப்பு மட்டுமே முனைவரின் கட்டுரையில் தெரிவதாக நினைத்தால் அதை மறந்துவிட்டு கவிஞர்கள் முனைவர் அவர்களின் உச்ச பட்ச கவிதா விமர்சனத்தை அப்படியே ஏற்று உங்களை செழுமை படுத்திக்கொள்ளுங்கள். (இந்த விமர்சனக்கட்டுரை வாயிலாக மோ.கு பெற்ற அத்துனை கவிஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்)

2006 2007 ல் வெளிவந்த தொகுப்புகளை வைத்து நிறைய பேசியிருக்கிறீர்கள். இன்று (2010) வரை அவர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் அல்லது என்ன செய்திருக்கிறார்கள்? அன்று வந்ததே அதே நிலா இன்றும் அதே நிலாவாகத்தான் இருக்கிறார்களா என்றும் ஆராய்ந்து விமர்சித்திருப்பின் உங்களின் கட்டுரைக்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கும்.

நானும் நானும் கவிதை தொகுப்பு குறித்த உங்களின் வித்தியாசமான ரசனையை நானும் வித்தியாசமாகவே ரசித்தேன்.

உங்கள் கட்டுரையில் உள்ள எழுத்துப்பிழைகள் குறிப்பாக கவிஞர்களின் பெயர் பிழைகள் நீங்கள் சரியாக எழுதிக்கொடுத்து சரியாக தட்டச்சு செய்தபின் யூனிக்கோடு எழுத்துருவாக மாற்றும்போது பட்ட திரிபு என்றே நினைத்துக்கொண்டேன்.

கவித்துவ வறட்சினு குறிப்பிட்டிருந்திங்க – அதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக குறிப்பிட்டிருக்கலாம்

ஒரு வேளை தலைப்பு கொடுக்காமல் கவிதை எழுத சொன்னால் கவித்துவ வறட்சி மாறுமா என்று யோசிக்க சொன்னீர்கள் – இரு கவிதை அமைப்புகளும் யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.

அதே நேரத்தில் மாதத்திற்கு இரண்டு தலைப்புகளுக்கு (இரு கவிதை அமைப்புகளால்) கவிதை எழுதும் கவிஞர்கள் அவர்களின் பிற கவிதைகளுக்கும் யாரேனும் தலைப்பு கொடுக்க கவிதை எழுதுகிறார்களா என்று யோசிக்க வேண்டும் எத்தனை கவிஞர்கள் அங்கு தலைப்பிற்கு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

கவிதை அமைப்புகளில் கவிதை எழுதுவதற்கான பயிற்சியை யாரும் கொடுத்ததாக நான் சென்றவரை எனக்கு தெரியவில்லை. – இதுவும் இரு கவிதை அமைப்புகள் கவனிக்க வேண்டிய அம்சம் (என் நண்பன்  சொன்னான் பயிற்சி இருந்தா பக்கோடா கூட பண்ணலாம்னு)

கவிதை குறித்த, கவிதை வளர்ச்சி குறித்த உயரிய அக்கறை உள்ள நீங்கள் இன்னும் கூடுதல் அக்கறையுடன் இரு அமைப்பிற்கும் வருகை புரிந்து கவிதை பட்டறை வகுப்புகளை நடத்தலாம் (கண்டிப்பாக முதல் இருக்கையில் என்னை எதிர் பார்க்கலாம்)

என்னைப் பற்றிய குழப்பங்களை மதிப்பிட்டமைக்காகவும் எனது கவிதை குறித்த உங்களின் புரிதலுக்கும் மிக்க நன்றிகள்.

சுயநலக்காரர்களுக்கு சூனியம் வைக்க தமிழ் கவிதைமீது காதலுடைய உங்களைப் போன்றவர்கள்தான் கவிதையை காக்க சரியானவர்கள். மாதம் ஒரு கவிஞரின் கவிதைகள் என தமிழகத்தின் —–தா (பேரை சொன்னா நான் பட்டம் கொடுத்து விட்டதாக யாரேனும் பின்னொருநாள் ஞாபகப்படுத்தி பதிவிடலாம்) போன்று வல்லினம் இதழில் அடையாளப்படுத்தலாம். அப்போது சிங்கப்பூரின் சரியான கவிதையை சரியான கவிஞர்களை உலகத்து தமிழர்கள் அடையாளம் காண்பது எளிதாக அமையலாம்.

விமர்சனக் கட்டுiரையை படித்து முடித்தபோது நீங்கள் உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை- யும்,  நுணலும் தன் வாயால் கெடுவது போல என்பதும் சரியென்றே என் மனதிற்கு பட்டது.

வல்லினம் இதழ் மலினமான சர்ச்சைகளை முன்னிறுத்தி கூடுதல் வாசகர்களை சென்றடைய வேண்டிய அவசியம் இல்லை என்று தான் நேற்று வரை நினைத்திருந்தேன். இன்று இருப்பதால் அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன். (பூங்குழலி, மஹாத்மன் பா.சிவம் போன்றவர்களின் படைப்புகளுக்காக வாசிப்பு தொடரும்)

சிங்கப்பூர் கவிதைச் சூழல் 90க்கு பிறகு என்ற தங்களின் காத்திரமான விமர்சனத்தை படித்த பலரும் தாங்கள் நேற்று குடியேறி இன்று சிங்கப்பூர்வாசியாக (குடியுரிமை) மாறியதை தெரிவித்து இருந்தால் சிங்கப்பூர் இலக்கியம் சிங்கப்பூர் இலக்கிய வளர்ச்சியின் மேல் நீங்கள் கொண்டுள்ள உயரிய அக்கறையை பலரும் பாரட்டியிருப்பார்கள். அப்படி நீங்கள் நேற்று குடியேறி இன்று சிங்கப்பூர்வாசியானதை குறிப்பிடாததது நீங்கள் பாராட்டுக்களை விரும்பாதவர் என்பதையே காட்டுகிறது.

விமர்சனம் என்பது எழுத்தாளனை கவிஞனை உருவாக்க மறு உருவாக்கம் செய்யவேண்டும் இது முனைவர்-க்கான வரி கிடையாது அவர் அறிந்த ஒன்று என்பதால் மேற்சொன்ன வரிகள் கோ.பி கா.பா பீ.க நண்பர்களுக்கு.

விக்ரமாதித்யன் கருத்துப்படி நீங்கள் செய்த இந்த அருமையுடைய செயலை தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும் போது 2015 அல்லது 2020ற்கு பிறகான சிங்கப்பூர் கவிதைச் சூழல் என்று ஆய்வு செய்யும் போது விமர்சனம் செய்யும்போது மாற்றங்களுக்கு வித்திட்ட, மாற்றுக் கவிதைகளுக்கு உங்களின் பெயரை அடையாளப்படுத்தும் படியான கவிஞர்கள் சிலர் உருவாகலாம்.

ஆக அருமையுடைய செயலை தொடர்ச்சியாக செய்யுங்கள் அடியேனும் அவ்வப்போது எழுதும் கவிதைகள் குறித்து உங்களின் முரண் பார்வைகள் மூலமாகவும் ஆத்மார்த்தமான தேடல் மூலமாகவும் எனக்கான கவிதை வெளியை மேம்படுத்திக் கொள்கிறேன்.

பாண்டித்துரை

pandiidurai@yahoo.com

நன்றி: வல்லினம் 

 

 

 

17 thoughts on “நிராகரிக்கப்படவேண்டிய விமர்சனம் . (சிங்கப்பூரின் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு))

 1. சி.கருணாகரசு சொல்கிறார்:

  இன்னுமா ஓயல….

  நான் சொல்ல வேண்டியதை பல இடங்களில் சொல்லிட்டேன்.
  அவங்க கவிதை மீதுள்ள அக்கரையில் அந்த கட்டுரையை எழுதல.
  தன் பெயருக்கான அக்கரையில் எழுதியது . (அப்படித்தான் இனி எடுத்துக்கொள்ள வேண்டும்)

  உங்க பகிர்வு நேர்மையானது…..
  நன்றிங்க.

 2. சி.கருணாகரசு சொல்கிறார்:

  அந்த கட்டுரையில் வந்தேரி என்பது… ஏதோ கள்ளத்தோணியில் வந்ததை போன்ற தொணியில்தான் வெளிப்படுது.
  அதுதான் மிக வேதனையா இருக்குங்க பாண்டி.

 3. கலா சொல்கிறார்:

  கவிதை குறித்த, கவிதை வளர்ச்சி
  குறித்த உயரிய அக்கறை உள்ள
  நீங்கள் இன்னும் கூடுதல் அக்கறையுடன்
  இரு அமைப்பிற்கும் வருகை புரிந்து
  கவிதை பட்டறை வகுப்புகளை
  நடத்தலாம் (கண்டிப்பாக முதல்
  இருக்கையில் என்னை
  எதிர் பார்க்கலாம்)\\\\\\\\\\\\\\
  நானும் உங்களுடன்…
  உன்னிப்பாகக் கவனிக்க
  வேண்டுமல்லவா?

 4. Na.Vee.Sathiyamurthy சொல்கிறார்:

  Dear Paandi

  First of all thank you very much for this elaberated but reasonable review on that Lady Review. Her artcile is as you told nothing but zero in tamil says “KADAINTHEDUTHTHA ARAIVEKKATTU KATTURAI” So that our grandfa Mr.Thiruvalluvar says
  ” AZHUKKAARU AVAA VEKULI INNACHCHOL- IVAI NAANKUM
  MUZHUKKA KONDAVARIM MUNAIVAR”
  We call this lady, i think after read your comment, not munaivar she is a ‘PUNAIVAR’ Am I right?

  Thank you very much
  Na.Vee.Sathiyamurthy

 5. தினேஷ் சொல்கிறார்:

  Na.Vee.Sathiyamurthy

  ///munaivar she is a ‘PUNAIVAR’ Am I right? ///

  இங்க தான் சார் நிக்கிறிங்க

  எப்டி சார்

 6. தினேஷ் சொல்கிறார்:

  சார் என்ன சார் சூன்யம் வைக்கிற மாதிரி எழுத சொன்னா
  ‘சூ’ வைக்கிற மாதிரி எழுதியிருக்கிங்க

  ஆனnலும் ‘சூ’ சூப்பராத்தான் இருக்கு

 7. தினேஷ் சொல்கிறார்:

  சி.கருணாகரசு சார்

  உங்களை நேரில் பார்தத்தது இல்லை
  படத்தில் பாத்தா சும்மா ஜோக்கா சிரிச்சிக்கிட்டு இருக்கிங்க
  ஆனா எழுத்துழ பொங்கிறீங்க

  நீங்க

  நல்லவரா கெட்டவரா

 8. மானாஸாஜென் சொல்கிறார்:

  வல்லினம் இதழ் மீதான கோபத்தை குறைத்திருக்கலாம். சரியான விஷயங்களைத் தெளிவாகவே பதிந்திருக்கிறீர்கள்.

 9. பாண்டித்துரை சொல்கிறார்:

  //
  தினேஷ்
  சி.கருணாகரசு சார் உங்களை நேரில் பார்தத்தது இல்லை படத்தில் பாத்தா சும்மா ஜோக்கா சிரிச்சிக்கிட்டு இருக்கிங்க ஆனா எழுத்துழ பொங்கிறீங்க நீங்க நல்லவரா கெட்டவரா
  //

  பின்னூட்டமா போடுறியே, தம்பி யாராப்பா நீ.

  ஆதங்கப்படுறதுலேயே தெரியலையா அவரு ரொம்ப நல்லவருனு

 10. பாண்டித்துரை சொல்கிறார்:

  //
  மானாஸாஜென்
  வல்லினம் இதழ் மீதான கோபத்தை குறைத்திருக்கலாம். சரியான விஷயங்களைத் தெளிவாகவே பதிந்திருக்கிறீர்கள்.
  //
  நன்றி ரமேஷ் அண்ணா.

  வல்லினம் இதழ் மீது கோபம் கிடையாது. கட்டுரைகளை சரிபார்த்து வெளியிடத் தவறிவிட்டார்களே என்ன ஆதங்கம்தான் அவ்வளவே. ஆனாலும் இதழ் குழுவினர்களின் விருப்படியான கட்டுரைகளைதானே வெளியிடமுடியும்.

  உங்களுடைய கருத்தினனை வல்லினம் இதழ் வழியே காண காத்திருக்கிறேன்.

 11. பாண்டித்துரை சொல்கிறார்:

  ///
  From தினேஷ்
  சார் என்ன சார் சூன்யம் வைக்கிற மாதிரி எழுத சொன்னா ‘சூ’ வைக்கிற மாதிரி எழுதியிருக்கிங்க ஆனnலும் ‘சூ’ சூப்பராத்தான் இருக்கு
  ///

  அது என்னங்க சூ?

  சூப்பருனு சொன்னதுக்கு நன்றி.

 12. பாண்டித்துரை சொல்கிறார்:

  Na.Vee.Sathiyamurthy na

  கவிச்சோலையில் நீங்கள் படித்த கவிதையை கேட்கமுடியாத வருத்தம் இருக்கிறது. கவிமாலையில் நிவர்த்தி செய்துவிடுங்கள்.

  சத்யா சிரிச்சுக்கிட்டே இருப்பாராப்பா அவருக்குள்ளுமானு உங்க கவிதையை கேட்ட வாசகியோட கமெண்ட் na.

 13. பாண்டித்துரை சொல்கிறார்:

  ///
  சி.கருணாகரசு
  அந்த கட்டுரையில் வந்தேரி என்பது… ஏதோ கள்ளத்தோணியில் வந்ததை போன்ற தொணியில்தான் வெளிப்படுது.
  அதுதான் மிக வேதனையா இருக்குங்க பாண்டி.
  ///

  என்ன பண்ணுறது கருணாகரசு சிலர் சிரிக்கவேண்டும் என்றால் நாம் வேதனைபடத்தான் வேண்டும்(அவர்களுக்கு அப்போதுதான் சிரிப்பு வருகிறது).
  மௌனம் இதழில் வெளியான மசாலாதனமான விமர்சனத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். இதில் தகாத வார்த்தைகளும் சம்பந்தம் இல்லாத விசயங்களையும் இணைத்ததால்தான் இந்தப் பதிவே.

  அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்களை நேரக்கு நேர் பார்ப்போம் அல்லவா அப்போது அவர்கள் என்ன செய்யக்கூடும் என்று பார்ப்போம்.

 14. பாண்டித்துரை சொல்கிறார்:

  //
  சி.கருணாகரசு
  உங்க பகிர்வு நேர்மையானது…..
  //
  நீங்க நேர்மைனு சொல்லிட்டிங்க
  முனைவர் வந்து என்ன சொல்லப் போருங்கனு பார்ப்போம்
  என் மனதிற்கு பட்டதை எழுதினேன். அவ்வளவுதான்.
  இறங்கி எழுத விருப்பமில்லாததால் சிலவற்றை விட்டுவிட்டேன்

 15. அகரம் அமுதன் சொல்கிறார்:

  எனக்குக் கருத்துச் சொல்லத் தெரியவில்லை. இவைபோன்ற கட்டுரைகளும், மறுப்புக்களும் எனது ‘பா’ உலகிற்குத் தொடர்பில்லாதவை. மேலும் இது தொடர்பான உங்கள் அனைவரது கட்டுரைகளையும் படித்துப் பார்த்ததில் முனைவர் அளவிற்கு நீங்கள் யாரும் கருத்துக்களையும், மேற்கொள்களையும் முன்வைக்கவில்லை என்றே தோன்றுகின்றது.

  அவருக்கு (முனைவருக்கு) உங்களுடனான காழ்ப்புணர்வு உண்டு என்று உணர்த்துகின்றன. அது முனைவரின் கட்டுரையைப் படித்தவுடனேயே உணர முடிகிறது.

  அண்ணன் பாலு அவர்கள் நல்லபல கேள்வி அம்புகளைத் தொடுத்துள்ளார். ஆனால் கேள்விகளே சொற்போராகி விடாது.

  உங்கள் கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது. முனைவரும் குடியேறியே என்பதை போகிற போக்கில் அழகுபட, இளகுவாக குறிப்பிட்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  எனக்கென்ன வருத்தம் என்றால் உங்கள் அனைவரது கட்டுரையும் அதிலடியாக உள்ளனவே அன்றி அவரை (முனைவர்) சொற்போருக்கு அழைப்பனவாக அமைய வில்லை.

 16. ஜெயந்தி சங்கர் சொல்கிறார்:

  ஒரு படைப்பைக் குறித்துச் சொல்லும் போது படைப்பாளியை மறந்து விட்டு அந்தப் படைப்பை மட்டும் வாசித்து ருசித்து விமரிசிக்கும் அழகிய அரிய நுண்கலையைக் கற்க இன்னும் நீண்ட காலமெடுக்கும். புரிந்து கொள்ளக் கூடியதே. போகட்டும். அட, ஒரு படைப்பைக் குறித்துப் பேசும் போது காசு/வெள்ளிக் கணக்கை எடுக்கிற ஒருவர் எப்படி இலக்கிய விமரிசகராவார்? அதுவும் மிகச் சொற்பத் தொகையை? தமிழ் மொழியின் மீதான பற்றினாலும் நட்பு வட்டத்தை விரிவு படுத்திக் கொள்ளும் ஆரோக்கியமான இயல்பான விழைவினாலும் தான் கவிச்சோலையிலும் கவிமாலையிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள் வெளிநாட்டு ஊழியர்களான பல இளைஞர்கள். பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளுக்கிடையில் தான் அதற்கான நேரத்தை அவர்கள் ஒதுக்குகிறார்கள். இன்னும் சொல்லப் போனால், அவர்களில் பலர் அங்கே போவதற்காக வேலையில் கிடைக்கும் ஊதியத்தைக்கூட இழக்கத் தயாராகிறார்கள் என்றறிகிறேன். அதுமட்டுமில்லாமல், தம் பங்குக்கு சில செலவுகளைச் செய்கிறார்கள். விவரங்களைக் கேட்ட போது அவர்களுடைய பொருளாதார நிலைக்கு அதெல்லாம் மிக அதிகம் என்றே எனக்குப் பட்டது. இவ்வமைப்புகளின் செயல்பாடுகளிலோ அல்லது வழிமுறைகளிலோ அவர்களில் சிலருக்கேனும் சில விமரிசனங்கள் இருக்கக்கூடும். ஆனாலும், ஆர்வம் தான் அவர்களைத் தொடர்ந்து செலுத்தியபடி இருக்கிறது. கவிதை எழுதுதல் குறித்தும் அதிலுள்ள சிக்கல்கள் குறித்தும் நல்ல கவிதையை இனம் காணவும் மேம்படுத்த வேண்டிய கவிதையைப் பிரித்தரியவும் இவ்விளைஞர்களில் ஒரு சிலருக்கேனும் இதைவிட மிகச் சிறப்பாகத் தெரிந்திருக்கும் என்பதே என் அனுமானம். ஏனெனில், கவிமாலையிலும் கவிச்சோலையிலும் இவர்கள் தொடர்ந்து பல்வேறு வகையிலான கவிதைகளுடன் பழகுகிறார்கள். ஒருவரும் குரல் விடுவதில்லை என்பதால் அவர்கள் எல்லோரும் எந்தத் திறனுமற்றவர்கள் என்று முடிவெடுப்பது எத்தனை அபத்தம்! குரலை உயர்த்தி விட்டால் தனக்கு எல்லாமே தெரிந்ததாகக் கருதி விடுவார்கள் என்ற மாயையில் உழலும் யாருக்கும் இப்படித் தானே எழுத/பேச முடியும்? அத்துடன் கூடவே தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சிறியதும் பெரியதுமான வயிற்றெரிச்சல்கள் வேறு, கேட்கவும் வேண்டுமா? வேலைக்கென்று நாடு விட்டு நாடு போவதெல்லாம் இந்த யுகத்தில் மிகச் சர்வ சாதாரணம். ஒருவர் ஊரைவிட்டுப் போனால், உடனே அவர் பொருளாதாரத்தின் உச்சியை எட்டிவிட்டதால் போய்விட்டார் என்பதெல்லாம் சிறுபிள்ளைத் தனமான கணக்குகள். வெறும் செவிவழிச் செய்திகளையெல்லாம் (அல்லது, கனவில் கண்டவையோ?) போட்டு கட்டுரையைத் தாளிப்பது பொறுப்பற்ற போக்கு. ஒரு விமரிசகரில் அதை எப்படித் தான் ஏற்பது? பாலர் பள்ளியில் பயிலும் குழந்தை கூட ஆப்பிளைக் குறித்துப் பேசும் போது தொடர்பில்லாமல் ஆரஞ்சுப் பழத்தின் நிறம் orange என்று கண்டிப்பாக எழுதாது. ஏனெனில், It’s redundant என்று உணரவும் சொல்லவும் தெரியும் அக் குழந்தைகளுக்கு. சரி, இப்டி ஒரு கட்டுரை வந்ததும் கூட மிக நல்லாதாப் போயிற்று. கட்டுரையாளர் குறித்து மேலும் தெளிவாக அறியவும் எமது சிந்தனைகள் விரியவும் நாம் எல்லாரும் இவ்வாறு கருத்துகளைப் பகிரவும் ஏதுவாயிற்று. இல்லையா? ஆகவே, கட்டுரையாளருக்கு நன்றிகள் சொல்வோம். எனக்கு எப்போதுமே தோன்றுவது தான் இப்போதும் மனதில் ஓடுகிறது. நல்ல விமரிசகர்கள் உருவாக வேண்டிய தேவை இருக்கிறது. அதைக் குறித்து நாம் எல்லோருமே சிந்திப்போமா?

 17. செல்வ‌ராஜ் சொல்கிறார்:

  விமர்ச‌ன‌ புளிங்க‌ள‌ மன்னிக‌வும் புலிங்க‌ள‌ சீண்டாதிங்க‌ பாண்டி
  ஆப்த்தாயிடும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s